கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-02-09
3:44 AM

Welcome Guest | RSS Main | தலைமுறை இடைவெளி! | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

இனியெல்லாம் சுகமே!
டாக்டர். ஷர்மிளா
தலைமுறை இடைவெளி!

இன்டர்நெட் வாசகர்களே! இந்த தொடர் மூலமாக உங்களிடம் என் கருத்துகளை போட்டோமா

றிக் கொள்வதிலும் உங்களது சந்தேகங்களை போக்குவதற்கும் ஒரு சிறிய முயற்சி. நடைமுறை வாழ்க்கையில் நான் அறிந்த பலரது தாம்பத்ய வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளையும் போட்டோயாத புதிர்களையும் இதில் விளக்க போகிறேன். உங்கள் மனதை வீணாக குழப்பாமல் யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்!

தாம்பத்ய வாழ்க்கையில் குறிப்பிட்ட வயதை தாண்டியதும் செக்ஸ் உறவில் வொர்க் அவுட் ஆகமுடியவில்லை என்று மனதுக்குள்ளே கண்ணீர் வடிக்கும் ஆண்கள் ஒரு பக்கம். கணவன் வேறு சேனலுக்கு போகிறார், அதை தடுத்து நிறுத்துவதற்கு நம் உடம்பு ஒத்துழைக்கவில்லையே என்று தலையணையில் முகம் புதைத்து அழும் இளம் பெண்களின் கண்ணீர் கோலம் மறுபக்கம். ஆனால் காலவெள்ளத்தில் செக்ஸ் உறவில் சந்தோஷ துள்ளல்கள் இருந்தால்தான் வாழ்க்கை சக்கரம் வேகமாக சுழலும்.
தலைமுறை இடைவெளியில் ஏற்பட்ட செக்ஸ் உறவில்

1. உடல்ரீதியான மாற்றம்
2. மனரீதியான மாற்றம்
3. இயற்கை மாற்றம். இந்த மூன்றும் தான் முக்கிய காரணம்!


இப்போ, ஆவ்ரேஜ் செக்ஸ் லைஃப். அதாவது செக்ஸ§வல் லைஃப் ஸ்பேன் என்பது அதிகமாயிட்டுது. இயற்கை மாற்றம், சுற்றுப்புறச்சூழல் பாதிப்பு ஆகியவற்றால் இந்த ஜெனரேஷன்ல உடல்ரீதியாக எத்தனையோ மாற்றங்கள் உடலில் ஏற்படுகிறது. உதாரணமாக இப்போ உள்ள சிறுமிகள் பத்து வயது நெருங்கினாலே பெற்றோர்களின் இதயதுடிப்பில் லப்டப் வேகம் ஜாஸ்தியாகி விடுகிறது. அதற்கு காரணம் இந்த ஜெனரேஷன் சிறுமிகள் சீக்கிரமே வயசுக்கு வந்துடறாங்க. அந்த காலத்துல 15, 16 வயசுல வயசுக்கு வந்துடறாங்கன்னா இப்போ பன்னிரெண்டு, பதிமூன்று வயசுல அட்டண்டட் ஏஜ் வந்துடறாங்க. அதே சமயத்துல, நல்ல ஆரோக்கியமான உணவு பழக்கவழக்கங்கள் மூலம் ஆவரேஜ் லைப் ஸ்பேனும் கூடுதலாகிவிடுகிறது. அதனால் ஐம்பது, அறுபது வயதுல இருந்த லைப் ஸ்பேன் இப்போ எழுபது, எண்பது வயதாக கூடிவிட்டது.

அந்த காலத்துல பதினான்கு, பதினைந்து வயசுல மேரேஜ் ஆயிடும். அதாவது செக்ஸ் உணர்வை உணரும் வயசுல தாம்பத்ய வாழ்க்கையை ஆரம்பிச்சுடுவாங்க. செக்ஸ் அவேயர்னெஸ் இல்லாத அந்த காலத்துல பத்து, பன்னிரெண்டு குழந்தைகளை பெற்று போடுவாங்க. இந்த காலத்துல 24, 25 வயசுல பெண்களுக்கும், 26, 27 வயசுல ஆண்களுக்கும் மேரேஜ் ஆகுது. ஸோ, செக்ஸ் உணர்வுகள் மாற்றம் ஏற்பட்ட பல வருடங்களுக்குப் பின் தான் தாம்பத்ய வாழ்க்கையில் செக்ஸ் வெச்சுக்க முடியுது. அதுவரைக்கும் மாஸ்டர் பேஷன் தான் ஒரு வடிகாலாக நினைக்கிறாங்க. திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வெச்சுக்கிறவங்களும் இருக்கிறார்கள். அதுல செய்கிற தவறுகள், தப்புகள் மேரேஜ் லைப்புல எதிரொலிக்கும்.

இதற்கெல்லாம் என்ன காரணம்? தலைமுறை இடைவெளியில் ஏற்பட்ட செக்ஸ் அவெயர்நஸ் தான். ஆனால், சொசைட்டியில இருக்கிற செக்ஸ் கட்டுபாடுகள் பாலியல் உணர்வுகள் அதாவது எல்லைத் தாண்டி போக துடிக்கும் செக்ஸ் உணர்வுகளுக்கு தடையாக இருக்கிறது. அது கவலையாக, பயமாக மாறி செக்ஸ் உறவு கொள்வதற்கு திருமணம் மூலம் அங்கீகாரம் கிடைக்கும்போது ஏற்கனவே மனதில் உருவான தயக்கம், பய உணர்ச்சி, நம்மால் செக்ஸ் உறவில் ஈடுபட முடியுமா? என்ற தயக்கமே பாலியல் உறவில் முழுமையான ஒத்துழைப்புக்கு தடையாக இருக்குது. செக்ஸ் குற்றங்கள், பாலியல் நோய்கள் அதிகமாகிக் கொண்டே போவதால் தாம்பத்ய உறவில் விரிசல் ஏற்பட்டு செக்ஸ் உறவுக்கே குட்பை சொல்லும் நிலைமையும் ஏற்படுகிறது.

திருமணத்துக்கு முன்பே, அதாவது ஒரு ஆணுக்கோ பெண்ணுக்கோ பதினைந்து வயதில் செக்ஸ் உணர்வுகள் துளிர் விடுகிறது. அதிலிருந்து திருமணம் ஆகும் எட்டு, பத்து வருடங்களில் தங்களது செக்ஸ் உணர்வை தணித்துக் கொள்வதற்கு மாஸ்டர் பேஷனை வடிகாலாக நினைத்து செயல்படுகிறார்கள். டீன் ஏஜ் பெண்கள் பிரி மேரிட்டல் செக்ஸ§ல ஈடுபட்டு ப்ரெக்னன்ஸி ஆகிறார்கள்.

ஸோ திருமணம் வரைக்கும் ஆணும், பெண்ணும் யாருக்கும் தெரியாமல் சொசைட்டியின் கட்டுபாட்டுக்கு பயந்து ஈடுபடுகிற செக்ஸ் விவகாரங்கள், காதல் மூலம் உறவு, இல்லீகல் செக்ஸ், உறவு மாறிய செக்ஸ் தொடர்பு அல்லது ஆக்சிடென்ட்டலாக ஒரு ஆணுடைய ஃபோர்ஸ§க்கு பலியாகும் டீன் ஏஜ் பெண்கள் பாலியல் பெண்களிடம் தொடர்பு. இப்படி எத்தனையோ சொல்லலாம்!

இத்தனை விவகாரங்களிலும் நுழைந்து பார்த்துவிட்டு ஒரு மணமகளோ, மணமகனோ சொசைட்டிக்கு மத்தியில் கணவன்-மனைவி அங்கீகாரத்தோடு தாம்பத்ய வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறார்கள். நான்கு சுவற்றுக்குள் இருவரும் ஏதோ ஒரு குற்றவுணர்வு, மனரீதியான பாதிப்போடு தான் செக்ஸ் உறவில் இணைந்து ஈடுபடறாங்க. அதில்தான் பிரச்னையே வருகிறது. திருமணம் வரைக்கும் கேஷ§வலாக செக்ஸ் வச்சுண்டு அதுக்கப்புறம் ஒருத்தரை மேரேஜ் பண்ணும் போது 100 சதவீத செக்ஸ் சேடிஸ்பாக்ஷன் வருவது சந்தேகமே. ஏனென்றால் லைப் பார்டர்கள் இருவருமே தங்களுக்குள் பிராக்டிகல் செக்ஸ்ல ஒரு கற்பனை, அதாவது இ;ப்படிதான் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஒரு குஷியோடு அணுகுவார்கள். அப்போது இருவரில் ஒருவரது மனது குற்ற உணர்வு, பயம், பிரிமேரிட்டல் செக்சால் பாதிப்பு இருந்தால் கோ-ஆபிரேஷனில் பிரச்சனை வெடிக்கும். அப்புறம் என்ன? டாக்டரிடம் அப்பாயின்மெண்ட் கேட்டு ஓடுவார்கள்.

தாம்பத்ய வாழ்க்கையில் உடல்கள் இணையும் உறவில் பிளஷர் அப்ரோச். அதாவது மகிழ்ச்சிகரமான மூவ் அடிப்படை தத்துவம். நூற்றுக்கு எழுபத்தைந்து பேர்கள் குற்ற உணர்வு, பயம், திருமணத்துக்கு முந்தைய செக்ஸ் உறவு, குற்றங்கள், குடும்ப பிரச்சனைகள்- இத்தனையும் சுமந்து கொண்டு தான் மேரேஜ் கான்சப்ட்டுல எண்ட்ரி ஆகறாங்க. கணவனும் மனைவியும் ஒருவரையருவர் விரும்பி பிசிக்கலாகவும், மனரீதியாகவும் சந்தோஷத்தை வரவழைத்துக் கொண்டு ஈடுபடும் செக்ஸில் தான் முழு சந்தோஷத்தை காண முடியும். முந்தைய ஜெனரேஷனில் செக்ஸ் உறவே குழந்தை பெறுவதற்கு தான் என்ற பேசிக் (அடிப்படை) தத்துவத்தில் செயல்பட்டு பத்து பன்னிரெண்டு குழந்தைகளைப் பெற்று போட்டார்கள். குழந்தை பிறப்பதற்கு அதுதான் வழி என்பதோடு மட்டும் நின்றுவிட்டார்கள். செக்ஸ் உணர்வுகளை அந்தக் கால பெண்கள் சிறு துளி கூட வெளிக்காட்டாத காலக்கட்டம் அது.

அப்போது ஹெல்த்தியான உணவுகள், சுற்றுப்புற சூழலும் நல்லா இருந்தது. உடல் ரீதியாக ஸ்ட்ராங்காக இருப்பதற்கு நாட்டு மருந்துகள், உடலை பராமரிப்பதற்கு ஆயில் பாத் மற்றும் ஜீரண சக்தி அதிகரிப்பதற்கு எளிய மருத்துவ முறைகளை பின்பற்றினாங்க. பல மூட பழக்கவழக்கங்கள் இருந்தாலும் உணவு பழக்கவழக்க முறை தான் பத்து, பன்னிரெண்டு பெற்றுப் போடுவதற்கும், அன்றைய ஆண் தலைமுறை வீரியத்தோடு நடைப்போட்டதற்கும் மூலகாரணம் என்று அடித்து சொல்லலாம். காலப்போக்கில் உணவு பழக்கவழக்கமுறை பிரைட் ரைஸ், சிக்கன்-65 வரைக்கும் மாறிவிட்டது. இப்போதுள்ள இளைஞர்களின் தாகத்தைத் தீர்க்கும் மருந்தே பீர். ஸோ, விவசாயத்துல இயற்கை உரத்துக்கு பதில் ஃபெர்ட்டிலைசர்சை அதிகமாக உபயோகப்படுத்துகிறோம். காய்கறி, பழங்கள் உற்பத்தியாகும் போது நோய்கள், பூச்சிகளை தடுப்பதற்காக கெமிக்கல்ஸ் யூஸ் பண்றாங்க. இதுதான் மனித உடலை, ஹார்மோன்ஸ்களை மனித உடலில் டெப்பாசிட் ஆகும் விந்தணுக்கள் வீரியத்தை அதனுடைய பவரை குறைப்பது என்பது நிதர்சனமான உண்மை என்றே சொல்லலாம்.

அந்த கால ஆண்களில் புகைப்பிடிப்பவர், மது பழக்கத்துக்கு அடிமையானவர்கள் ரொம்ப ரொம்ப குறைவு. இப்போ உள்ள ஜெனரேஷன்ல சுமோக்கிங் அண்ட் டிரிங்கிங் அதிகம். ஸோ, இப்போதைய தலைமுறை தங்களது உடலை தாங்களாகவே ஸ்பாயில் பண்ணிவிட்டு செக்ஸ் உறவில் ஈடுபட முடியலை என் வொய்ஃப் மலடின்னு ஈசியாக பழி போட்டு விட்டு தப்பிச்சுடறாங்க.

தலைமுறை கேப்புல ஏற்பட்ட மாற்றத்துல மனித வாழ்க்கையின் தாம்பத்ய வாழ்;கையும், உடல் மாற்றமும், மனரீதியான மாற்றமும் செக்ஸ் உறவை பாதித்தது உண்மை. என்னிடம் கவுன்சிலிங் வந்த அழகான இளம் தம்பதிகளின் பிரச்சனையே பேபிதான். ஜெனி-ஸ்டீபன் தம்பதிகள். மேரேஜ் ஆகி ஒரு வருஷம் தான் இருக்கும். இரண்டு பேரும் பார்ப்பதற்கு ரொம்ப அழகா இருப்பாங்க. வெளித்தோற்றத்துல அவங்க உடலில் குறை இருப்பதாக யாரும் சொல்ல முடியாது. முதல்ல ஸ்டீபன் தான் பொரிஞ்சு தள்ளினார். டாக்டர் எங்க பரம்பரையில தொட்டாலே கர்ப்பம் ஆயிடும். இவகிட்ட ஒரு வருஷமா ஜாலியா இருந்தும் என் இனிஷியல் போடுவதற்கு அவ வயித்துல கர்ப்பம் ஆகலையே. எனக்கு ரொம்ப டென்ஷாக இருக்குன்னு புலம்பினார். ஜெனி பார்ப்பதற்கு ஸ்வீட்டாக இருந்தாலும் அவ முகத்தில் ஒரு இனம் போட்டோயாத வேதனை தெரிஞ்சுது. அவர் இஷ்டப்பட்ட நேரத்துல கோ-ஆபரேட் பண்றேன். பெரும்பாலும் டிரிங்ஸ் கன்ஸ்யூம் பண்ணிட்டு தான் என்னோட உறவு வச்சுக்கிறார். சுமோக்கிங் வேற உண்டு. டூ வீலர்ல ரொம்ப நேரம் டிராவல் பண்ற டியூட்டி. அவர் வர்ற டென்ஷனையும் வேகத்தையும் பாத்து ரொம்ப நெர்வஸ் ஆகிவிடுவேன் டாக்டர் என்றாள் ஜெனி. உடனே ஸ்டீபன் பக்கம் திரும்பி, உங்க ஹெல்த்தை என்றைக்காவது செக் பண்ணியது உண்டா? என்றதும் தலையை குனிந்தார். உங்க பரம்பரையில அப்பா, தாத்தாவுக்கு பேட் ஹேபிட்ஸ் எதுவும் கிடையாது. நீங்களோ ஸ்மோக்கிங், டிரிங்ஸ், உடலில் அதிகமான உஷ்ணம், டென்ஷன் இத்தனையும் வெச்சுட்டு உங்க அழகான மனைவிதான் காரணம்னு சொல்றீங்க. உங்களது உடலை, செமனை செக் பண்ணி டிரீட்மென்ட் எடுத்தால் ஓ.கே. என்றேன். ஸோ பிரச்சனைக்கு வழி தேடுவதை விட்டுவிட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றத்தை சுமத்திக் கொண்டு இயற்கை கொடுத்த சரீர சுகத்தை, சந்தோஷத்தை நாமே வீணடிப்பது வேஸ்ட்.


Login form

Search

Calendar
«  மாசி 2025  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
232425262728

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz