[ வெள்ளிக்கிழமை, 05 பெப்ரவரி 2010, 01:59.14 பி.ப GMT ]
புளுட்டோ கிரகம் பிரகாசமாக மாறி வருவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான `நாசா' தெரிவித்துள்ளது.புளுட்டோ
கிரகம், சூரியனை கடந்த 248 ஆண்டுகளாக சுற்றி வருகிறது.இந்நிலையில், அது
பிரகாசமாக மாறி வருவதாக தெரிவித்துள்ள 'நாசா', விண்வெளியில் சுற்றி வரும்
ஹப்பிள் டெலஸ்கோப் எடுத்த படங்களின் அடிப்படையிலேயே இக்கருத்தை
வெளியிடுவதாக கூறியுள்ளது.
இதற்கு
முன்பு கடந்த 1994 ஆம் ஆண்டு, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் எடுத்த அனுப்பிய
படங்களைவிட தற்போது எடுக்கப்பட்டுள்ள படத்தில் புளுட்டோவின் மேற்பரப்பு
மிக தெளிவாகவும் பிரகாசமாகவும் இருப்பதாக `நாசா'தெரிவித்துள்ளது.
புளுட்டோ
கிரகத்தில், சூரிய ஒளி படும் துருவத்தின் மேற்பரப்பில் உள்ள பனிக்கட்டி
உருகுவதாலும், அதன் எதிர் துருவம் உறைவதாலும் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதாக
அது மேலும் கூறியுள்ளது.