கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்
2026-09-30
12:38 PM

Welcome Guest | RSS Main | தினமும் ஒரு டம்ளர் ஒயின் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் வராது | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

தினமும் ஒரு டம்ளர் ஒயின் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் வராது lankasri.comதினமும் ஒரு டம்ளர் ஒயின் சாப்பிட்டால் பித்தப்பையில் கற்கள் உருவாகும் அபாயம் ஓரளவுக்கு குறையும் என பிரிட்டனில் நடத்திய புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தினமும் ஒரு டம்ளர் ஆல்கஹால், குறிப்பாக ஒரு டம்ளர் ஒயின் சாப்பிட்டுவந்தால் பித்தப்பை கற்கள் உருவாகும் அபாயம் வெகுவாக குறையும் என இந்த புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

கிழக்கு ஆங்கிலியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் பால் பனிம் இதை தெரிவித்துள்ளார்.

பித்தப்பை கற்கள் உருவானால் அறுவைச்சிகிச்சை மூலம் பித்தப்பையை அகற்ற வேண்டியதுதான். அது அதிக வலியை ஏற்படுத்தும்.

இதை தவிர்க்க இப்போது புதிய வழி கிடைத்துள்ளது.

ஆல்கஹாலுக்கு பித்தப்பை கற்கள் உருவாவதை தடுக்கும் குணம் உள்ளது. அதை அளவோடு சாப்பிட்டால் அருமருந்தாகும். அளவின்றி சாப்பிட்டால் ஆபத்தை விளைவிக்கும்.

டாக்டர்கள் பரிந்துரைப்படி தினமும் ஒரு கிளாஸ் ஒயின் சாப்பிட்டால் அது பித்தப்பை கற்கள் உருவாக காரணமான ஹெச்டிஎல் என்ற நல்ல கொழுப்பு உருவாவதை அதிகரிக்கும். மாரடைப்பு வருவதற்குக்கூட இந்த கொழுப்புதான் காரணமாகும்.

25,639 பேரின் உணவுப்பழக்கத்தை 10 ஆண்டுகள் ஆய்வு செய்து இதை கண்டுபிடித்துள்ளனர்.

தினமும் 2 யூனிட் அளவுக்கு ஒயின் சாப்பிட்டவர்களுக்கு பித்தப்பை கற்கள் உருவாவது 3-ல் 1 பங்கு குறைந்தது. வாரத்திற்கு 1 யூனிட் ஒயின் சாப்பிட்டவர்களுக்கு பித்தப்பை கற்கள் உருவாவது 3 சதவீதம் குறைந்தது.

உணவு பழக்கம், உடற்பயிற்சி, உடல் எடை, மது அருந்தும் அளவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதாக டாக்டர் ஆண்ட்ரூ ஹார்ட் தெரிவித்தார் என பிரிட்டிஷ் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிகாகோவில் நடைபெற்ற செரிமான நோய் மருத்துவர்கள் வருடாந்திர மாநாட்டில் இது வெளியிடப்பட்டது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Login form

Search

Calendar
«  புரட்டாதி 2026  »
ஞாதிசெபுவிவெச
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2026 Create a free website with uCoz