1.
எதிரெதிரே அமர்ந்து
ஒருவர் கண்ணுக்குள்
மற்றவர்
உற்று நோக்குவதல்ல.
அருகருகே அமர்ந்து
தொலைதூரத்திலுள்ள
இலக்கை
இணைந்து நோக்குவதே
காதல்.
2.
சொற்களில்
புதைந்த காதலை
தேடச் சொல்லி
கவிதை தருவேன்.
வழக்கம்போல
இன்றும்
எனக்குத்
தோல்வி தான்.
நீ
காதலைக் காட்டி
சொற்களை
தேடச் சொல்வாய்.