தாஜ்மகாலின் சோகம்
தாஜ்மகாலே
காதலித்து கரம் பிடித்தவர்களுக்கு
நீ ஓர் ஆலயம்
காதல் தெய்வமும் உன்னில்தான்
காதலித்து தோற்று போனவற்களுக்கு
நீ ஓர் கல்லறை காதல் கல்லறைதான்
தோற்று போன காதல் துயிலுவதும் உன்னில்தான்
நீ இருக்கும் புனித தளத்துக்கு வந்தவர்களில்
எத்தனை பேரின் கண்ணீர் துளிகளை கண்டிருப்பாய்
அத்தனை கண்ணீர் துளிக்கும் காரணம்
இந்த காதல் தோல்வியே - அதன் வேதனையே
உன்னை உருவாக்கியவன்
தன் காதலை நேசித்தது எந்தளவு - அதை
நீ எடுத்துக் காட்டுகிறாய் இந்த உலகிற்கு
உன்னை உருவாக்கிய ஷாஜகானை
நான் கண்டதில்லை - ஆனால்
அவர் விட்ட கண்ணீரை நீ கண்டிருப்பாய்
காதலி மீது கொண்ட நேசத்தையும் நீ அறிந்திருப்பாய்
மும்தாஜ் ஷாஜகானை தன் உயிர் போகும் வரை
நேசித்தாள்
நான் இறக்கும் வரை
என் காதலியை நேசிக்கின்றேன்
என் காதலியோ என்னைவிட்டு
தன் வழியில் சென்று விட்டாள்
தாஜ்மகாலே
நீ இருக்கும் இடத்தில் என் பாதம் பட்டதில்லை
என் கண்ணீர் துளியையும் நீ காணவில்லை - ஆனால்
உன்னை கண்முன் நிறுத்தி கவிதை எழுதுகிறேன்
என் கண்ணீரையும் கவிதையில் கலந்து
உன்னை கண்டு உலகமே மகிழ்கிறது
நீ ஓர் உலக அதிசயம் என்று - ஆனால்
உன்னில் இருப்பது காதலின் வேதனை - அது
என்னை போன்ற காதல் தோல்வி அடைந்தவர்களுக்கு தெரியும்
உன்னில் இருப்பது காதலின் வேதனை என்று
உன்னை சுற்றி எத்தனை மலர்கள் வாசனை வீசுகிறது
காதல் உறவை தேடி
எத்தனை ஜோடி உன் கண்முன் திரிகின்றது
அத்தனை ஜோடிக்கும் உன் நிலைமை தெரிவதில்லை
தெரிந்தால் இங்கு காதல் தோல்வி இல்லை
ஷாஜகான் உயிராக நேசித்தான் மும்தாஜ்யை
மும்தாஜ் உயிராக நேசித்தாள் ஷாஜகானை
அதனால்தான் அவர்கள் காதல் வாழ்கிறது
தாஜ்மகாலே அது உன்னில் தான் வாழ்கிறது
காதலிக்க முன்பு உன் புதுமை எனக்கு தெரியவில்லை
காதலித்த பின்பு உன் பெருமை நான் அறியவில்லை
காதலித்து தோற்று போன பின்புதான் உன் சோக எனக்கு புறிகிறது
நீ ஓர் உலக காதல் சோகம் என்று
தாஜ்மகலே
காலகாலமாக வாழ்வது நீ
காதலியை காதலித்து
வாழ்ந்துகொண்டு சாபவன் நான்
தாஜ்மகாலே
என் உடலைவிட்டு உயிர் பிரியுமுன்
உன் இடத்தில் என் பாதம் பட வேண்டும்
உன்னை கட்டி அணைத்து கண்ணீர் சிந்தவேண்டும்
நான் காதலியை நேசிக்கும் நேசத்தை நீ காணவேண்டும்
உன்னிடத்தில் இருந்து நான் கவிதை வடிக்க வேண்டும்
என் காதலின் கதாநாயகியை நினைத்து
நான் கண்ணீர் வடிக்க வேண்டும் கண்ணீர் வடிக்க வேண்டும்
உதயன்