தமிழனாய் தலை நிமிர்வோம்.
தன்மானம் தமிழ்மானம் உள்ளவனாய்
தரணியிலே தலைநிமிர்ந்து வாழ்பவனாய்
அன்னையவள் கண்ணீர் துடைப்பவனாய்
அவள்வாழ அரசொன்று அமைப்பவனாய்
மண்ணினிலே எவன்வாழ்வான்? அவனே தமிழன்.
எத்தனை ஒப்பந்தம் எழுதிக்கிழித்தோமென்னும் நினைவுடனே
என்னென்ன துன்பம் பட்டோமென்றும்- எத்தனைகாலம்
என்னென்ன வகையில்ஏமாந்தோம் இழந்துபோனோமென்றும்
என்றும் எதையும் மறவா நினைவுடனே எவரிடத்திலேயும்
இனியும் ஏமாரும் நினைவுமின்றி செயலுமின்றி எதிலும்
விழிப்புடனே வாழ்பவனே விழியுள்ள தமிழன்.
கண்ணிருந்தும் குருடனாய் காதிருந்தும் செவிடனாய்
வாயிருந்தும் ஊமையாய் வாழ்வதிலே என்னலாபம் ?
மண்ணில்வாழும் காலத்தில் மானமின்றி வாழ்வதிலே
அந்தவாழ்விலே என்னபலன்தான் உண்டு உலகத்திலே.
தமிழன் என்றால் முதுகெலுப்பு வேண்டாமோ? -தமிழ்வழ
தரணியிலே அரசொன்று வேண்டாமா? சிந்தியுங்கள்.
அடுத்தவன் முதுகிலே குதிரைஓட்டும் சில அங்கிடுதெத்தி
அரசியல் வாதிகளை நம்பிடுவதோ தமிழன் இனியும்?
எதிரிமுன் குனிபவனையெல்லாம் இனித்தமிழன் என்பதோ?
தராசுபோல் தத்தளிக்கும் வாழ்வாகி தரணியிலே அரசின்றி
தவிப்பவனாய் ஈழத்தமிழன் வாழலாமா இனியும்?
கவிவன்