பொங்கியெழுவோம்………
பொங்கியெழு தமிழா-நீயொரு
மங்காப்புகழ் கொண்ட மானமறவன்.
தங்கி நிற்கும் தாடகர்; நம் மண்ணை விட்டு
தாண்டி ஓடட்டும்.
நஞ்சுமாலை கழுத்தணிந்து-நம்முன்னே
வெஞ்சமராடி வித்தாய் வீழ்ந்த
அஞ்சா நெஞ்சர்களின் ஆசை நிறைவேற
அழித்தொழிப்போம் அரக்கர்களை.
தானைத்தலைவன் வழிவந்த தமிழன்-எந்த
சேனைப்படைக்கும் அஞ்சான்.
வானைப் பிளக்கும் மான ஒலி-அதில்
காணப்போறோம் தன்மான வலி.
நகுலன் சாளினி
லண்டன்.