கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2020-08-09
4:22 PM

Welcome Guest | RSS Main | எதிர்பார்ப்புகள்... ஆசைகள் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

இனியெல்லாம் சுகமே!
டாக்டர். ஷர்மிளா
எதிர்பார்ப்புகள்... ஆசைகள்

கடலில் பொங்கி எழும் அலைகள் உயரே கிளம்பி ஒன்றோடென்று மோதி கரையை முத்தமிடும் காட்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். மனித சரீரத்தில் உணர்ச்சி அலைகள் மாறுபட்ட சமயங்களில் பல தோற்றங்களில் வெளிப்படுவது இயற்கை கொடுத்த நியதி.

மனித கூட்டுக்குள்ளே இத்தனை விக்ஷயங்களா? என்று ஆச்சர்யபட்டு போகும் அளவுக்கு எத்தனையோ உணர்ச்சிகளை உள்ளடக்கியது. அதில் முக்கியமான உணர்ச்சியை மையமாக வைத்து தான் வாழ்க்கை நடக்கிறது.

மனித உடலில் புயலாக கிளம்பும் உணர்ச்சிகளுக்கு வடிகால் கிடைக்காமல் அணை போட்டால் என்ன ஆகும்? ஏமாற்றம் தான் மிஞ்சும். அது மனரீதியான ஒரு பாதிப்பை உண்டு பண்ணும்.

அப்படி தான் ராஜேக்ஷ்-சுமதி வாழ்க்கையில் விதி புகுந்து விளையாடியது.

விதியை மதியால் வெல்லலாம். செக்ஸ் விக்ஷயத்தில் எத்தனை பேர் மதியால் சிந்திக்க முடியாமல் போகிறது. அதற்கு காரணம் உடல் தான்.

அழகான சுமதி கழுத்தில் மாங்கல்யம் கட்டிய ராஜேக்ஷின் மனம் கற்பனை குதிரையை தட்டி விட்டது. உன் மனைவி ரொம்ப அழகு. நீ கொடுத்து வைச்சவன் என்று அவனது நண்பர்கள் புகழ்ந்து தள்ளினார்கள். புகழ் போதையின் உச்சகட்டத்தில் சுமதியைப் பார்க்க, பார்க்க ராஜேக்ஷ் மனம் குதுகலித்தது.

அதேநொடியில், இப்படிபட்ட அழகான பெண்ணை யாரும் காதலிக்கமல் இருப்பார்களா? சுமதியும் காதலித்திருப்பாளோ என்று ஆண்களுக்கே போட்டோத்தான சந்தேக மிருகம் ராஜேஷ் மனதிற்குள் எட்டிப் பார்த்தது. அப்போது, சுமதியின் அத்தை மகன் பாபு மணமக்களை வாழ்த்தினான். நீங்க ரொம்ப அதிருக்ஷ்டம் செஞ்சவர் என்று கைகுலுக்கினார்.

உடனே, சுமதி, பாபு எங்க மாமா பையன். ரொம்ப இண்டலிஜென்ட். என்று அறிமுகப்படுத்தியவரே, நீ சாப்பிட்டு தான் போகனும் என்று பாபுவின் கையை அசைத்து சுமதி சொன்னாள். இதை அசடு வழிந்து கொண்டே கவனித்த ராஜேஷ் முகம் இருண்டு போனது.

பாலில் ஒரு துளி விஷம் கலந்தால் போதும். பால் முழுவதும் விக்ஷமாக மாறி விடும். ராஜேஷ் மனதில் விஷ விதை முளைக்கத் தொடங்கியது. முதலிரவு நேரம் நெருங்கியது. சுமதியின் கலகலத்துக் கொண்டே இருந்தாள்.

அவளும் சந்தோஷத்துடன் முதலிரவு அறைக்குள் அடியெடுத்து வைத்துவிட்டாள். அழகான மனைவி தனக்கு கிடைத்துவிட்டாள் என்ற சந்தோஷம் ஒருபுறம், சந்தேக சிந்தனை மறுபுறம். பல எதிர்பார்ப்புகளுடன் வந்த மனைவி சுமதியை பார்த்த ராஜேஷ் லேசாக புன்னகைத்தான்.

அது சுமதிக்கு ஏமாற்றமாக இருந்தது. முதலிரவு அறைக்குள் நுழையும் பெண்ணின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். திடீரென்று தாவி தன் கணவன் தன்னை அணைக்கமாட்டானா? ஆசை வார்த்தைகளால் வர்ணித்து, அன்பாக அழைத்து சென்று, தனது கைகளை மெல்ல பட்டும் படாமல் வருடமாட்டானா? என்று ஏங்கத் துடிப்பது பெண்மையின் இயற்கை.

ஆனால், சந்தேகப் பார்வையுடன் வரவேற்ற சுமதி தன்னை கணவன் குற்றவாளி கூண்டில் நிறுத்தப் பார்க்கிறான் என்று நொடிப்பொழுதில் போட்டோந்து கொண்டாள். அதே சந்தேகம் அவளுக்கும் வந்தது. தனக்கு முன்னால் கணவன் யாரையாவது லவ் பண்ணியிருப்பானோ? அல்லது சின்ன வீடு வைத்திருப்பானோ? இவன் முழிக்கிற முழியே சரியில்லையே என்று மனதுக்குள் கணக்கு போட்டு பார்த்தாள்.

முதலிரவு என்று தனிமையான சந்திப்புக்கு பெற்றோர்கள் ஏற்பாடு செய்தால், வெறும் தாம்பத்ய உறவுக்கு மாத்திரம் மட்டும் அல்ல. ஒருவரையருவர் போட்டோந்து கொள்ளவேண்டும். மனம் விட்டு சில விஷயங்களைப் பேசிவிட்டு உடலுக்கும் ஓய்வு கொடுக்க வேண்டும்.

சந்தோஷ குதிரையில் மனம் வேகமாக ஓடி தாம்பத்ய உறவை அடையத் துடிக்கும் போது கட்டுப்பாடும் அவசியம். அதிகமாக பழகாத ஒரு பெண்ணை அன்று அடையத் துடிப்பது எந்தவிதத்தில் நியாயம்? என்று பெண்மையின் மனம் கேட்க துடிக்கும். இது இயல்பு. திடீரென்று ஒரு ஆணை திருமணம் செய்துவிட்டு, அன்றைய தினம் இரவே தனது உடலை ஒப்படைக்க எந்தப் பெண்ணின் மனமும் தயராக இருக்காது. அதை ஒப்புக் கொள்ளாது.

அப்படியே நிகழ்ந்தாலும், கணவனின் ஆசையை நிறைவேற்ற வேண்டுமே. தன்னை தப்பாக நினைப்பான். இனி கணவனுக்கு அடிமை. என்று தன்னுடைய சுய விருப்பு, வெறுப்புகளை, ஆசைகளை தியாகம் செய்துவிட்ட பின்பு தனது உடலை தன் மனம் ஒப்புதல் இல்லாமல் கணவனுக்கு தாரை வார்ப்பாள். இது பெண்களுக்கு இயற்கை விதித்த கட்டாயம்.

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் எத்தனையோ விழிப்புணர்வு பெற்றிருக்கிறார்கள். இனி வருங்காலத்தில், மெடிக்கல் சர்டிபிகேட் இருந்தால்தான் கணவனை அனுமதிப்பார்கள். அதற்கு காரணம் எய்ட்ஸ் அரக்கன்.

திருமண வாழ்க்கையின் முதல் ஒப்பந்தமே, மனம் விட்டு பேசுவது தான். இருவரும் தங்களது பரஸ்பர அன்பை போட்டோமாறிக் கொள்வதற்கு அன்பாக, ஆதரவாக பேசி மன ஒற்றுமைக்கு ஒரு மறைமுகமான பாலம் அமைப்பார்கள். அதற்கு அடுத்தபடியாக, தொடு உணர்ச்சிகள் முலம் ஆசைகளை எதிரொலிப்பது.

முதலிரவிலேயே தனது பலத்தைக் காட்டாவிட்டால் தனது மனைவி தன்னை ஆண்மையற்றவன் என்று கூறிவிடுவாள். எனவே, மனம், உடல் சோர்வாக இருந்தாலும், தாம்பத்ய உறவுக்கு முயற்சி பண்ணி தோல்வியடைவதைப் பார்த்து மனம் வெதும்பலாமா?

இப்படி சந்தேகத்துடன் தன் மனைவி சுமதியை மெல்ல, மெல்ல அணுகி அவசரப்பட ஆரம்பித்தான், ராஜேஷ். சுமதிக்கோ அதிர்ச்சி. கொஞ்ச நேரம் பேசலாமே. இன்றைக்கேவா... ப்ளீஸ்..இரண்டு நாள் போகட்டுமே என்றதும் ராஜேஷ§க்கு அதிர்ச்சி.

இரண்டு நாள் கழித்து சுமதியை கட்டாயப்படுத்தி தாம்பத்ய உறவில் ஈடுபட முயற்சித்தான். அப்போது, ராஜேஷின் மனம் சந்தேகத்தீயில் வெந்து கொண்டிருந்தது. எனவே, அவனது உணர்ச்சிகள், அவனது ஆசையை பூர்த்தி செய்வதற்கு ஒத்துழைக்கவில்லை.

ஆனால், சுமதியோ, இவனுக்கு உடலில் ஏதோ கோளாறு. கணவனால் செயல்படமுடியவில்லை. தன்னை திருப்திபடுத்துவதை விட, அவனது சுகம் தான் முக்கியமா? என்று சுமதியின் மனது கொந்தளித்தது. ராஜேஷ் ஆசைப்படும் போது தனக்கு வயிற்று வலி, தலைவலி என்று தவிர்த்து வந்தாள்.

மனரீதியாக இருவருக்கும் இடையில் பிரிவு ஏற்பட்டது. அழகான மனைவியை அனுபவிக்க முடியவில்லையே என்ற கோபமும், ஆத்திரமும் தலைக்கு ஏறினாலும், ஒண்ணும் பண்ணமுடியவில்லை. தன்னை சுமதிக்கு பிடிக்கவில்லை. அதுதான் தனக்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறாள் என்று கோபம் அடைந்தாள்.

அதற்கு பிறகு என்ன நடந்தது?

Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆவணி 2020  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2020 Create a free website with uCoz