இனியெல்லாம் சுகமே! |
டாக்டர். ஷர்மிளா |
காதல் என்பது எதுவரை?
|
தாம்பத்ய வாழ்க்கையில் செக்ஸ் அவசியம் என்பதை மறுக்க முடியாது. ஆனால், செக்ஸ் தான் வாழ்க்கை என்று சிலர் வேதாந்தம் பேசுவது தவறு. `செக்ஸ்.......செக்ஸ்’ என்று மனைவியை விரட்டிக் கொண்டு திரியும் கணவர்களும் இருக்கிறார்கள். சபலிஸ்ட்களாக இருக்கும் ஆண்கள் பார்வையில் எல்லா பெண்களும் ஒரே மாதிரியாகத் தெரியும். காதலிக்கும்போது ஐஸ்கிரீம் போல் இருக்கும் லவ் அபெக்ஷன் திருமணத்துக்கு பின் மனைவியிடம் செக்ஸ் கிடைக்கவில்லை என்றால், விலை மாதுவை தேடிப் போய் தன் தாகத்தைத் தணிப்பது போன்ற செயலை என்னவென்று சொல்வது? நாளடைவில் தன் காதல் மனைவிக்கு எய்ட்ஸை அன்பு போட்டோசாக கொடுத்துவிட்டு தானும் மடியும் சோகமான நிலை ஏற்படலாம். இது போன்ற துயரமான சம்பவங்கள் ஏராளமாக நடக்கிறது. `நம்பி வந்து கரம் பிடித்த எத்தனையோ காதலிகள் கண்ணீர் கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்!’ என்ற சோகமான வரிகளை ஆண்கள் நினைத்து பார்க்கிறார்களா? என்றால் இல்லை! இரண்டு குழந்தைகளுக்கு தாயான மீராவின் வாழ்க்கையின் முதல் அத்தியாயம் காதல்...... இரண்டாவது அத்தியாயமோ கணவனின் டார்ச்சர் (சித்திரவதை). கல்லூரியில் அழகு ராணியாக வலம் வந்த மீராவுக்கு கவலை என்ற வார்த்தையின் அர்த்தமே தெரியாது. தினமும் மீராவை பார்ப்பதற்காக ரசிகர் கூட்டம் ரெடியாக இருக்கும். மீராவை காதலிக்கும் அதிர்ஷ்டசாலி யார்? என்று லாட்டரி சீட்டு விழாத குறையாக அலை மோதுவார்கள். அச்சமயத்தில் அனைத்து கல்லூரிகளுக்கு நடந்த பேச்சு போட்டியில் முரளி கலந்துக் கொள்ள வந்தார். பேச்சு போட்டியில் முதல் போட்டோசை முரளி தட்டிச் சென்றார். அன்றைய தினம் மீராவும் முரளியும் `ஹலோ’ என்ற வார்த்தையை போட்டோமாறி அறிமுகம் செய்துக் கொண்டனர். முதல் பார்வை.. முதல் சந்திப்பிலேயே இருவரது இதயத்திலும் லப்டப் ஓசைகள் வேக ஓட்டம் பிடித்தது. தினமும் முரளியை பார்க்காவிட்டால் மீராவுக்கு அன்றைய பொழுது துக்கநாள். முரளியும் மீராவின் விழிகளின் போட்டோமாற்றதுக்காக தவம் கிடப்பார். மின்னல் வேகத்தில் வளர்ந்த காதலுக்கு எதிர்ப்பு இல்லாவிட்டால் இனிக்குமா? மீராவின் அத்தை மகன் வில்லனாக மாறினான். மீராவின் வீட்டில் ருத்ரதாண்டவம். சுபயோக தினத்தில் வீட்டை உதறிவிட்டு வந்த மீராவை முரளி திருமணம் செய்து கொண்டார். இத்தனை நாட்கள் மனதில் சிறைப்பட்டு கிடந்த ஆசைகளுக்கு விடுதலை கொடுத்தார் முரளி. மீராவிடம் தினமும் 3 அல்லது 4 முறை என்ற தாம்பத்ய உறவு கொடிக்கட்டி பறந்தது. திருமணத்துக்கு முன் பல சந்தர்ப்பங்களில் மீராவை அடையத் துடித்த முரளிக்கு ஏமாற்றம். மேலோட்டமான உணர்ச்சிகளுக்கு மட்டும் பச்சைக் கொடி காட்டிய மீரா அடுத்தக் கட்ட உறவு மேரேஜ் ஆன பிறகுதான் என்று தடையுத்தரவு போட்டாள். என் மீது நம்பிக்கை இல்லையா? என்று ஏக்கத்தோடும், கோபத்தோடும் கேட்ட முரளியின் பிடிவாதம் வெற்றியடையவில்லை. ப்ளீஸ்.......... இப்பவே நீங்க எல்லை மீறினால் சலித்து போயிடும். மேரேஜுக்கு அப்புறம் ஓகே.......... என்று மீரா நாசூக்காக தவிர்த்து விட்டாள். அந்த வேகத்தை திருமணம் முடிந்த நாளில் இருந்தே முரளி காட்டினார். முதலில் சமாளித்த மீரா திணறிப் போனாள். அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷமாகும். உங்களுக்கு நான் வேண்டுமென்றால் அளவோடு வெச்சுக்கோங்க என்று அட்வைஸ் பண்ணியும் முரளி கேட்டபாடில்லை. முதல் ஆண் குழந்தை பிறந்து 3 வருட இடைவெளிக்குள் மற்றொரு பெண் குழந்தை பிறந்தது. பெற்றோரை எதிர்த்து விட்டு முரளியை திருமணம் செய்தது தவறா? என்று மீராவின் இதயத்தில் சிந்தனை ஓட்டம் அதிகரித்தது. இரண்டு சின்னக் குழந்தைகளை கவனிப்பதற்கே மீரா உடல் ஓய்ந்துவிடும். இரவிலோ...... கணவன் முரளியின் செக்ஸ் தொல்லை. இதனால், மீராவின் கர்ப்பபை வீக் ஆனது. அதிகமான உதிரப்போக்கு வேறு! காதல் பாஷைகளை பேசிய கணவன் உதட்டிலிருந்து கல் நெஞ்சமுடைய வார்த்தைகள் அம்பு போல் பாயும். நாளடைவில் தனது செக்ஸ் தாகத்தைத் தணிப்பதற்காக அவனது கால்கள் விலை மாது வீட்டை நோக்கி நடைப் போட்டது. விலைமாதுகளிடம் இலவசமாக வாங்கிய பால்வினை நோயினை காதல் மனைவி மீராவிக்கு அன்பு போட்டோசாக தந்தான். இப்போது, மீராவின் போட்டோதாப நிலையை எண்ணிப் பார்த்து அவளது தோழிகளே கண் கலங்குகிறார்கள். திருமணத்துக்கு முன் இனிக்கும் காதல். பலரது வாழ்க்கையில் கசக்கிறது. சிலரது வாழ்க்கையிலோ பரஸ்பரமாக ஒருவருக்கொருவர் தங்களது உணர்ச்சிகளை விட்டுக் கொடுத்து வாழ்ந்து விடுகிறார்கள். வாழ்க்கையில் காதல் இருந்தால்தான் தாம்பத்ய வாழ்க்கையில் தென்றல் வீசும். காதல் வெறும் கவர்ச்சி மாத்திரம் அல்ல. ஒருவரையருவர் போட்டோந்து கொள்ளும் உணர்ச்சிகளுக்கு மதிப்பு அளித்தல். காதல் கடிதங்கள். பார்வை போட்டோமாற்றங்களோடு தொடரும் காதல் நெருங்கி பழகும்போது சில மனவிரிசல்கள் ஏற்படுவதுண்டு என்பதை யாராலும் மறுக்க முடியுமா? நம்ம ஆளு சுதந்திர உணர்ச்சிகளுக்கு ஒத்துப் போவாரா? அவரை நம்ம வழிக்கு மாத்திடலாம்! என்று நினைத்து ஏமாறும் பெண்களும் இருக்கிறார்கள். பெண்களைப் பொறுத்தவரை பயந்தாங்கொள்ளி பட்டாம்பூச்சியாக சிறகடித்து பறக்காதீர்கள். உணர்ச்சிகளை தற்காத்து கொள்வதிலும், போராடுவதிலும், பெண் தேனியாக வாழவேண்டும். |