உன்னை சந்திக்கும் நாள்வரை...!
காதல் நீ இன்று தூரம்
நான் இந்த நேரம்
நிலவொடு நள் இரவொடு
தூது விட்டேன் தென்றலை
தென்றலும் தீண்டாத
தென் மதுரை சீமையாளே
தெவிட்டாத தேன் தமிழில்
நீ பேசியது என் செவியோரம்
ரீங்காரம் பாடுது
தூய மனம் கொண்டவளே
தூய காதலியே
உன் இதழ் தந்த இனிப்பாலே
என் மனம் கொண்ட மகிழ்வாலே
வரைந்தேன் இம்மடலை
நள் இரவினிலே
நான் கண்காணா தேசம்
சென்றாலும் என் கண்முண்ணே
தோன்றும் பெண்ணே
என்னைக்காணாமல்
ஒரு சுற்று இளைத்து விட்டாயோ?
இளையவளே என் இதயத்தை
பகிர்ந்து கொண்டவளே
பேனாவை வெண்தாளில் பதித்தால்
தெரியவில்லையடி எழுத்துக்கள்
தெரிகிறதடி உன் சிரிப்பொலியின் முத்துக்கள்
என்று வரும் உன்னை சந்திக்கும் நாள்
அன்றுவரை சந்திக்கும் இந்த தாள்
சாந்தகுமார்