எங்கே காதல்
கண்களுக்கு!
அன்பும் பண்பும்
பாசமும் பரிவும்
தென்படுவதே. . .
"காதல்".
கண்களுக்கு!
உடையும் உயரமும்
நிறமும் நிர்வாணமும்
தென்படுவது. . .
"ஊதியம் இல்லாத விபச்சாரம்"
மாசோலஸ் மன்னன்
ஆர்டிமிசியா அரசி
போன்ற காதலர்களுக்கு
வெலண்டைன் தினம்
கொண்டாடுவது!
தேசிய கடமைகளில்
ஒன்றே.
நாணல் ஜோடிகளுக்கு
அல்ல!
காலையிலே
பூச்செண்டு
கொடுத்து
காதலர் தினம்.
இரு பூக்கள்
வாசம்
உறவு கொள்ளும்
நேரத்தினுள்ளே
இவர்களது காமம்
முடிந்து போகிறது
காதலோ?
பூக்கள் வாடும் முன்னே
முறிந்தும் போகிறது.
ஆண் மனதின் கதவு தட்டாத
பல பெண்களுக்கும்
பெண் மார்பு வரை
நிறுத்தி கொண்ட
பல ஆண்களுக்கும்
இந்த கவிதைக்கதைகள்
ஒரு பாடம்.
கி பி 14-15
காலமது...
கரியை என்ற
இன்றைய துருக்கி நாடு.
வளாமாய் ஆண்டு வந்த
மன்னன் மாசோலஸ்
ஆர்டிமிசியா அரசியை காண்கிறான்
ஓருவர் சொல்லி
ஒருவர் எற்பது போல் இல்லாமல்
இருவரும் இணைந்தார்கள்
ஒரு மனதாய். . .
காதலில் காமமும்
காமத்தில் பரிசமும்!
ஒரு மனதாய்
எப்போதும்!
விட்டு கொடுப்பதே
வாழ்க்கையாய்!
வாழ்ந்தனர் அன்றிலாய்.
யார் கண் பட்டதோ?
காலம் விரைவாக
மாசோலஸை பிரித்து விட்டது
அரசன் கட்டளைக்கு
இணங்கி
அரசி ஆட்சி பீடத்தில்
அமர்கிறாள்.
நாயகன் நினைவால்
நாட்களை நடத்தினாள்
தன் நாயகனுக்காக
கல்லறையில்
நினைவு சின்னம் அமைக்க
பணி துவங்குகிறாள்.
பல நாடுகள்
பயணித்து
சிறந்த சிற்பிகளை
பணி அமர்த்துகிறாள்.
ஆண்டுகள் பல கடந்து
சிற்பம் போல்
தங்களது காதல் சின்னம்
நினைவானதை காண்கிறாள்
இடி விழுந்த
இதயத்தில்
ஈட்டி வந்துழைத்தது போல்
அரசி எதிரிகள்
ஆட்சி கவர்கிறார்கள்
அரசியின் காதல் சின்னம்
அழித்தே வெற்றி முரசிட
முயன்றவர்கள்!
இவளது காதல்
ஆழத்தால்
சில சேதாரத்தோடு
காதல் சின்னத்தை
சிதைக்காமல் சென்றனர்.
அடுத்து வந்த
எதிரி
ஆட்சி கவர்கிறான்
அரசியையும் கவர்கிறான்
மன்னன் மாசோலஸ்
அணிந்த உடை எடுத்தாள்
முத்தமிட்டாள்
முகம் துடைத்தாள்
இரு தேகம்
இணைந்தது போல்
உதடுகளின் ஈரமும்
கண்களின் ஈரமும்
கலந்தது.
அவள் அறிந்திருந்தாள்
இதுவே கடைசி தினம்
மண்ணில் அவளென்று!
ஆட்சி கவர்ந்த
அவன் வரும் முன்னே
ஆர்டிமிசியா சேர்ந்தாள்
மாசோலஸ் கல்லறையில். .
அவள் எழுப்பிவைத்த
காதல் சின்னம்
அவளையும் சேர்த்து கொண்டது
தன் காதலனை
சேர்ந்த இன்பமும்
வெகு நேரம் நீடிக்கவில்லை
ஆட்சி கவர்ந்த மன்னன்
அதை இடிக்க
கட்டளை இட்டான்
இன்றைய நாளில்
அங்கே நாம் காணலாம்
சில தூண்கள் மட்டும்.
விஜி ரத்தினம்
சென்னை