சத்தியம் செய்வோம் இந்த நாளிலே!
சுக்குநூறாக வெடித்துப் பறக்கும்
இதயங்களான எம் தமிழ் உறவே
துயரம் நிறைந்த இந்த நாட்களை
எப்படி மறப்போம் எங்கே தீர்ப்போம்!
மனிதாபிமானம் பேசிடும் உலகோ
மனித அழிவுக்கு மகிழ்வு பகிருது
தமிழர் குருதியில் கைகளை நனைத்து
விருந்தினையுண்டு சிரித்து மகிழுது !
சிறுமை நிறைந்த சீரற்ற உலகை
நம்பியதாலே எம் தாயகமிழந்தோம்
தாயகம் வாழ்ந்த உறவுகளிழந்தோம்
உலகை நம்புதல் நன்மையல்லவே
என்பதையல்லவா உலகு சொன்னது
எம்மை நம்புவோம் தாயகம் மீட்க
தாயமல்லவோ நாம் செய்யும் காணிக்கை
மண்ணுள் புதைந்தோர் வேண்டுதல் அதுவே !
கண்ணீர் துடைத்து நாம் கைகளைக் கோர்த்து
சத்தியம் செய்வோம் இந்த நாளிலே !
கண்ணீர் துடைத்து நாம் கைகளைக் கோர்த்து
சத்தியம் செய்வோம் இந்த நாளிலே !
நொச்சியான்
யேர்மனி
சுக்குநூறாக வெடித்துப் பறக்கும்
இதயங்களான எம் தமிழ் உறவே
துயரம் நிறைந்த இந்த நாட்களை
எப்படி மறப்போம் எங்கே தீர்ப்போம்!
மனிதாபிமானம் பேசிடும் உலகோ
மனித அழிவுக்கு மகிழ்வு பகிருது
தமிழர் குருதியில் கைகளை நனைத்து
விருந்தினையுண்டு சிரித்து மகிழுது !
சிறுமை நிறைந்த சீரற்ற உலகை
நம்பியதாலே எம் தாயகமிழந்தோம்
தாயகம் வாழ்ந்த உறவுகளிழந்தோம்
உலகை நம்புதல் நன்மையல்லவே
என்பதையல்லவா உலகு சொன்னது
எம்மை நம்புவோம் தாயகம் மீட்க
தாயமல்லவோ நாம் செய்யும் காணிக்கை
மண்ணுள் புதைந்தோர் வேண்டுதல் அதுவே !
கண்ணீர் துடைத்து நாம் கைகளைக் கோர்த்து
சத்தியம் செய்வோம் இந்த நாளிலே !
கண்ணீர் துடைத்து நாம் கைகளைக் கோர்த்து
சத்தியம் செய்வோம் இந்த நாளிலே !
நொச்சியான்
யேர்மனி