காதல் நினைவுகள் !!!
சிறு வயது முதலே உன்னை பார்த்து
நானும்என்னை பார்த்து நீயும்
ஏட்டிக்கு போட்டியாய் எடுத்ததெல்லாம்
செய்வோமே நினைவிருகிறதா ?
நண்பியே..காலத்தின் சுழற்சியாலும்
நம் பருவத்தின் வளர்ச்சியாலும்
பிறரால் பிரிக்க பட்டோமே
நினைவிருக்கிறதா?
பிரிந்த பின் நானும் அன்று முதல்
நீயும் அறியாமல் காதல்
கொண்டோமே
நினைவிருக்கிறதா ?.
உணர்வுகள் உருவான போதும்
உருவங்கள் மாறுபட்ட போதும்
நம் மனது மட்டும் மாறவில்லை
என் மறைவாய் சந்திக்கையில்
மகிழ்வாய் சொன்னாயே
நினைவிருக்கிறதா?
இனபிரச்சனையால் உடமைகளை எல்லாம்
இழந்து விட்டு அகதியாய்
வாழ்ந்த போதும் ...நினைவுகளால்
இணைந்திருந்தோமே நீட்சியாய்
நினைவிருக்கிறதா?
மீள குடியமர்ந்த பின்னரும் ..மீட்சி
பெறாமலே போக இருந்த.
நம் காதலை மீள புதுபித்து கொண்டோமே
நினைவிருக்கிறதா?
பெண்ணே ஏழ்மையில் சிக்கிய என்
குடும்பததை மேன்மைக்கு
கொண்டுவர முழுவதுமாய்
உன்னை விட்டு வெளிநாடு
செல்ல முடிவெடுத்த என்னை பார்த்து
உன் முட்டை கண்களாலே முறைத்து
அழுதாய் நினைவிருக்கிறதா?
இங்கு வந்தும் என்னைமறந்து
உன்னை நினைத்தே உருகிப்போன
கதை சொன்னேனே
அதாவது நினைவிருகிறதா?
நம்பி நின்ற என் மனதை உன்
நயவஞ்சகத்தால் நசுக்கி
விட்டாயே... உன் மணகோலத்தில்.
இதாவது நினைவிருக்கிறதா ?
கோபத்தில் என் குருதி கொப்பளித்தாலும்
கொஞ்ச நேரத்தில் எப்படி
இருந்தாலும்..நீ நன்றாக வாழு
என வாழ்த்திவிட்டு வந்தேனே
நினைவிருக்கிறதா?
அட போடா முட்டாளே ..ஏமாற்றியவள்
எப்படி நினைத்திருப்பாள் உன்னை என்று
என் மனமே என் உண்மை காதலை
உன்னால் கொச்சையாக ஏசுவதை
என்றாவது நீ அறிந்திருபாயா ?
மதி