இனியெல்லாம் சுகமே! |
டாக்டர். ஷர்மிளா |
இதுதான் தடுமாற்றமா?! |
சின்ன வீடு சிக்கலைப் பற்றி கடந்த வாரங்களில் சொல்லியிருந்தேன். அதேபோல் கணவனுடன் வாழ்ந்து கொண்டு ரகசிய உறவை வளர்த்துக் கொண்டிருக்கும் எத்தனையோ பெண்கள் இருக்கிறார்கள். அதை தெரிந்தும், தெரியாமலும் கணவர்கள் மனதுக்குள் பூட்டி வைத்துக் கொண்டு மது பாட்டிலுடன் உறவாடிக் கொண்டிருக்கிறார்கள். அது பண்பாட்டுக்கு உகந்தது தானா? என்ற கேள்விக்கு அவர்கள் மனசாட்சி சொல்லும் பதில் தான் என்ன? என்று பார்த்தால் தடுமாற்றம்...தடுமாற்றம்..மனக்குழப்பம் ஆகியவற்றின் விளைவு, எதிரொலி என்றே சொல்லாம். கள்ளக்காதல், ரகசிய உறவு, சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்படும் உறவு ஆகியவற்றை பற்றி ஏற்கனவே சொல்லியிருந்தாலும், உறவுகள் தொடர்கதையாக வைத்துக் கொண்டிருக்கும் பெண்கள் சிலரால் அவரது குழந்தைகளின் எதிர்கால வாழ்க்கையை வீணாகிப்போகிறது என்பது நடைமுறை வாழ்க்கையில் நடக்கும் உண்மையான சம்பவங்கள். மனக்கட்டுப்பாட்டை காப்பாற்றும் பெண்கள், தங்களது வைராக்கியத்துக்காக வேலி தாண்டுபவர்களாகவும் இருக்கிறார்கள். இரண்டு, முன்று குழந்தைகளுக்கு தாயாக இருந்தாலும், செக்ஸ் உறவில் தடுமாற்றம், கணவனால் விரக்தி, சித்ரவதை, துன்பம் ஆகியவற்றை எதிர்கொள்ளும் பெண் தனது சோகத்தை, துன்பத்தை பகிர்ந்துகொள்ளஒரு ஆண் துணையைத்தேடுகிறாள். பெண்ணின் துயரத்தை துடைக்கும் ஆண் மெல்ல, மெல்ல அந்தப் பெண் இதயத்தில் புகுந்து சரீரங்கள் சங்கமிக்கும் அளவுக்குப் போய்விடுகிறது. அந்தப் பெண்ணுக்கு ஏதோ ஒன்றில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்ற மகிழ்ச்சி. அந்த ஆணுக்கோ ரகசிய உறவு ஒன்று கிடைக்கிறது என்ற திருப்தி. இது ஒரு குறிப்பிட்ட காலம் தான். அதன்பின் தான் தவறு செய்கிறோம் என்று போட்டோந்து கொண்டு திருந்துவதற்குள் சமுதாயத்தின் எச்சில் வார்த்தைகள் அவள் மீது அபிஷேகம் செய்துவிடுகிறது. அவளுக்கு சாபவிமோசனம் அளிப்பதை விட மீண்டும் வேட்டையாட சில ஆண் கழுகுகள் வட்டமிடும். இதற்கு
சமுதாயத்தில் எத்தனையோ சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. குடும்பத்தில் ஏற்படும்
மனவிரிசல்கள் இத்தகைய விளைவுகளை உண்டுபண்ணியுள்ளது. கணவனோ, தனக்குப்
பிடித்த விஷயங்களை மனவி ரசனையோடு கேட்கவேண்டும். தன்னுடைய
பொழுதுபோக்குகளுக்கு ஒத்துழைக்க வேண்டும். பல நோக்கங்களை போட்டோந்து
கொள்ளவேண்டும் என்று எண்ணுவார். அதேபோல், மனைவியும், திருமணத்துக்கு முன்
இஷ்டப்படி புத்தகம் படிப்பது, கைவினை பொருட்களை செய்வது, மனதுக்குப்
பிடித்த கதை, பாடல்களை விமர்சிப்பது போன்ற விஷயங்களை தன் தோழிகளுடன்
சொல்லி மகிழ்வாள். ஆனால், திருமணத்துக்குப் பின் பல கட்டுப்பாடு விலங்கை மனைவி கையில் கணவன் மாட்டுவது இயற்கையோடு ஒன்றிப்போன ஒன்று. அதில் சிலர் மட்டும் விதிவிலக்காக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். தனது ரசனைகளை மிதிக்கும் கணவனை படிப்படியாக அந்த மனைவி மனதளவில் ஒதுக்கிவிடுவாள். சில பெண்களோ நாளடைவில் தனக்கு மனதுக்குப் பிடித்த ஆணுடன் பழகத் தொடங்கிவிடுவாள். ஆண்களுக்கு மட்டும் சின்னவீடா? என்று தங்களது பங்குக்கும் போட்டிபோட வந்துவிடுவார்கள். வசதிபடைத்த குடும்பத்தில் பிறந்த பெண்கள் பலரது மனதில் ஈகோ அதிகமாக இருப்பது உண்மைதான். தனது ரசனைகளை ஏற்ற கணவன் கிடைக்காவிட்டால், திருமணத்துக்கு முன் பழகிய பாய்பிரண்ட்டுகளோடு தொடர்பு வைத்துக் கொள்கிறார்கள். அவர்களால் தாம்பத்ய வாழ்க்கை கட்டுப்பாடுகள் அறவே பிடிப்பதில்லை. தனது பாய்பிரண்டோடு படுக்கையறையில் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு துணிந்துவிட்ட சிலபெண்கள், தனது கணவரை தொட விடுவதில்லை. இதேபோல் பாதிக்கப்பட்ட பல ஆண்கள் அனுப்பிய கேள்விகளில் இருந்தே அந்த பாதிப்பு போட்டோகிறது. |