கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2020-08-09
4:53 PM

Welcome Guest | RSS Main | வார ராசிபலன் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

இந்த வார ராசிபலன் (15-2-2010முதல்21-2-2010வரை)


1.மேசம்:-மேசராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி15,16,17 வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் நண்பர்களின் உதவிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஜவுளி நூல் போன்ற வியாபாரிகள், மருந்து கம்பனிகளை நடத்துபவர்கள்,மருந்து சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள், முதியோர் இல்லங்களை நடத்துபவர்கள்,நெருப்பு சம்பந்தமான தொழிற் சாலைகளை நடத்துபவர்கள்,வெளி நாட்டுத்தூதரகங்களில் பணி செய்வோர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,அரசுத் துறை சார்ந்த ஆலயப் பணியாளர்கள் ஆகியோர்கள் நல்ல பலனை அடைவார்கள்.
பிப்ரவரி18,19,20நீண்ட காலமாகத் தடை பட்டு வந்த குல தெய்வ வழிபாடுகுளை செய்து வருவீர்கள்.யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வருவது நல்லதாகும்.விட்டுப் போன உறவுகள் மீண்டும் தொடர வாய்ப்புஉள்ளது. தேவையற்ற புதிய நண்பர்களின் சேர்க்கையைத் தவிர்த்தால் வீண் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.பிப்ரவரி21பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் மாறி முன்னேற்றம் காணப்படும்.பூர்வீகச் சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு நல்லதொரு முடிவு கிடைக்கும்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் கவனமாகப் பேசிப் பழகவும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை-கிழக்கு
பரிகாரம்:-ஞயிற்றுக் கிழமையில் சிவ ஆலய வழிபாடு செய்து வரவும்.


2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே சனி நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி15,16,17உற்றார் உறவினர்களின் வரவால் மன மகிழ்ச்சியும் பொருள் வரவும் உண்டாகும்.யாத்திரையின் போது மிகுந்த கவனமுடன் பயணம் செய்து வருதல் நல்லது.மஹான்களின் எதிர் பாராத தரிசனங்களால் மனநிறைவை அடைவீர்கள்.உடல் நிலையில் வாயு மற்றும் வாத சம்பந்தமான சிற் சில தொல்லைகள் வந்து போகுவதன் மூலம் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.பிப்ரவரி18,19
உடம்பில் அலர்ஜி மற்றும் சளி சம்பந்தமாகிய உபாதைகள் வந்து போகும். அரசியல் வாதிகளால் ஆதாயம் ஏற்படாது. ரேஸ் லாட்ரி போன்றவற்றின் மூலமாகப் பணம் கிடைக்கும் என எண்ணி ஏமாற்றம் அடைய வேண்டாம். குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகள் சம்பந்தமாகிய பேச்சு வார்த்தைகளில் நல்லதொரு முடிவுகள் கிடைக்கும்.பிப்ரவரி20,21காண்டிராக்ட் தொழிற் செய்வோர்கள்,காய்கறி வியாபாரிகள்,அச்சுத் தொழிற் சாலைகளை நடத்துபவர்கள்,தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள்,வங்கிகளில் பணி புரிவோர்கள்,ஸ்டேசனரி சம்பந்தமான பேனா பென்சில் நோட்புக் போன்ற பொருட்களை விற்பனை செய்வோர்கள் ஆகியோர்கள் ஆதாயம் பெறுவார்கள்.வெகு காலமாக வராத கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் மற்றவர்களின் உதவிகளால் திரும்பக் கிடைக்கும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு வழிபாடு செய்து வரவும்.3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே ராகு நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி15,16 அடுத்தவர்களின் விசயங்களில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம்.பொருளாதார சம்பந்தமாகத் தொலை தூரப் பயணங்களை மேற் கொண்டு வெற்றி பெறுவீர்கள்.குழந்தைகளின் மன மகிழ்ச்சிக்காக உல்லாசப் பயணங்கள் சென்று வர முயற்சிப்பீர்கள்.பிப்ரவரி17,18,19அடிமை ஆட்களால் வீண் பொருள் விரையமும் மன உழைச்சலும் உண்டாகும்.கலைப் பொருட்கள் விற்பனையாளர்கள்,கலைத் துறை சார்ந்த கலைஞர்கள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,உணவுக்கூடங்கள் நடத்துபவர்கள்,அழகுக்கலை கூடங்களை நடத்துபவர்கள்,சிற்றுண்டி உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத் துறைகளைச் சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நல்ல பலன் அடைய வாய்ப்பு உள்ளது. தந்தை மகன் உறவுகளில் பிரச்சனைகள்குறைந்து முன்னேற்றம் காணப்படும். கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் தீர்ந்து மீண்டும் ஒன்று சேரக் கூடிய காலமாகும்..பிப்ரவரி20,21 வெளி நாடுகளில் நீண்ட காலமாக வசிப்வர்கள் தாய்நாடு சென்று உறவுகளைச் சந்தித்து திரும்புவதற்கான வாய்ப்புகள் உள்ள காலமாகும்.. புதிய வீடுகள், வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளை இடமாற்றம் செய்யப் போட்டிருந்த திட்டங்களில் சற்றுப் பின்னடைவு ஏற்படலாம். திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென் கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹா லட்சுமி வழிபாடு செய்து வரவும்.4.கடகம்:-கடகராசி அன்பர்களே .சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி15,16,17 குடும்பச் சொத்துக்களில் ஏற்பட்டு இருந்த வழக்குகளில் நல்ல முடிவுகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் இல்லை.சமுதாய முன்னேற்றம்,அநாதை ஆசிரமங்கள் மற்றும் பொதுத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து பணி ஆற்றுவதன் மூலம் மனநிம்மதியும் பெயர் புகழும் அடைவீர்கள்.பிப்ரவரி18,19 பெண்கள் சம்பந்தமான விசயங்களில் செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல் வர இருப்பதால் மிக எச்சரிக்கையுடன் பேசிப் பழகுவதல் நல்லது.நிலக்கரி,பெட்ரோல்,டீசல் பலசரக்கு,எண்ணை போன்ற தொழிற் செய்வோர்கள்,காவல் துறை ராணுவம் சார்ந்தவர்கள்,தீயணைப்பு நிலையப் பணியாளர்கள்,நெருப்பு சம்பந்தமான தொழில்களைச் செய்வோர்கள்,பூமி நில புலன்கள் சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.பிப்ரவரி20,21 உடம்பில் வாயு மற்றும் வயிறு போன்ற உபாதைகள் வந்து போகலாம்.
உத்தியோகத் துறையினர்களுக்கு மேலதிகாரிகளுடன் வீண் மன சஞ்சலமும் பதவி இட மாற்றமும் ஏற்பட இருப்பதால் முன் கோபத்தைத் தவிர்த்துப் பொருப்புடன் பணி ஆற்றவும்.பழைய கடன்களை அடைத்து புதிய கடன்களை வாங்குவீர்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் முருகன் வழிபாடு செய்து வரவும்.


5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே கேது நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி15,16,17 நீண்ட காலமாக தீர்க்கப் படாத அரசு சம்பந்தமான வழக்கு விசயங்களில் சாதகமான முடிவுகள் வந்து சேரும்.பழமையான கட்டிடங்களைப் பழுது பார்ப்பதன் மூலம் பொருட் செலவுகள் ஏற்படலாம்.காதல் விசயத்தில் அனுகூலம் ஏற்படாது.வெகு காலமாகக் கட்டப் படாத ஆலயத் திருப் பணிகளுக்கான பணிகளை செய்வீர்கள்.கூட்டுத் தொழிற் செய்வோர்கள் புதிய தொழில் முயற்சிகளில் ஈடு பட்டுப் பயனடைவார்கள்.பிப்ரவரி18,19 பெண்களால் தென் திசையில் இருந்து நற் செய்திகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ள காலமாகும். பிள்ளைகளால் சில தொல்லைகள் வந்து சேர இருப்பதால் கவனமுடன் இருத்தல் நல்லது.தடை பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் சம்பந்தமாகப் புதிய தொடர்புகள் ஏற்பட்டு அதன் மூலம் நன்மைஅடைவீர்கள்.
பிப்ரவரி20,21 பழைய கடன்களை அடைப்பதற்காகப் புதிய கடன்கள் வாங்குவீர்கள்.தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவச் செலவுகள் உண்டாகலாம்.கட்டிடசம்பந்தமான பொருட்களை விற்பனை செய்வோர்கள்,கட்டில் மெத்தை,ஆடம்பர அலங்காரப் பொருட்களின் வியாபாரிகள்,சினிமா மற்றும் நாடகத்துறைகளை சார்ந்தவர்கள்,அழகுக் கலைக்கூடங்களை நடத்துபவர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். பொதுவாக இது ஒரு நற் பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-வெள்ளிக் கிழமையில் மஹாலட்சுமி வழிபாடு செய்து வரவும்.
6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே புதன் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி15,16 செய்யாத குற்றங்களுக்காக வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக நேரிடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.பிள்ளைகளின் சுப காரிய நிகழ்ச்சிகளில் ஏற்பட்டு வந்த தடைகள் நீங்கும்.வெளி நாட்டு விசயங்களில் வேற்று மதத்தவரால் ஆதாயங்கள் உண்டு. யாத்திரையில் புதிய பெரிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் ஆதாயம் அடைவீர்கள்.பிப்ரவரி17,18 வங்கிகளின் மூலமாக எதிர் பார்த்து இருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ள காலமாகும்.சார்ந்தவர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள். நீண்ட நாட்களாக எதிர் பார்த்து இருந்த வர வேண்டிய பணம் திரும்பக் கைக்கு வந்து சேரும்.காதல் விசயத்தில் எதிர் பார்த்து இருந்த தகவல்கள் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். திடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ் லாட்டரி ஆகியவற்றின் மூலம் பண வரவு உண்டாகும்.பிப்ரவரி19,20,21 வெளி நாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் எதிர்பார்த்த நல்ல முடிவுகள் கிடைக்கும்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த மனக் குழப்பங்கள் மாறி மிகுந்த ஒற்றுமைகள் உண்டாகும்.இரும்பு இயந்திரம் இரசாயனம்,
பழைய கழிவுப் போருட்களின் வியாபாரிகள்,பலசரக்கு மற்றும் எண்ணை வியாபாரிகள்,கல் மணல் வியாபாரிகள்,அலுவலக உதவிப் பணிகளைச் செய்பவர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்..

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
பரிகாரம்:-சனிக் கிழமையில் ஐயப்பன் வழிபாடு செய்து வரவும்.
7.துலாம்:-துலாம்ராசி அன்பர்களே வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி15,16,17 பண வரவுகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்ள வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்துக்களில் நீண்ட காலமாக இருந்து வந்துள்ள பிரச்சனைகள் தீர இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம். வர வேண்டிய கடன் கொடுத்து இருந்த பணம் மற்றும் பொருட்கள் வந்து சேரும்.அரசியல் வாதிகளால் ஆதாயம் உண்டாகும்.பிப்ரவரி18,19 அநாதை சிறுவர்களுக்காக உதவுவதில் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.புதிய தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்டிருந்த எண்ணங்கள் நிறை வேறும். உற்றார் உறவினர்களால் ஆதாயம் இல்லை.வர வேண்டிய பணம் மற்றவர்களின் உதவியால் திரும்பக் கிடைக்கும்.யாத்திரையில் புதிய மனிதர்களின் தொடர்புகள் ஏற்பட்டு அவர்களால் சிற்சில ஆதாயம் அடைவீர்கள்.பிப்ரவரி20,21 சகோதர சகோதரிகளின் தடைபட்ட திருமண காரியங்கள் நிறைவேறும் காலமாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளுவீர்கள்.தண்ணீர் கூல்டிரிங்ஸ்,திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,பூஜைப் பொருட்களை விற்பனை செய்வோர்கள், மருத்துவத் துறைகளைச் சார்ந்தவர்கள்,
தாய் சேய் நல விடுதிகளை நடத்துவோர்கள் ஆகியோர்கள் ஆதாயம் அடைவீர்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-திங்கட் கிழமையில் அம்மன் ஆலய வழிபாடு செய்து வரவும்8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி 15,16,17அடுத்தவர்களின் விசயங்களில் தலையிட்டு அவமானப்பட இருப்பதால் மிகவும் கவனமுடன் இருப்பது நல்லதாகும். குடும்பத்தில் இருந்து வந்த மருத்துவச் செலவுகள் வெகுவாகக் குறையும்.திடீர் அதிர்ஷ்டமாகிய ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலம் பணம் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.பிள்ளைகளால் மன நிம்மதியும் பொருள் வரவும் உண்டாலாம்.தந்தை மகன் உறவுகளில் சுமூகமான சூழ்நிலை உருவாகும். மீன் முட்டை மாமிச உணவுகளின் வியாபாரிகள்,பழைய இரும்பு தகரம் போன்ற பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவீர்கள்.பிப்ரவரி18,19,20 உடல் நிலையில் நரம்பு எலும்பு போன்ற உபாதைகள் வந்து போகும். வீடு நிலம் வாங்குவது சம்பந்தமான புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள்.தீராத நோய்களுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்க கூடிய காலமாகும். குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் குறையும்.வங்கிகளில் இருந்து எதிர் பார்த்த பணம் கை வந்து சேரும்.பிப்ரவரி21 உடல் நிலையில் கண் மற்றும் காதுகளில் சில உபாதைகள் வந்து போகும்.மஹான்களின் தரிசனங்களால் மன நிம்மதியை அடைவீர்கள்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு எதிர் பார்த்து இருந்த இட மாற்றம் கிடைக்க இன்னும் சற்று கால தாமதம் ஆகலாம்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கரப்ப
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-ஞயிற்றுக் கிழமையில் பிதுர் வழிபாடு செய்து வரவும்.


9.தநுசு:-தநுசுராசி அன்பர்களே செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி15,16 வெளிநாடு சென்று வருதல் போன்ற முயற்சிகளில் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.மனைவிக்கு சிற்சில மருத்துவச் செலவுகள் செய்வதற்காகப் புதிய கடன்களை வாங்குவதற்காக முயற்pப்பீர்கள். பொருளாதாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகள் சற்று குறைந்து காணப்படும்.ரேஸ் லாட்டரி போன்றவற்றின் மூலமாகப் பணம் பொருள் ஏமாற்றம் அடையாமல் இருக்கவும்.பிப்ரவரி17,18,19,20 மற்றவர்களின் விசயங்களில் அநாவசியமாகத் தலையிட்டு வீண் பழிச் சொல்லுக்கு ஆளாக வேண்டாம்.பொருளாதாரம் சுமாராகக் காணப்படும்.
எழுத்தாளர்கள்,கவிஞர்கள் பாடலாசியர்கள், நாடகக் கலைஞர்கள்,மருத்துவத் துறை சார்ந்தவர்கள்,அச்சுத் தொழிற் செய்வோர்கள்,தபால் தந்தித் துறைகளைச் சார்ந்தவர்கள்,மருத்துவக் கல்லூரி மாணவர்கள்,வங்கிகளில் பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நல்ல பலன்களை அடைவார்கள்.பிப்ரவரி21 சூதாட்டங்களில் பணம் மற்றும் பொருட்கள் ஏமாற்றம் அடையாமல் எச்சரிக்கையுடன் இருக்கவும்.சமுதாய முன்னேற்றத்திற்கான பொது நலத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்பெயர் எடுப்பீர்கள்.வேற்று மதத்தவர்கள் மற்றும் அரசியல் வாதிகளால் சிற்சில ஆதாயங்களை அடைவீர்கள்மாணவரகளுக்கு கல்வியில் பரிசு மற்றும் பாராட்டுக்கள் கிடைக்ககூடும்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்க
பரிகாரம்:-புதன் கிழமையில் மஹாவிஷ்ணு மற்றும் ஆஞ்சனேயர் வழிபாடு செய்து வரவும்.


10.மகரம்:-மகரராசி அன்பர்களே சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி15,16,17,18 புதிய வீடு நிலம் மற்றும் வாகனங்கள் வாங்குவதற்காக வங்கிகள் மூலம் எதிர் பார்த்து இருந்த கடன் கேட்ட பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.குடும்பத்தில் மருத்துவ செலவுகள் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது.பெண்களால் தென்திசையில் இருந்து எதிர் பாராத பண வரவுகள் உண்டாகும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவுடன் பதவி உயர்வும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.பிப்ரவரி19,20,21 வெளி நாடு சென்று வர வெகு காலமாகப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.குடும்பத்தில் சுப காரிய நிகழ்ச்சிகளுக்காகப் புதிய கடன் வாங்குவீர்கள் காதல் விசயங்களில் மிகுந்த கவனமுடன் இருப்பதால் வீண் பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். குடும்பச் சொத்துககளில் நீண்ட காலமாக இருந்து வந் பிரச்சனைகள் குறையும். தாயின் உடல் நிலையில் சில பாதிப்புகள் மூலமாக மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.பழைய கழிவுப் பொருட்களாகிய பேப்பர்,பிளாஸ்டிக் மற்றும் பழைய இரும்புப் பொருட்களின் வியாபாரிகள்,அணு ஆராய்ச்சி மற்றும் விஞ்ஞானத் துறை சார்ந்த பணியாளர்கள்,மத போதகர்கள்,மடாதிபதிகள்,அழுகல் சம்பந்தமான மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சிகப்பு
இராசியான திசை:-வடமேற்கு
பரிகாரம்:-திங்கள் கிழமையில் கணபதி வழிபாடு செய்து வரவும்.11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே புதன் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி15,16 புதிய நண்பர்களிடம் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.மஹான்களின் சந்திப்புகளால் மன நிம்மதி அடையலாம். நண்பர்கள் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள்.விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடரலாம்.பிப்ரவரி17,18,19 குல தெய்வ ஆலயத் திருப்பணிகளுக்கான விசயங்களில் பணி ஆற்றுவதன் மூலம் நற் பெயர் புகழ் ஏற்படும்.கோர்ட் வழக்கு விசயங்களுக்காக புதிய வழக்கறிஞர்களின் உதவியை நாடி அவர்களால் நன்மை அடைவீர்கள்.பூர்வீகச் சொத்துக்கள் கை வந்து சேரக் கூடிய காலமாகும். தங்கம் செம்பு வெள்ளி போன்ற உலோகப் பொருள்களின் வியாபாரிகள்,மருந்துப் பொருட்கள் விற்பனை செய்வோர்கள் மற்றும் மருத்துவத்துறை சார்ந்தவர்கள்,பூமி நில புலன்களை வாங்கி விற்போர்கள்,கேஸ் வெல்டிங் தொழிற் செய்வோர்கள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.பிப்ரவரி20,21 நீண்ட தூரப் பயணங்களின் மூலமாக எதிர் பார்த்த பெரிய மனிதர்களின் உதவிகள் கிடைக்கும்.அரசு வழக்கு விசயங்களில் எதிர் பார்த்து இருந்த சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும்.நீண்ட தூரப் பயணங்களைத் தள்ளிப் போடுதல் நல்லது.யாத்திரையில் மிக கவனம் தேவை.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்ப
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-செவ்வாய் கிழமையில் துர்க்கை ஆலய வழிபாடு செய்து வரவும்.


12.மீனம்:-மீனராசி அன்பர்களே சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.பிப்ரவரி15,16,17,18 குல தெய்வ ஆலய வழிபாடுகளைச் செய்து வருவதன் மூலமாக மன நிம்மதி அடைவீர்கள். அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு மன நிம்மதி இழக்க வேண்டாம்.
வங்கிகளின் மூலம் எதிர் பார்த்து இருந்த உதவித் தொகைகள் கிடைக்கும்.பூ பழம் பூஜை சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள்,அநாதை ஆசிரமங்கள்,முதியோர் இல்லங்களை நடத்துபவர்கள்,தாய் சேய் நல விடுதிகளை நடத்துபவர்கள்,இனிப்புப் பொருட்களின் தின் பண்ட வியாபாரிகள்,பேராசிரியர்கள்,அற நிலையத்துறை சார்ந்தவர்கள்,ஆலயப் பணி செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன்களை அடைவார்கள்.பிப்ரவரி19,20 நீண்ட காலமாக திருமணம் ஆகாதவர்களுக்கு நண்பர்கள் உறவினர்களின் உதவியால் திருமணம் நடை பெற வாய்ப்பு உள்ளது.குல தெய்வ ஆலயத் தொண்டுகளைப் பிரியமுடன் செய்து நற் பெயர் எடுப்பீர்கள்.உடம்பில் தலை மற்றும் முதுகுவலி போன்ற சில உபாதைகள் வந்து போகலாம். நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சி அடைவீர்கள்.பிப்ரவரி21 விட்டுப் போன பழைய பிரச்சனைகள் மீண்டும் தலை தூக்கும்..திருட்டுப் போன பொருட்கள் காவல் துறையினர் உதவியால் திரும்பக் கிடைக்கும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள்
இராசியான திசை:-வடகிழக்கு
புரிகாரம்:-வியாழக் கிழமையில் தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்து வரவும். தொடரும்!


Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆவணி 2020  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2020 Create a free website with uCoz