இனியெல்லாம் சுகமே! |
டாக்டர். ஷர்மிளா
|
பெண் மனசு ஆழம்னு யாருக்கு தெரியும்?
|
பெண் மனசு ஆழம்னு யாருக்கு தெரியும்? அது ஆண்களுக்கு எப்படி போட்டோயும்? என்பது தான் பிரச்னையே. ஆணின் உணர்ச்சிகள் எளிதாக வெளிக்காட்டிவிடுவார்கள். பெண்ணின் மனதுக்குள் பல ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் இருக்கும். அதை வெளிக்காட்டமாட்டார்கள். ஆண்கள் தானாகவே தெரிந்து கொண்டு தங்களது எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவேண்டும் என்று ஏங்குவார்கள். அதுகிடைக்காத பட்சத்தில், ஆணின் ஆசைகளுக்கு அவள் ஒத்துப் போகமாட்டாள். அதனால், கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் முற்றி சண்டையும், சச்சரவுமாக மாறும். ஆண்களைப் பொறுத்தவரையில், வேலை, டென்க்ஷன், உழைப்பு, பணம் என்று 24 மணி நேரமும் இயந்திரம் மாதிரி உழைப்பார்கள். அவர்களுக்கு மனைவி என்பவளை சந்தோக்ஷப்படுத்த வேண்டும் என்ற நினைப்பு இருக்காது. அவளுடைய தேவைக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுத்திருக்கிறோம். இனி என்ன என்னை எதிர்பார்க்க வேண்டும்? என்று நினைக்கும் ஆண்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள். அந்தப் பெண் எதிர்பார்ப்பது, தன் கணவனின் ஆதரவு வார்த்தைகளை, நீ சாப்பிட்டாயா? உன் டிரஸ் அழகாக இருக்கு. உன் டிபன் ஏ. ஒன். அதிலும் முக்கியமாக, உடல்நிலை சரியில்லாத சமயத்தில் அருகில் இருந்து கவனிப்பது. இது தான் சராசரி குடும்ப பெண்களின் சாதாரண எதிர்பார்ப்பு. இதை பல கணவர்கள் நிறைவேற்றுவதில்லை என்பது தான் அவர்களது குமுறல். கணவர்கள் இக்ஷ்டப்பப்பட்ட சமயத்தில் மட்டும் நாங்கள் மிக்ஷின் மாதிரி செக்ஸ் உறவுக்கு ஒத்துழைக்கனும். எங்களது ஆசைகளையும், எதிர்ப்பார்ப்புகளை மட்டும் அவர்கள் நினைத்துப் பார்ப்பதில்லை என்று எத்தனையோ பெண்கள் வேதனையை கேட்டிருக்கிறேன். இதற்காக, ஆண்களை ஒரேயடியாக குற்றம் சொல்வதை ஏற்றுக் கொள்ளமுடியாது. ஆண்களுக்கு ஆசைகள், எதிர்பார்ப்புகள் இருந்தாலும், தனது வேலையில் முழுகவனம். இலட்சியத்தில் வெற்றி பெறவேண்டுமென்கிற வெறி. அவர்களுடன் பணிபுரியும் பெண்களுடன் பேசும் நேரம் தான் அதிகமாக இருக்குமே தவிர, தன் மனைவியுடன் பேசும் வார்த்தைகள் மிகக் குறைவாக இருக்கும். இதனால், கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் இடையே மனவிரிசல் ஏற்பட்டு தாம்பத்ய வாழ்க்கையே பாதிக்கும் நிலைமைக்குப் போகிறது. இரயில் தண்டவாளத்தின் இருகோடுகளில் தான் இரயில் வேகமாக செல்கிறது. அதேபோல் இருவரையும் இணைப்பது தாம்பத்ய உறவு. குழந்தைகளைப் பெற்றுவிட்டோம். இனி உறவு வேண்டாமே? என்று நினைத்து கணவனை ஒதுக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அந்த உறவு கிடைக்காத பட்சத்தில் வேறு ஒருவருடன் உடல்ரீதியான உறவு வைத்திருக்கும் பெண்களும் சமுகத்தில் உள்ளனர். இது தவறல்ல. என்னுடைய உடலுக்கு ஒரு வடிகால் என்பது அவர்களது வாதம். அதற்காக விருப்பப்படாத கணவனை தன் வெட்கத்தை விட்டு கெஞ்சும் பெண்கள் ஒரு சிலரே. தன் கணவன் தன்னை விட்டு ஒதுங்கிறான் என்பதையே சில பெண்கள் மனசு ஏற்றுக் கொள்வதில்லை. வேறு பெண்ணுடன் தன் கணவர் தொடர்பு வைத்திருக்கிறாரோ? என்று அவர்களது மனம் கொதிக்கும். கணவனது பழக்கவழக்கம், செக்ஸ் உறவில் பெண்ணின் உணர்ச்சியைப் போட்டோந்து கொள்ளாமல் ஈடுபடுவது, மதுபானம் அருந்துவிட்டு உறவு வைத்துக் கொள்வது என்று மனைவிக்கு பிடிக்காதவற்றை செய்வதன் முலம் வெறுப்பை தான் ஏற்படுத்துகிறார்கள். ஆண்களைப் பொறுத்தவரை தங்களுக்கு தேவை செக்ஸ். அதுவும் தன் இஸ்டப்படி மனைவி தனக்கு அடிபணிய வேண்டுமென்று நினைக்கிறார்கள் என்று சில பெண்கள் வேதனையோடு சொல்லியிருக்கிறார்கள். பெண் மனசு ஆழம்னு யாருக்கு தெரியும்? என்றாலும், அவசரக்காரர்களான ஆண்கள் காதலிக்கும் போதுதான் மனதைப் பார்ப்பார்கள். திருமணம் நடந்து முடிந்துவிட்டால், தாம்பத்ய உறவு என்று வரும் போது தன்னுடைய டாமி«க்ஷனை காண்பிப்பார்கள். அப்போது, பெண்மையானது தன்னுடைய ஆசைகளை வெளியே சொல்லமுடியாது. |