ஏகாதிபத்தியம்
ஓ ! ஏகாதிபத்தியமே !
ஈழமே அங்கு எரிகிறதே
நீங்கள் யுத்தநிறுத்தம் செய்ய
பஞ்சாங்கம் பார்கிறீர்கள்
பாவமே அறியாத பச்சிளம் குழந்தைகள்
பச்சை உடம்பாய் சிதறிகிடக்கின்றன
வேகமாய் வரும் குண்டுகளோ
ஈழத்தமிழன் உடலில் பட்டு அடங்கிபோகின்றன
அங்கு தடுக்கி விழுந்தால் தரை தெரிவதில்லை
தமிழனின் உடல்தான் தெரிகிறது
ஐயோ!
கல்லும் கண்ணீர் வடித்து கரையுமே
ஈழத்தமிழர் நிலை கண்டால்
கணவான்களே!
உங்கள் மனமென்ன மண்ணா?
பூனைக்கும் நாய்க்கும் காவல் இருக்கும்
புத்திசாலிகளே!
ஈழத்தமிழன் என்ன அதனிலும் கேடா?
பிராந்திய நலனில் அக்கறை கொள்ளும்
முதலாளிகளே!
மகிந்த என்ன உங்கள் மாப்பிள்ளையா?
வல்லரசு என்று மார்தட்டிக்கொள்கிறீர்கள்
போரை நிறுத்தமுடியாமல்
வக்கத்து நிற்கிறீர்களே!?
காண்டீபம்
(தமிழ்நாட்டு அகதி )