கலைமகள் செட்டிகுளம் வவுனியா செவ்வாய்
2026-09-29
3:58 PM

Welcome Guest | RSS Main | செயற்கை முறைக் கருக்கட்டல் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

செயற்கை முறைக் கருக்கட்டல் lankasri.comIVF என்பது செயற்கை முறைக்கருக்கட்டல் என்பதாகும். இயற்கையாக குழந்தை பெற்றுக் கொள்ள முடியாத தம்பதிகளிடத்தில் இந்த செயற்கை முறைக் கருக்கட்டல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது இன்று சாதாரணமாகியுள்ளது.

இருந்தாலும் அங்கும் பிரச்சனை தோன்ற ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக assisted reproductive therapy (ART) மூலம் உருவாகும் செயற்கை முறைக் கருக்கட்டல் இரட்டையர்களில் சாதாரண இரட்டையர்களைக் காட்டினும் அதிக உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவது இனங்காணப்பட்டுள்ளது.

குறை விருத்தியில் பிறத்தல், எடை குறைவு போன்ற பிரச்சனைகள் அதிகம் இருப்பதுடன் பிறந்து 3 வருடங்களில் அதிகம் மருத்துவமனையில் சிகிச்சை பெற வரும் நிலையும் இந்தக் குழந்தைகளிடத்தில் அதிகம் அவதானிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் கருக்கட்டிய முட்டையை முதல் நிலை முட்டைப் பிளவுகளின் பின் உறைய வைத்துப், பின் தாயின் கருப்பையில் பதிக்கும் இடத்தில் இந்தப் பிரச்சனை ஒப்பீட்டளவில் குறைந்திருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இம்முறையில் 25% மட்டுமே செயற்கை முறைக் குழந்தைகள் பிறப்பிக்கப்படுகின்றன.

அடிப்படையில் செயற்கை முறைக்கருக்கட்டலில் சில வேறுபட்ட வழிமுறைகளைக் கையாள்கின்றனர். மேற்குறிப்பிட்ட பிரச்சனை ART இரட்டையர்களிலேயே அதிகம் ஏற்படுவது இனங்காணப்பட்டுள்ள போதும் அதற்கான காரணங்கள் இன்னும் தெளிவாக அறியப்படவில்லை.

செயற்கை முறை கருக்கட்டல் மூலம் குழந்தைகளைப் பெற விரும்பும் பெற்றோர் ஒரு குழந்தையை ஒரு சூலில் தாக்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்றும் ஒரே சூலில் இரட்டையர்களை பெற விரும்பம் காட்டாதிருப்பது நல்லது என்றும் தெரிவிக்கின்றனர் மேற்படி ஆய்வைச் செய்த ஆய்வாளர்கள். இதன் மூல மேற்படி பிரச்சனைகள் குழந்தைகளிடத்தில் ஏற்படுவதை இயன்ற வரை தடுக்க/ குறைக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர்.
Login form

Search

Calendar
«  புரட்டாதி 2026  »
ஞாதிசெபுவிவெச
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2026 Create a free website with uCoz