மண்ணிலே மாதவன்
வங்கத்தின் நீழ் அலை தாலாட்டும்
எம தீழ ஏகாந்த புரியே
எம்மின விடிவு என்று தணியுமோ
என்றுதானே இமை மூடாமல்
விழித்திருக்கின்றாய் நீயும்
தென்றலுக்கும் வேர்க்கிறது இங்கே
சிங்களத்து ஆதிக்க நரிகளினால்
எங்கள் வாழ்வு
சூனிய சிறைக்குள் மாழ்வதாலே
விண்ணுலா போகின்ற ஆதவனும்
ஓரக் கண் கொண்டுதானே
பாக்கின்றான் எம்மை
ஒளி இருந்தும் விழி இருந்தும்
புலன்கள் அடைக்கப்பட்ட பிணங்களாய்
சாவுக்குள் ஜனனிக்கின்றோம்
எத்தனை ஜென்மம் எடுத்தோம் என்பதை
படைத்தவன் கூட பார்த்ததில்லை
கார்த்திகைத் திங்கள் ஒன்று - எம்
மண்ணுக்கொரு மாதவனை தந்ததால்
காண்டீபம் ஏந்திய இவன் அணி நின்று
ஊசி முனை நில உரிமையும் இன்றியே
உரிமை போர் செய்கின்றோம்
புயபலம் அற்ற பகைவனோ
பயம் தனில் ஒடுங்கி நியம் தனை ஒளித்து
பிரிவினையாளர் என்றே ஓதும் மந்திரம் ஓத
வேதம் எனக்கொண்ட வல்லாதிக்கரே
கயவரோடு கள்வராய்
இருபது தேசத்தோர் இணைந்து
முள்ளி வாய்க்காலே இறுதிப் போர் என்று
மலையளவு நிராயுதபாணியரை கொன்று
அகழியில் பிணங்களை மறைத்து
மறவர் படை கலைத்து மெளனித்து நிக்கின்றீர்
சிறுபாண்மை இனம் இன்று சிறையில் துடிக்கிறது
உயிர் இல்லா உடலோடு மயானத்தில் கிடக்கிறது
அடிவானம் உடைந்து அஸ்தமனத்தை கலைத்தாலும்
விடியாத புலர்வுக்குள்ளேதான் எம் வாழ்வு கரைகிறது
பகைவரோ டுணைந்து வினைப்போர் கொண்ட
தூயவான்களே - மனம் உண்டேல் மார்க்கம் உண்டு
சுய வாழ்வு சுய உரிமை சுய நிர்ணையம் பெற்று
சம உரிமை யோடெம்மை வாழ வையுங்கள்
அல்லேல் வழி விடுங்கள்
ஈழச் சக்கரம் சுழல்கிறது
மாவீரர் கனவுகள் அழைக்கிறது
நீண்டும் களத்தையும் ஆடியே களிப்போம்
ரெத்தக் குளத்தையும் மூடியே விதைப்போம்
சுதந்திரத் தமிழீழமே எங்கள் தாகம்.
வல்வை சுஜேன்.