நன்றி நன்றி என்றுமே நன்றி
சிவராத்திரி தினமென்று
சிவன்கதையைக் கூறியிந்தப்
புவனத்திலே சைவர்கள்
விழித்திருக்கும் வேளையிலே
தவமெதுவென்று தமிழர்கள்
நெஞ்சமதை விழிக்கவைத்த
உவமையில்லா உங்கள்
தொண்டுக்கு நன்றிநன்றி
காதலென்றும் கூதலென்றும்
சிலர்பேதலிக்கும் இந்நாளில்- மனம்
பேதலித்துநின்ற சிறுபையனுக்கு
வாழ்வுகொடுத்த உங்களது-மானிடக்
காதலினை கண்ணியத்தை
கடமைஉணர்வினை மனிதநேயத்தினையோர்
சாதனையாய் சமூகசீர்திருத்தமாய்
போற்றியே வாழ்த்துகிறேன்
மனிதநேயத்தை போதித்த மனங்களில்
சாதலென்றால் எதுவென்ற நிலைவரை சென்று திரும்பி
மனம் பேதலித்துநின்ற சிறுபையனுக்கு
வாழ்வுகொடுத்த உங்களுக்கு
கோடி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்
ஊடகத்தின் கடமைகளில்
இதுவும் ஒன்றென்று இவ்வுலக
மானிடர்க்குரைத்த தமிழ்வின் லங்காசிறி ஊடகங்களே!-
நல்மனங்கள் தேடும் நற்செயல்கள் இதுபோல
பலசெய்து வாடும்பயிருக்கு நீராகி
நாடும் உமைநாடுவோரும் போற்றிட
வெற்றி பலகண்டிட வாழ்த்துகிறேன்
பதினைந்து மணிநேரத்திலே
போதும் போதுமென கூறும்வகையில்
சாதனையாய் அமைந்த உங்கள்செயல்
சரித்திரமாய்பதிவுபெற மதியூகத்துடன்
ஒழிவுமறைவின்றி நிறைவாகி ஒளிபெற்றிடவே
புதியதோர் உலகம் புலரும் நிலையாகிடவே வாழ்த்துகிறேன்
கவிவன்
நெதர்லாந்து