பிரியமுடன் காதல் செய்வோம்.
காதலை நினைவு கூர்வதற்காய்
காதலர் தினம் மலர்ந்ததே
இந்நாளில்
சொல்லாத காதலும்
சொல்லிடுமே
பேசாத கண்களும்
பேசிடுமே
வெல்லாத காதலும்
வெற்றி பெறுமே
வார்த்தைகளை கோர்த்து
வாழ்க்கையினை தொடங்கிடுமே
காதல் செய்யும் பூக்களை
காற்றாகி வருடியவர்
காதலரே !
காதலெனும் புத்தகத்தை
கனவுக்குள்ளும் வைத்து படிப்பவர்
காதலரே !
காதலெனும் தெருவினிலே
கண்களால் அரட்டை அடிப்பவர்
காதலரே !
காதலெனும் பள்ளியிலே
கவிதை நயம் கற்பவர்
காதலரே !
காதலெனும் போர்களத்தில்-தன்னுயிரை
காதலுக்காய் தியாகம் செய்தவர்
காதலரே !
காதல் காற்றை சுவாசிக்கும்
காதலரே ! - இந்த
காதல் தேசம் உங்களுக்காய்
சுற்றட்டுமே
காதல் இல்லாத தேசத்தில்
மானிடம் இல்லையடா
காதல் செய்யாத மானிடத்தில்
உணர்வுகள் இல்லையடா
உணர்வில்லாத மானிடம்
மனித வர்க்கம் அல்ல.
காதலுலகை இறைவன்
படைத்துவிட்டான்
நாம் வாழும் வரைக்கும்
பிரியமுடன் காதல்
செய்வோம்.
காதலுடன்
உடுவையூர் த.தர்ஷன்
பிரான்ஸ்.