காதல் என்பது...........
அன்பின் மறு வடிவம் காதல்.
ஆனாலும் அது பெரும் வாதை.
தேனாய் இனிக்கும்
தெம்பாங்கு பாடும்,
தௌ;ளு தமிழால்
கவிதை பாடும்,
வல்லவனாக்கும்,
நல்லவனாக்கும்,
உலகை உன்னதமாக்கும்,
நரகம் தெரிவதில்லை.
சொர்க்கத்துக்கு நிரந்தர
மல்ட்டி வீசா
தந்து மருட்டும்.
வெந்து போகு மட்டும்
நினைவில் வந்து
வந்து சிந்தைக்கு
களிப்பூட்டும்.
கை இருப்புக் கலைய
கை இடுக்கில் நின்றவள்
காணாமல் போய் விடும்
அற்புத அவலம் நிகழும்.
காதலர் வாழ்வை
வசந்த மாக்கிட
விழநை;த விற்பினிகள்
வலியவே வளைந்ததை
மலிவாய் ப்பார்த்து
நம்பிக்கை கயிறறுக்கும்
கைங்கரியவித்தைகள்
களை கட்ட
தம்பி மார்க்கு
சுவை மாறும்.
தேன் புளிக்கும்
துமிழ் பிழைக்கும்.
கவிதை கசங்கிக்
கண்ணீர் வடிக்கும்.
காவியம் புதுக்கதை சொல்லும்.
சொர்க்கம் நாடு கடத்தும்.
நரகம் கதவுகள் திறக்கும்.
வல்லவன் வலது குறைவான்.
நல்லவன் பொல்லாதவனாவான்.
கரும்பு இரும்பாகும்.
நரம்பு புடைக்கும்.
வாழ்வு துரும்பாகும்.
முனிதம் மரிக்கும்.
மாணம் விருந்துக்கு
அழைப்பு விடுக்கும்.
காதல் என்பது
சாதலின் தொடக்கம்,
காதலர் தினம்
அந்திரட்டி தினம்.
புரிதலுடன் ரி.தயாநிதி.