இனியெல்லாம் சுகமே! |
டாக்டர். ஷர்மிளா
|
எங்கே நிம்மதி? எங்கே உணர்ச்சி?
|
மனித மனத்துக்கு சந்தோக்ஷத்தையும், ஆரோக்கியத்தையும் அளிப்பது தாம்பத்ய உறவு தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. அதற்காக செக்ஸ் இல்லாமல் வாழவே முடியாதா என்பதல்ல. திருமணம் ஆகாதவர்கள், துறவறம் பூண்டவர்கள் அவர்களது மனத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டோ, தங்களது வாழ்க்கையில் நடந்த துயரச் சம்பவத்தின் பாதிப்பால் திருமணம் வேண்டாம் என்று வைராக்கியத்துடன் வாழ்பவர்களுக்கு அந்த தத்துவம் பொருந்தாது. இல்லற வாழ்க்கையில் ஒப்பந்தம் போட்டுக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கும் கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் உள்ள உறவு பாதையில் வரும் இன்ப, துன்பங்களைத் தான் சொல்கிறேன். மனித உடல் உணர்ச்சி என்ற மின்சாரத்தால் தான் உயிர் வாழ்கிறது. இன்னும் சொல்லப்போனால், கோபம், தாபம், பசி, அழுகை, மனஅழுத்தம், பயம், படபடப்பு ஆகிய உணர்ச்சிகள் மனித உடலில் பிரதிபலிக்கும். எல்லா உணர்ச்சிகளையும் மிஞ்சுவது செக்ஸ் உணர்வு தான் என்பதை யாராலும் மறுக்க முடியுமா? எங்கே நிம்மதி? எங்கே நிம்மதி? அங்கே எனக்கோர் இடம் வேண்டும். என்று வாழ்க்கையில் துன்பப்படுபவர்கள் எத்தனை பேர்? திருமணத்துக்கு முன்பு தோல்வியுற்ற காதல், கைகழுவிய காதல், தலைமுழுகிய காதல். இதில் ஏதாவது ஒன்றில் அகப்பட்டு நிம்மதியை இழந்த பின் வேறு ஒருவருடன் வாழ்க்கைப் பயணம் இணைந்து தாம்பத்ய வாழ்க்கையில் சந்தோக்ஷமாக பயணம் செய்து வெற்றியடைந்தவர்கள் ஒரு சில பேர்கள் என்பதைப் பார்க்கிறோம். வேறு ஒருவருடன் குடும்ப வாழ்க்கை நடத்தினாலும், தோல்வியடைந்த காதலை புரட்டிப் பார்க்க யாருமே தவறுவதில்லை. பல சமயங்களில் இளமை பருவத்தில் மின்னலாக தோன்றி மறைந்த காதலை அசைபோட்டு பார்ப்பதில் தனி சுகம் என்று பலரும் சொல்லக் கேட்டிருக்கிறேன். காதல் வெற்றி அடைந்தால் சுவையில்லை. தோல்வி அடைந்தால் தான் தனி சுகம். அப்போது தானே தோல்வியடைந்த காதல் நினைவுகளை வாழ்நாள் முழுவதும் மனதுக்குள் அசைபோட முடியும் என்று ஒரு போட்டோத் தோழி சொன்னதைக் கேட்டு எனக்கே அதிர்ச்சி. அப்படியென்றால், உன்னைப் பிரிந்து தேவதாசாக மாறும் உன் காதலன் மனதை யோசித்து பார்த்தாயா? என்று நான் அவளை திட்டன். மனித மனம் ஒரு விசித்திர குரங்கு. ஆணுக்கும், பெண்ணுக்கும் அது பொருந்தும்.ஆனால், காதலனை எளிதாக டைவர்ஸ் பண்ணமுடிந்த என் தோழிக்கு, அவளது எண்ணங்களுக்கு முரண்பாடான கணவனை மட்டும் டைவர்ஸ் பண்ண மனம் வரவில்லை. ஏன்? அது சமுதாய அங்கீகாரம். பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்த வாழ்க்கையில், பெற்றோர்களை பகைத்துக் கொண்டு கணவன், குழந்தைகளைப் பிரிந்து அவளால் எப்படி வாழ முடியும்? பெற்றோர்களுக்கு தெரியாமல் காதலிக்கும் பெண்களும் சரி, ஆண்களும் சரி. ஏதோ ஒரு காரணத்துக்காக காதலை இடைவேளையில் கொலை பண்ணிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்கள். அதில் பாதிக்கப்பட்டவர்கள் மனம் வேதனைத் தீயில் எரிந்து மனஅழுத்தம் ஏற்பட்டு இதயம் பலவீனமடையும். அதேபோலத்தான் தாம்பத்ய வாழ்க்கையும். அதில், இன்பமும், துன்பமும் மாறி, மாறி வந்தாலும், உடல் சங்கமத்தில் அனைத்து கவலைகளையும் மறந்து சந்தோசமாக இருப்பார்கள். அது கிடைக்காத பட்சத்தில், அந்த ஏக்கமானது மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, கோபம், எரிச்சல் என்று மாறிவிடும். இது நடைமுறை வாழ்க்கையில் கண்ட நிதர்சனமான உண்மை. மனஅழுத்தம் குறைவதற்கு உடலானது எந்தவித உணர்ச்சிகளையும் கொந்தளிக்கவிடாமல் சாந்தமாக இருக்க வேண்டும். எந்நேரமும் ஒருவர் கோபப்பட்டு கொண்டிருக்க முடியாது. வேலைகள், குடும்ப பிரச்னை, கடன் தொல்லை ஆகிய பிரச்னைகள் எல்லோரது வாழ்க்கையிலும் இருக்கக் கூடியது. அதை எந்த நேரமும் நினைத்துக் கொண்டிருந்தால் நிம்மதி தான் தொலைந்து போகும். அதை மறப்பதற்கு, ஒரு வடிகாலாக இருப்பதற்கு செக்ஸ் உணர்ச்சி தான் பொருத்தமாக அமையும். ஆனால், கணவன், மனைவி ஆகிய இருவருக்குமிடையே முரண்பட்ட எண்ணங்கள், செயல்பாடுகள் ஆகியவவை மனக்கசப்பை உண்டுபண்ணும். அதைப் போக்குவதற்கு, தாம்பத்ய உறவு தான் கைகொடுக்கும். இருவரிடையே பாசத்தையும், அன்பையும் உருவாவதற்கு ஸ்பரிசம் என்ற அன்பு தான் துணை நிற்கும். மனைவி அழுகிறாள் என்று வைத்துக் கொள்ளுங்கள். கணவன் தள்ளி நின்று வெறும் அலங்கார வார்த்தைகளால் ஆறுதல் சொல்வதை அவள் மனம் ஏற்றுக் கொள்ளாது. அவளது விழிகளில் வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துவிட்டு, தலையை ஆதரவாக வருடியவாரே அன்பாக ஆறுதல் சொன்னால், அந்த பெண் மனது ஆறுதலடையும். |