இனியெல்லாம் சுகமே! |
டாக்டர். ஷர்மிளா
|
மனம் ஒரு குரங்கு
|
காற்றைப் போல் சலனமடைந்த மனசு அங்குமிங்கும் அலைபாயும் குரங்கு. வீணான சந்தேகங்களுக்கு அர்த்தங்களைக் கற்பித்துக் கொண்டு, நிம்மதியையும் தொலைத்துவிட்டு பெருமுச்சு விடுபவர்கள் தான் அதிகம். அதேசமயத்தில், தங்களது சந்தேகத்தை தீர்ப்பதற்காக மனம்விட்டு பேசலாமே என்ற எண்ணங்கள் யாருக்கும் தோன்றுவதில்லை. அதைப்போலத்தான் ராஜேஷ்-சுமதி தம்பதியினருக்கு மத்தியில் சந்தேக விதை முளைக்கத் தொடங்கியது. வாழ்க்கைப் பூந்தோட்டத்தில் பாடித்திரிய வேண்டிய இருவரும் தாங்களாகவே வரவழைத்துக் கொண்ட வேதனையை எப்படி தீர்க்க முடியும்? தனது அழகான மனைவி சுமதி தனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற எண்ணம் ராஜேஷ் மனதில் ஓங்கி நின்றாலும், திருமணத்துக்கு முன்பே அவளது அத்தை பையனுடன் ஜாலியாக இருந்திருப்பாளோ? என்ற சந்தேகம் தான் அவனது ஆசைக்கு தடைக்கல்லாக அமைந்தது. இதை எப்படி ஒரு பெண்ணிடம் சொல்லமுடியும்? திருமணத்துக்கு முன் அவனுடன் தொடர்பா? என்று கேட்டால், கணவன், மனைவிக்கு இடையில் டைவர்ஸ் தான் மிஞ்சும். உதட்டிலிருந்து விஷமாக வெளியேறும் வார்த்தைகள் வாழ்க்கையில் எத்தனையோ விபரீதங்களை உண்டுபண்ணியுள்ளது. அதன்பின் மறப்போம், மன்னிப்போம் என்று காலில் விழுந்து கெஞ்சுவதால், கொட்டிய வார்த்தைகளை திரும்பி பெற இயலுமா? அதே மாதிரி, நீ ஆண்மையுள்ளவனா? என்று எந்தப் பெண்ணாலும் தைரியமாக கேட்கமுடியுமா? எனவே, மனதுக்குள் உறுத்திக் கொண்டிருக்கும் அர்த்தமற்ற சந்தேகங்களை அசைபோட்டுக் கொண்டு வெளித்தோற்றத்தில் நடித்தால் வேதனை தானே மிஞ்சும். எனவே, நம்முடைய மனசை நாமே போட்டோலாக்ஸ் பண்ணிக் கொண்டு சகஜமாக இருக்க பழகிக் கொள்ளவேண்டும். ராஜேஷ§க்கு ஆசை வந்தாலும், அதை நிறைவேற்றுவதில் மனரீதியாக எழுந்த தடுமாற்றம், உடல்ரீதியான செயல்பாட்டை தடுக்கிறது. அவ்வளவுதான். இது சுமதி மனதில் எழுந்த சந்தேகம் அவனை வேறுவிதமாக எடைபோட்டது. இனியும் மனசித்ரவதையை தாங்க முடியாது என்று முடிவு செய்த ராஜேஷ் மனநல மருத்துவரை அணுகி தன் மனதில் கொதிக்கும் எண்ணங்களைக் கொட்டி தீர்த்தான். நீயே உன் மனதைக் குழப்பிக் கொண்டு, உன் மனைவியின் மனதை தடுமாறச் செய்து வேறு தவறு செய்யத் துண்டாதே. அழகான மனைவியின் உடலை ரசிக்கத் தெரிந்த உனக்கு, அவளுக்கென்று ஒரு இதயம், ஏக்கம், ஆசை இருப்பதை ஏன் மறந்தாய்? என்று சொன்னதும் ராஜேஷ§க்கு உறைத்தது. அதன்பின்பு தான் தன் மனைவி சுமதியிடம் அன்பாகப் பழகத் தொடங்கினான். அவளிடம் மனம் விட்டு பேசினான். அவளும் தனது அபிலாஷைகளை பகிர்ந்து கொண்டாள். இருவரது மனதில் இருந்த இறுக்கம் மாயமாய் மறைந்தது. அப்புறம் என்ன? ராஜேஷின் அன்பு அரவணைப்பில் சுமதி தன்னை மறந்தாள். அங்கு தாம்பத்ய உறவுக்கு எந்த தடையுமில்லாமல் போயிற்று. ஆசை வெறுப்பாக மாறி கசப்பான நிகழ்வுகளை உருவாக்கிவிடும். அதற்கு நம்முடைய மனம் தான் ஒரு காரணம். நாம் செய்வது சரியா? நாம் சந்தேகப்படுவது நியாயம் தானா? என்று உங்களது மனதுக்குள் பட்டிமன்றம் நடத்தி தீர்ப்பு வழங்கவேண்டுவது தான் நல்லது. பெண்மையானது நத்தை மாதிரி. தனக்கு பிடிக்காவிட்டால், தனது உடலை கூட்டுக்குள் இழுத்துக்கொள்ளும் நத்தை போல் ஆசையை உள்வாங்கிக் கொண்டு வெளிக்காட்டாமல் இருந்துவிடுவார்கள். ஆண்கள் கட்டாயப்படுத்தினாலும், அது ஒரு உணர்ச்சியற்ற ஜடம் போல் தான் உணர்ச்சிகள் இருக்குமே தவிர, போட்டோபூரண ஆசை எதுவும் இருப்பதில்லை |