இனியெல்லாம் சுகமே! |
டாக்டர். ஷர்மிளா
|
சின்ன சின்ன ஆசை.. சின்ன வீடு ஆசை
|
சின்ன வீடு என்ற வார்த்தையைக் கேட்டாலே ஆண்களுக்கு இனிப்பான சமாச்சாரம். தாம்பத்ய உறவு கிடைக்கவில்லையென்ற ஏமாற்றம் அல்லது தனது மனதுக்கு பொருத்தமான மனைவியாக நடந்து கொள்வதில்லை என்பதில் ஏற்பட்ட வெறுப்பு. தனக்குப் பிடித்தமான விஷயங்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு நட்பு. இப்படி பல பிரிவுகளாக பிரிந்து சின்ன வீடு என்ற கான்சப்ட்டை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கிறார்கள், ஆண்கள். திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற பழமொழி பலரது வாழ்க்கையில் தலைகீழாக போய்விட்டது. பல வண்ணக் கனவுகளைச் சுமந்துகொண்டு முதலிரவில் அடியெடுத்து வைக்கும் ஆணோ, பெண்ணோ, ஐயோ, அம்மா..அப்பா.. போதுமடா சாமி என்று மனதுக்குள் அலறுவார்கள். நாளடைவில் சிலரது வாழ்க்கையில் வசந்தங்கள் வீசும். பலர் வாழ்க்கையில் புயல், சூறாவளி வீசும். நடைமுறை வாழ்க்கையில் கண்ட யதார்த்தமான உண்மை அது. அதே மாதிரி, கிளி மாதிரி பெண்டாட்டி. குரங்கு மாதிரி வப்பாட்டி. என்ற பழமொழி பலர் வாழ்க்கையில் உண்மையாகிப் போயிருக்கிறது. அழகான மனைவி வாழ்க்கைத் துணைவியாக கிடைத்தாலும், நரகமாக இருக்கிறது. எனக்கு நிம்மதியே இல்லை என்று கதறும் ஆண்களும் இருக்கிறார்கள். அழகான பெண்ணின் மனதில் பலவித கற்பனைகள் இருக்கும். அதற்கு நேர்மாறாக கணவன் கிடைத்தால், தங்களது வெறுப்பை கணவனிடம் காட்டுவார்கள். தாம்பத்ய உறவில் கணவனை சந்தோஷப்படுத்துவதை விட்டுவிட்டு வெறுப்பேற்றுவார்கள். உனக்கென்னடா, அழகான மனைவி. நீ கொடுத்து வைச்சவன் என்று நண்பர்கள் கமெண்ட் அடிப்பார்கள். ஆனால், அவனோ, மனதுக்குள் கண்ணீர் வடிப்பான். நான்கு சுவற்றுக்குள் நடக்கும் அக்கப்போர் அவனுக்கும், மனைவிக்கும் இடையில் நடக்கும். அவனது மனதில் புதைந்து கிடக்கும் ஆசைகளைத் தணிக்க அங்குமிங்கும் அலை மோதுவான். கடைசியில் அழகற்ற பெண் ஒருத்தி அவனது அனைத்து ஆசைகளையும் தீர்க்கும் போது உலகத்தையே மறந்துவிடுவான். மனசந்தோஷத்துடன் தாம்பத்ய உறவு கிடைப்பதிலேயே ஆண்கள் விரும்புவார்கள். அதற்காக பெண்களை ஒரேயடியாக குற்றம் சொல்லமுடியாது. தங்களது மனதுக்குள்ளேயே ஆசைகளை, கற்பனைகளை பூட்டி வைத்துக் கொண்டு ஆண்களிடம் வெறுப்பையும், கோபத்தையும் காட்டுவார்கள். அதனால், ஆண்கள் ஒரேயடியாக ஒதுங்கிப் போய்விடுவார்கள் என்று அவர்கள் நினைப்பதில்லை. தன்னை வர்ணிக்க வேண்டும். தன் மனதில் உள்ளதை அவனே கண்டுபிடித்து தன் ஆசையை, எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவேண்டுமென்பது பெண்ணின் இயல்பு. ஆனால், ஆண்கள் குணம் அப்படியல்ல. தன்னுடைய ஆசையை வெளிப்படுத்துவதிலேயே குறியாக இருப்பார். அதற்கு நேர்மாறாக பெண்கள் நடந்துகொள்ளும்போது வலுக்கட்டாயத்தின்பேரிலோ, மிரட்டி பணிய வைக்கும் முயற்சியில் ஈடுபடுவார். இதுதான் பலர் குடும்பத்தில் நடக்கிறது. பெண்ணுக்கு முடு வரும் சமயங்களில் ஆண்களுக்கு அதிர்ஷ்டம் இருக்க வேண்டும். சினிமாவில் வரும் காட்சிகள் போல தன் மனைவி தன்னுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பது ஆண்களின் எதிர்பார்ப்பு. ஆனால், ஆண்களின் ஆசைகளுக்கு எப்படியெல்லாம் ஒத்துப்போகவேண்டுமென்ற டெக்னிக் அல்லது வழிமுறைகளை குறிப்பிட்ட சதவீத பெண்களே கையாள்கின்றனர் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தாம்பத்ய உறவு, நடைமுறை வாழ்க்கை பற்றிய நுணுக்கங்களை பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு இல்லை என்பது உண்மை. அது பருவப்பெண் ஆனதிலிருந்து போதிக்க வேண்டியது கட்டாயமான ஒன்று. அதே
போல்,காமசூத்ரா திரைப்படத்தில் தொடு உணர்ச்சிகள், வருடல் போன்ற காட்சிகள்
தான் ஆரம்ப நிலை என்பதை போட்டோய வைக்கும் பாடங்கள் பலருக்குத் தேவை.
படித்து பட்டம் வாங்கிய பல பெண்கள் தாம்பத்ய வாழ்க்கையில் தோற்றுப் போய்
இருக்கிறார்கள். அதற்கு காரணம், பெற்றோர்கள் தங்களது பெண்களுக்கு வெறும்
கல்வியைப் போதித்தார்களே தவிர வாழ்க்கையில் வெற்றிபெறுவதற்கு ஏற்றவாறு
தாம்பத்ய உறவின் ரகசியங்களை, கணவன் என்ற பாத்திரத்தை தங்களது கையைவிட்டு
போகக் கூடாத அளவுக்கு ஏற்ப பல விஷயங்களை சொல்லி கொடுப்பதில்லை என்று
பெண்கள் இயக்கம் எடுத்த சர்வேயில் கண்டறியப்பட்டுள்ளது. கற்பனை குதிரையில்
வலம் வரும் ஆண்களின் வரைமுறையில்லாத ஆசைகளுக்கு கடிவாளம் போடும்
வித்தையையும், அவர்களை தங்களது கஸ்டடியில் வைத்திருக்கும் தலையணை
மந்திரமும் பெண்கள் கையில் தான் இருக்கு. எம் புருஷன் தான் எனக்கு மட்டும்
தான் என்று நினைச்சேன். ஆனா, அவருக்கு பல மலர்களை ருசி பார்க்கும் வண்டாக
இருக்கத்தான் ஆசை என்று ஆதங்கப்படும் பெண்களும் இருக்கிறார்கள். முதல் கோணல். முற்றும் கோணல் என்பது மாதிரி திருமணத்துக்கு முன் தனக்கு இப்படிபட்ட அழகான மனைவி, உடற்கட்டு, கலராக இருக்கனும் என்று கற்பனை பண்ணுவார்கள். ஆனால், பெற்றோர்கள் தனது மகனுக்கு வரதட்சணை, நகை எக்ஸ்ட்ரா..எக்ஸ்ட்ராவுடன் பெண் பார்த்து முடித்துவிடுவார்கள். அப்படிபட்ட கட்டாய திருமணத்தில் ஆரம்பத்திலேயே தனக்கு பிடிக்காத மனைவியுடன் ஏதோ ஒப்புக்கு வாழ்க்கை நடத்திவிட்டு, சின்ன வீடு அவஸ்தையும் அனுபவிப்பவர்களையும் பார்க்கிறோம். தன் மனைவியின் சகோதரியையும் தன் வசப்படுத்தி திருமணம் செய்யும் ஆண்கள் ஒருபக்கம். பிரசவ காலத்தில் ஜம்ப் ஆகும் ஆண்கள் சின்ன வீடு பொறியில் சிக்குகிறார்கள். அதற்கு உதாரணமாக எத்தனையோ சம்பவங்கள் இருக்கின்றன. |