இனியெல்லாம் சுகமே! |
டாக்டர். ஷர்மிளா
|
கணவன்மார்கள் கப்! சிப்!
|
மாதவிடாய் சுழற்சியையும், பல பிரச்சனைகளையும் மாதவிடாய் சமயத்தில் ஆண்களின் தொந்தரவு இருக்கக் கூடாது என்று விரிவாக கூறியிருந்தேன். அது பற்றிய விழப்புணர்வுதான் நமக்கு முக்கியம். மூன்று நாட்கள் உடல் அவஸ்தையை அனுபவித்தாலும் எப்படியோ கணவனின் தொல்லை விட்டால் சரி! என்று நிம்மதியாக பெருமூச்சுவிடும் குடும்ப பெண்கள் கண்டிப்புடன் அதை செயலில் காட்டுவது நல்லது. மாதவிடாய் சுழற்சியின்போது வாழ்க்கையிலும் சுழன்று பல இன்ப, துன்பங்களைச் சந்தித்துவிட்டு நாற்பத்தைந்து வயதை நெருங்கும் சமயத்தில் மாதவிடாய் சுழற்சி நின்றுவிடும். அதைதான் மெனோபாஸ் என்று சொல்வார்கள். அதாவது, பெண்களுக்கு உடல்ரீதியான அவஸ்தையில் இருந்து விடுதலை. ஆனாலும் சிலருக்கு கர்ப்பப்பை கோளாறுகள். யூட்ரஸை அகற்றும் அளவுக்கு கட்டி மற்றும் பல பிரச்சனைகள் வருகின்றன. குடும்ப பொறுப்பு சுமை அதிகரிக்கும் நாற்பத்தைந்து ஐம்பது வயதில் மொனோபாஸ் கட்டம் வரும். அப்போது, பெண்களின் உடல்நிலை மாறுதலின் போது மனரீதியாக பல மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு
தங்களிடம் இருந்து ஒரு தகுதி பறிபோய்விடுகிறது என்ற மனப்பான்மை பொதுவாக ஏற்பட்டாலும், மாதவிடாய் சுழற்சி நிற்கும் சமயத்தில் கர்ப்ப பையில் பல கோளாறுகள் ஏற்படுகின்றன. பெரும்பாலான பெண்கள் மெனோபாஸ் நிலமை ஏற்பட்டதும் சந்தோஷப்படுகிறார்கள். பதிமூன்று வயதில் துவங்கும் மாதவிடாய் பருவம் 35 வருடங்களாக நீடித்த பின்பே நின்றுவிடுகிறது. எனவே, அந்த சமயங்களில் விரக்தி, வெறுப்பு, எரிச்சல், அதிகமான கோபம், எதற்கெடுத்தாலும் சலிப்பு ஆகிய மாறுதல்கள் உடல் ரீதியாக ஏற்படுகிறது. குடும்ப சுமை அதிகரிக்கும் அந்த வயதில் இனம் போட்டோயாத கோபதாபத்தால் பின்விளைவுகளும் ஏற்படும். மெனோபாஸ் நிலைமையை எட்டிய பெண்கள் சிலர் எங்களுக்கு தாழ்வு மனப்பான்மை வருகிறது. ஆனாலும், ஒரு சந்தோஷம். மாதவிடாய் பிரச்சனை இல்லாமல் கோவில்களுக்கும் மற்ற விசேஷங்களுக்கும் செல்லலாம் என்று குதூகலிக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அதேவேளையில், தாம்பத்ய உறவுக்கு தங்களது மனைவிகள் தடை போடுவதாக ஆண்கள் பலர் கேள்வி எழுப்பியிருந்தார்கள். இத்தனை வருடம் அனுபவித்தது போதாதா? குழந்தைகள் வளர்ந்து விட்டனர். இனி கூடவே கூடாது! என்று கூறி விடுகிறார்கள் என்று வேதனைப்படுகிறார்கள். பெண்கள் தடை விதிப்பது தவறு என்பது என் வாதம். கணவன் -மனைவி இருவருக்கும் இடையில் உடல் ரீதியான ஒரு தொடர்பு இருக்கும்வரை ஒரு நெருக்கம் இருக்கும். அது மறுக்கப்பட்டால் இல்லற சுகம் கிடைக்கும் பெண்களை தேடி வலை வீசுவார்கள். அதனால், குடும்பத்தில் பல பிரச்சனைகள் தலை தூக்கும். இளமைக் காலத்தில், திருமணம் ஆன முதல் பத்து வருடங்களில் தாம்பத்ய உறவு என்பது எதிர்பார்ப்பு கலந்த சந்தோஷத்தை அளித்தாலும், நாற்பத்தைந்து, ஐம்பது வயதை நெருங்கும் ஆண் செக்ஸ் உறவை அதிகம் எதிர்பார்ப்பது தவறே அல்ல. அதிகான வேலை பளு, குடும்ப, நிர்வாக பிரச்சனைகள், கவலைகள் தலைதூக்கும் நாற்பத்தைந்து, ஐம்பது வயதில் மன இருக்கம், மன உளைச்சல் ஆகியவற்றை தவிர்க்கும் சிகிச்சையே தாம்பத்ய உறவுதான். அளவுக்கதிகமான டென்ஷனை தன்னுடைய வாழ்க்கை துணைவியான மனைவியிடம் பங்குப் போட்டு கொள்வதில் தவறே இல்லை. ஆனால், குடும்ப பெண்கள் பலர் உடல் ரீதியான பிரச்சனைகளில் அந்த வயதில் தான் அவதிப் படுகின்றனர். எனவே, கணவனின் ஆசைகளை, எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத நிலைமையிலும் உள்ளனர். நல்ல ஆரோக்கியமாக இருக்கும் பெண்களோ, ச்சே..... அதை பற்றி பேசவே கூடாது! என்று எச்சரிகையை விடுப்பதால் கணவன்மார்கள் கப்சிப்! அப்புறம் தங்களது நண்பர்களுடன் சேர்ந்து ஜாலியான உறவுக்கு ரூட் போடுவா£க்ள். அது பலரது குடும்பத்தில் நடந்து வருகிறது. பெண்களுக்கு அந்த ஏக்கம் இருந்தாலும், சிலரது குடும்பத்தில் கண்டிப்புடன், பள்ளி ஹெட்மாஸ்டர் போல கறாராக அதட்டும் கணவன்மார்களிடம் இருந்து அன்பு, பாசம், அரவணைப்பு எதையும் எதிர்பார்க்க முடியாது. தாம்பத்ய சுகத்தை மட்டும் எப்படி எதிர்பார்க்க முடியும்? முக்கிய பொறுப்பில் அல்லது உயர் அதிகாரியாக இருக்கும் கணவனோ எந்நேரமும் வேலை, வேலை என்று இயந்திரத்தனமாக இருப்பதால், தன் மனைவிக்கு சுகத்தை கொடுக்காவிட்டாலும் அவளது உடல்நிலையைக் கூட கவனிக்க முடிவதில்லை. தனது மனைவிக்கென்று வாரத்தில் ஒருநாள் ஒதுக்கி வைத்துவிட்டு, அவளை பார்க், பீச் என்று அழைத்து சென்று சில விஷயங்களை மனம் விட்டு பேசி ஒரு நெருக்கத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். இது எத்தனை பேர் குடும்பத்தில் நடக்கிறது? என் பொண்டாட்டி ஊருக்கு போய்ட்டா ஜாலிதான் என்று குஷியாகும் ஆண்கள் தான் அதிகம். தாம்பத்ய உறவுக்கு மனைவியின் உடல்நிலை எதிராக இருந்தாலும், தொடு உணர்ச்சிகள், அன்பான வருடல், முத்தம் ஸ்பரிசத்தின் மூலம் மன இறுக்கத்தைப் போக்கலாம். அதைவிடுத்து தினமும், சாப்பாடு என்னாச்சு? என் துணிகளை வாஷ் பண்ணியாச்சா? டிபன் ருசியாக இல்லை என்று குடும்ப பிரச்சனைகளிலே மனைவியை விரட்டிக் கொண்டிருப்பதில் ஒரு மகிழ்ச்சியும் இருக்காது. பொதுவாக, நாற்பது வயதுக்கு மேல் கணவனும் மனைவியும் போட்டோந்துக் கொள்வதில் அனுசரித்து போவதில் ஏகப்பட்ட மனகுறைகள் இருக்கிறது என்பதில் கண்கூடாக பார்த்திருக்கிறோம். அதனால் குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் பல குழப்பங்கள், சண்டை சச்சரவுகள் ஏற்படுகிறது. யார் பேச்சை கேட்பது? என்று தன்மானத்துடன் பட்டிமன்றம் போட்டு கத்துவார்கள். அதை பார்க்கும் குழந்தைகளின் மனநிலை எப்படி இருக்கும்? நடுத்தர வயதைத் தாண்டிய பெண்களுக்கு தாம்பத்ய உறவில் ஆசை இருக்கும். அதைப் பற்றிய ஏக்கங்களையும் சுமந்துக் கொண்டு நடமாடும் நடுத்தர வயதைத் தாண்டிய பெண்களுக்கு தாம்பத்ய உறவில் ஆசை இருக்கும். அதைப் பற்றிய ஏக்கங்களையும் சுமந்துக் கொண்டு பேசுவது. பிறர் முன்னால் இவர் கையாலாகாதவர், அவருக்கு ஒன்றும் தெரியாது என்று பேசும்போது கூனி குறுகிப் போகிறோம். அப்படிப்பட்ட மனைவியிடம் ஆசையுடன் பேசவே முடியாது. இதில் அவளை தொடுவதா? அம்மாடியோவ்..... அவள் பத்ரகாளியாகி விடுவாள் என்று ஓட்டம் பிடிக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். அதாவது, ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. ஒரு பரஸ்பர அன்புடன் நெருங்கி உறவு வைத்துக் கொள்வதையே விரும்புகிறார்கள். மன இறுக்கம், டென்ஷன், பயம், அவமானத்தால் நெளிதல் ஆகிய உணர்ச்சிகளுடன் தாம்பத்ய உறவில் ஈடுபட்டால் முழு மகிழ்ச்சி எப்படி கிடைக்கும்? மெனோபாஸ் நிலையை அடையும் பெண்கள் இனியாவது தங்கள் உடலுக்கு ஓய்வு வேண்டும், தாம்பத்ய உறவுக்கு டாட்டா, மாதவிடாய் தொல்லைக்கும் டாட்டா என்று நிம்மதியாக இருந்தாலும் தாம்பத்ய உறவின் ஏக்கங்களை பகிர்ந்து கொள்ள தயக்கம், வெட்கத்தை விட்டு கணவனை தங்களது அன்பு பிடியில் தக்க வைப்பதில் முயற்சி செய்ய வேண்டும். உங்களது ஆசைகளை உங்களவர் பூர்த்தி செய்கிறாரோ இல்லையோ? உடல்ரீதியான உணர்ச்சிகளைப் போட்டோந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும |