கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2024-04-18
7:31 PM

Welcome Guest | RSS Main | நீ பாதி நான் பாதி! | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

இனியெல்லாம் சுகமே!
டாக்டர். ஷர்மிளா
நீ பாதி நான் பாதி!

குறிப்பறிந்து நடந்து கொள்ளும் ஆண்களை பெண்கள் போற்றுகிறார்கள். அதுதான் இருவருக்கும் இடையில் அதாவது, கணவன், மனைவிக்கு இடையே பரஸ்பர அன்பு, ஒருவரது உடல்நிலையில் ஏற்பட்ட துன்பத்தைப் போட்டோந்து கொண்டு தங்களது ஆசைகளைக் கட்டுப்படுத்தி விட்டு கொடுப்பதால் மனரீதியான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

தாம்பத்ய உறவில் விட்டுக் கொடுப்பது என்பது நடைமுறை வாழ்க்கையில் சகஜமானது. எனவே, மனைவியின் உடல்நிலையில் ஆண்கள் அக்கறை காட்டாமல் வேறு யார் காட்டுவார்கள்? நீ பாதி நான் பாதி என்று இன்ப, துன்பத்தை பகிர்ந்து கொள்வதில் தவறு ஏதும் இல்லை.

படுக்கையறை சுகத்தில் மட்டும் பங்கெடுத்துவிட்டு, அந்த மூன்று நாட்கள் வந்துவிட்டால் அடச்சே! என்று முகம் சுழிக்கும் ஆண்கள் தான் அதிகம் என்று பல குடும்ப பெண்களே கண்ணீர் விடுகின்றனர்.

பொதுவாக, அந்த நாட்களில் பெண்களை தொட்டாலே தீட்டு என்று கூட இன்னும் சொல்வார்கள். பூஜை அறைக்கு செல்வதை தவிர்ப்பார்கள். இதெல்லாம் நமது பண்பாட்டுக்காக விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்

அதேபோல், தான் உடல் ரீதியாக உறவும். இதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன். சகாயராணிக்கு திருமணம் ஆகி மூன்று வருடங்களாகி விட்டன. ஒரு பெண் குழந்தையும் பிறந்தது. அவளது கணவர் ஜார்ஜ் பிரபல கம்பெனியில் உதவி மேனேஜராக வேலை பார்த்து வந்தார்.

என் கணவருக்கு வாரத்தில் நான்கு, ஐந்து நாட்களில் தாம்பத்ய உறவு வேண்டும். அவருடைய ஆசையை நான் பூர்த்தி செய்து வந்தேன். எனக்கு பீவர் இருந்த நேரத்தில் கூட என்னை அவருக்கு பலமுறை கொடுத்துள்ளேன்.

ஆனால் அந்த மூன்று நாட்களில் அவரை சமாளிக்க முடியவில்லை. முதல்நாள் ரொம்ப அவஸ்தையாக இருக்கும் என்பதால், ஒதுங்கிவிடுவார். இரண்டாவது மூன்றாவது நாட்களில் விடமாட்டார். பாதுகாப்பு உறையுடன் உறவு கொள்கிறேன் என்று பிடிவாதமாக என்னை கட்டாயப்படுத்துவார்.

அவருடைய வேகத்தைப் பார்த்து பயந்து வேறு வழியில்லாமல், என் வலி, வேதனையை பொறுத்துக் கொள்வேன். அதன்பின்பு எனக்கு அதிகமான ரத்தபோக்கு வரும். எனக்கு நானே அழுது கொண்டு சமாளித்துவிடுவேன். மூன்று, நான்கு நாட்கள் ஆவதற்குள் இரண்டு முறையாவது உறவு வைத்துக் கொள்வார். நானும் பலமுறை எடுத்து சொல்லியிருக்கிறேன்.

எல்லாம் எனக்கு தெரியும். அந்த நாட்களில் உறவு கொள்ளலாம். என் பிரண்ட்ஸ§ம் அப்படித்தான் பண்றாங்கன்னு சொன்னார். அந்த நாட்களில் நான் உறவு வைத்து கொள்ள மறத்துவிட்டால், வேறு எங்காவது கால் கேர்ள்ஸ் பக்கம் போய்விட்டு எனக்கு ப்ரீயாக எய்ட்ஸ் நோயை கொடுத்துவிடுவாரோ என்று பயம்

அதனால் பிரசவ வலியைப் பொறுத்துக் கொள்வது போல உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கிறேன். என்ன செய்வது டாக்டர்? என்று கேட்டிருந்தார்.

ஆண்களிடம் மற்றொரு தவறான பழக்கமும் இருக்கிறது. கணவன்-மனைவிக்கு இடையில் உள்ள அந்தரங்கமான பிரச்சனைகளை, படுக்கை அறை உறவுகளைப் பற்றி நண்பர்களுடன் டிஸ்கஸ் பண்ணுகிறார்கள்.

ஏற்கனவே குழம்பி போயிருக்கும் நபரை தங்களுக்கு தெரிந்த அரைகுறை தகவல்களை வைத்து உசுப்பி விடுவார்கள். எனக்கு ஒரு டாக்டரே சொன்னார் என்று பொய் சொல்வார்கள். எல்லாம் தெரிந்த மாதிரி அந்த மூன்று நாட்களில் உறவு வைக்கலாம். நானே பண்ணுகிறேன் என்று தங்களது கோஷ்டிக்கு ஆள் சேர்ப்பார்கள்

தனது வாழ்க்கையில் சுக, துக்கத்தில் பங்கு எடுக்கும் மனைவியின் வேதனையை போட்டோந்து கொள்ளாமல், மனைவியிடம் தங்களது மனதில் எழுந்த சந்தேகங்களை கேட்காமல் நண்பர்கள் சொன்னதை மட்டும் வேதவாக்காக நினைத்துக் கொண்டு மனைவியை கட்டாயப்படுத்துவது நியாயம்தானா? என்று அவர்கள் எண்ணி பார்க்க வேண்டும். ஜார்ஜ் விஷயத்திலும் அப்படியே! ராணியும் தன் கணவனிடம் மிகவும் பணிந்து போனது தவறு. தன் உடல்நிலையை, பின்விளைவுகளை பக்குவமாக எடுத்து சொல்லி இருக்கலாம். உங்களது உணர்ச்சிகளை கட்டுபடுத்தாமல், தடுமாறி போய் வேறு எங்கேனும் போய்விடாதீர்கள். எனக்கு எய்ட்ஸை போட்டோசாகத் தராமல் இருந்தால் சரி என்று ஜார்ஜிடம் எடுத்து சொல்லுங்கள் என்று ராணிக்கு அட்வைஸ் பண்ணினேன். பெரும்பாலான பெண்கள் தங்களது உடல்ரீதியான வேதனைகளை தங்களுக்குள்ளே பூட்டி வைப்பது தான் பிரச்சனையே. அதுக்காக ஒரேயடியாக ஆண்களை பயமுறுத்தக்கூடாது. நம்ம மனைவி போட்டோப்பேரான பஸ் எனவே, ஸ்பேர் பஸ்ஸை ஓட்டிக் கொண்டு போகலாம் என்ற மனப்பான்மை வந்துவிடும்.

திருமணத்துக்கு முன்பே, தங்களது பெண்களுக்கும் நடைமுறை வாழ்க்கையில் மூன்று நாட்கள் வேதனை, கணவனது தொல்லை அதை சமாளிப்பது பற்றியும் மனரீதியாக எப்படி சமாளிக்க வேண்டும் என்பதை ஒரு தாயார் சொல்லித்தரலாம். ஏனென்றால் வாழ்க்கையில் முழு அத்தியாயங்களை போட்டோந்து கொண்டு வேதனைகளை அனுபவித்த ஒரு பெண்ணால்தான் தன் மகளுக்கு பிரச்சனைகளை எதிர்கொள்வதை சொல்லிதர முடியும்.

எனக்கு தெரிந்தவரையில் அறுபது சதவீத குடும்பங்களில் தங்களது பெண்களுக்கு நடைமுறை வாழ்க்கையில் தாங்கள் சந்தித்த வேதனைகள், அதாவது தாம்பத்ய உறவில் உடல்ரீதியாக சமாளித்த போராட்டங்களை சொல்வதில்லை. அதற்கு காரணம், நம் பெண்ணிடம் செக்ஸ் விவகாரங்களை சொல்வதா? என்று கூச்சப்பட்டு சொல்ல மறுக்கிறார்கள்.

தங்களது பெண்கள் தாமாகவே தெரிந்து கொள்வாள் என்று நீச்சல் தெரியாதவரை நடுக்கடலில் தள்ளிவிட்டதுபோல் திருமண வாழ்க்கையில் ஒருத்தன் கையில் பிடிச்சு கொடுத்தாச்சு. அப்பாடா! என்று நிம்மதியுடன் இருந்துவிடுகிறார்கள்

திருமணம் ஆன பெண்ணோ ஒவ்வொரு பிரச்னைகளிலும் போராடி, கண்ணீர் வடித்து, சந்தேகங்களை வெளியில் கேட்பதா வேண்டாமா? என்று தங்களது மனதுக்குள் பூவா, தலையா? போட்டு பார்த்துவிட்டு தனது மனதுக்குள்ளே பூட்டி வைத்துக் கொண்டு கண்ணீர் வடிப்பாள்.

எனவே, ஒரு தாய் தன் மகளை திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போது, தாம்பத்ய உறவில் உள்ள வேதனைகளை, துன்பங்களை போக்கும் வழிமுறையையும் சமாளிக்கும் மனப்பக்குவத்தையும் சொல்லித்தர வேண்டும

Login form
Login:
Password:

Search

Calendar
«  சித்திரை 2024  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2024 Create a free website with uCoz