| Site menu |
|
 |
| Statistics |
Total online: 1 Guests: 1 Users: 0 |
 |
|
உன்னைப் பார்த்து நீண்ட....
உன்னைப்
பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டது.உனது குரலில் அன்பை அனுபவிக்கஏங்கித்
தவிக்கிறது மனம்.பாசம் நிறைந்த உன் பார்வைக்குள் நனையும்நாளின்
நினைவுகளில் கழிகிறதென் நிகழ்காலம்.கால நீட்சியில் உனது கோலத்தில்எழில்
கூடியிருக்கும் என்றுநினைக்கிறேன்இத்தனை காலப் பிரிவினால் நீயும்என்னைப்
போலவே தவித்தபடி இருக்கலாம்.நேரில் பேச வேண்டிய செய்திகளைசுமக்கின்ற
எங்களின் மனங்களில் சுமைகளைமாற்றிக் கொள்கின்ற நாளின்
வருகையைஎதிர்பார்க்கின்ற கணங்களில் அழிவுகள்வருடங்களாக நகர்கின்ற
பொழுதிலும்தொடர்கிறது உனக்கான எனது காத்திருப்பு.பேசிக்கொள்ள நேரமற்ற
விதமாய்உணர்வுமிக்க பொழுதொன்றில் சந்திக்கனும்உனது கனிவான பார்வையே
போதும்இன்னும் ஆயிரம் ஆண்டுகள் காத்திருக்கஉன்னைப் பற்றிய கனவுகளில்
வாழ்வதால்வாழ்க்கையை இனிமை நிறைந்ததாய் உணர்கிறேன்
|
|
| Login form |
|
|
 |
| Search |
|
 |
| Calendar |
|
 |
Guest Register
|
|
 |
|