நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!
எனக்காகப் பிறந்தவள் நீயென்று
என்னைத் தந்தவளையும் தவிக்கவிட்டு
உனக்காக காத்திருந்து தவித்து நின்றேன்!!
உன் அன்பைப் பெறுவதற்காய் சில ஆண்டுகள்
உன்னருகே என் உலகம் சுற்றியது
காதலியாய் நீ கிடைத்தாய் தவமிருந்து!!
காத்திருந்து நீ கிடைத்ததால் அன்பானவளே உன்னோடு
காலமெல்லாம் வாழ்ந்திடவே எண்ணியிருந்தேன்
காரணமேதுமின்றி பிரித்தது போர் என்னும் அரக்கன்!!
காத்திருந்து பாத்திருந்தேன் பல ஆண்டுகள்
காணவில்லை நான் உன்னை இன்றுவரை காதலியே
பழகிய நாட்கள் எண்ணி காதல் விழுதாகிவிட்டதடி!!
உன்னோடு சேர்ந்திருந்தால் இன்றிருக்கும் காதல்
கிடைத்திருக்காது எப்பிறவியிலும் எனதன்பே
நீ தந்த காதல் இனிக்கிறது இன்றும்..!!
உன்னோடு சேர நான் எண்ணவில்லை காரணம்
நீ என்மனதில் வாழ்ந்திருப்பதால் என் அன்பே
நீ தந்த காதல் ஒன்றே போதும் ஏழுஜென்மத்துக்கும்!!
இந்த காதலர் தினத்தில் உனை எண்ணியே
வரைந்தேன் கவிதை உனக்கு எழுதிய மடலாய்
கண்டிப்பாய் நீ படிப்பாய் நான் எழுதியது என்று தெரியாமலே!!
எஸ். கவிப்பிரியன்.