இனியெல்லாம் சுகமே! |
டாக்டர். ஷர்மிளா
|
துன்பம் என்றும் பெண்களுக்கே!
|
துன்பம்
என்றும் ஆணுக்கல்ல. அது அன்றும் இன்றும் பெண்களுக்கே! நீ இங்கு சிந்திய
கண்ணீரில் இந்த பூமியில் கானகம் நனைந்ததம்மா என்ற பாடல் வரிகளில் ஆயிரம்
அர்த்தங்கள் உள்ளன. பெண்ணாக பிறந்த எல்லோருமே தலையணையில் முகம் புதைத்து
கண்ணீர் விட்டு அழும் பேதைகள்தானே! தாய்மை
பேறு என்ற அந்தஸ்த்து மட்டும் சமூகத்தில் எந்த அளவுக்கு மதிக்கப்படுகிறது.
பன்னிரண்டு வயது வரை துள்ளி திரியும் பெண் பூப்பெய்த பின்பே அவருக்கு உடல்
ரீதியாகவும், மன ரீதியாகவும் கட்டுபாடு வேலி போடப்படுகிறது. பூப்பெய்தல்
என்ற மாதவிடாய் பருவம் பெண்மையின் தாய்மை பேறுக்கு அடையாளம் என்றாலும்,
அது பெண்களை பொறுத்தவரையில் எப்படிப்பட்ட வேதனை என்பது பெண்கள் அறிந்த
உண்மை. மாதவிடாய் வேதனையையும், பிரசவ வலியையும் மாறி மாறி அனுபவித்து
வரும் பெண்மையின் துன்பத்தை ஆண்கள் போட்டோந்து கொண்டால் போதும். எங்களது
வேதனைகளை, நாங்கள் படும் நரக வலிகளை ஆண்கள் பொருட்படுத்துவதில்லை என்று
நூறு சதவீத பெண்கள் குமுறுகின்றனர். அது நியாயம் தான்! ஒரு பெண் பூப்பெய்த நாளில் இருந்து தனது கற்பை காப்பாற்றிக் கொள்ள போராடுகிறாள். இளம் பருவத்தில் காதல் விபத்தில் சிக்கித் தடுமாறினாலும் தனது கற்பை பாதுகாக்காமல் பறிகொடுத்துவிட்டு துடிதுடிக்கும் அப்பாவி பெண்கள் ஒருபுறம். திருமண வாழ்க்கையில் நுழைந்த பெண்கள் கணவன், மாமியாருடன் நித்தமும் போராடி, தனது உடலுடன் போராட்டம் நடத்தியே வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அதற்காக, பெண்கள் தவறே செய்யவில்லை என்று கூறவில்லை. பெண்களின்
குணத்திலும் நிறைய மாறுதல்கள் உண்டு. அடங்காபிடாரி, அதிகபிரசங்கி,
ராட்சசி, பிசாசு என்ற பட்டங்களை சுமந்து கொண்டு வாழும் பெண்களும்
இருக்கிறார்கள். பிறருடன் ஒத்துப் போகாமல் கணவனை மதிக்காமல் தனது
பிடிவாதத்தை விட்டுக்கொடுக்காமல், பொறாமையோடு உயர்ந்த மனப்பான்மையோடு
(சுப்பீரியாரிட்டி காம்ப்ளக்ஸ்) ஆண்களை மட்டம் தட்டி மகிழும் பெண்களும்
இருக்கிறார்கள். என்னோட ரசனைகளுக்கு என் ஹஸ்பண்ட் ஒத்து வரவில்லை என்று
உதாசீனப்படுத்தும் பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால்,
மாதவிடாய் என்ற உடல் ரீதியான மாற்றத்தில் பெண் எந்தெந்த விதத்தில்
பாதிக்கப்படுகிறாள் என்ற கருத்துக்கான விடைகளை மட்டும்தான் சொல்கிறேன்.
நிறைய பேர் மாதவிடாய் பருவத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளலாமா? அந்த
சமயத்தில் எங்களது கணவர்கள் தொல்லை தாங்க முடியவில்லை. அவர்களது
உணர்ச்சிகளுக்கு வடிகாலாக மட்டும் நினைக்கிறார்கள். நாங்கள் படும் வேதனையை
போட்டோந்து கொள்ள மறுக்கிறார்கள். அதை நினைத்து எங்களை பல சமயங்களில் பழி
வாங்குகிறார்கள், துன்புறுத்துகிறார்கள். கடுமையான வார்த்தைகளால்
திட்டுகிறார்கள் என்று நிறைய சகோதரிகள் கேள்வி கேட்டிருந்தீர்கள். உங்களது நியாயமான கேள்விகளில் எத்தனையோ குமுறல்கள் புதைந்து கிடக்கிறது. உங்களது வேதனையை நீங்கள் யாரிடம் பகிர்ந்து கொள்ள முடியும். லைப் பார்ட்னரான உங்களது கணவரே உங்களது உணர்ச்சிகளைப் போட்டோந்து கொள்ளாமல் நைப் பார்ட்னராக மாறினால் என்ன செய்வீர்கள்? பொதுவாக மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் மாறுபாடுகள்! இதுமட்டும்
அல்லாமல் குடும்ப பெண்களுக்கு குடும்ப கவலை, குழந்தைகளை பராமரிப்பதில்,
அன்றாட வீட்டு வேலைகள், கணவனுக்கு பணிவிடை, சமையல் வேலை, மாமியார் அல்லது
உறவினர் கொடுக்கும் தலைவலி. ஆக, இத்தனை சுமைகளுக்கு நடுவே மாதவிடாய்
வேதனை. அந்த உடல் ரீதியான சித்ரவதைகளுக்கு மத்தியில் மாதவிடாய் என்று
தெரிந்தும் மனைவியை உறவுக்கு அழைக்கும் ஆண்களை மிருகத்துக்கு ஒப்பிடலாம்.
தன் மனைவி வேதனை என்ற புதைக்குழியில் சிக்கி தவிக்கிறாள் என்று அறிந்தும்
அவளது மனதுக்கு, உடலுக்கு ஓய்வு கொடுக்காமல் தன் உணர்ச்சிகளுக்கு வடிகாலாக
நினைப்பது தவறு! தப்பு! சிறுமி
பருவத்தில் இருக்கும் பெண் பன்னிரெண்டு, பதிமூன்று வயதை நெருங்கும்
சமயத்தில் அவளுடைய உடல் வளர்ச்சி, ஹார்மோன்கள் சுரப்பு மூலம்
பூப்பெய்துகிறாள். அதாவது, பெண் குழந்தை கருவிலிருந்து வளரும்போதே
வயிற்றுக்குள் இரண்டு சினை பைகள் தோன்றும். சிறுமி பருவ வயதை எட்டியவுடன்
அந்த இரண்டு சினைப் பைகளில் ஈஸ்ட்ரொஜன், புரொஜஸ்ட்ரான் என்ற இரண்டு
ஹார்மோன்கள் சுரக்கத் தொடங்கும். முதன் முதலாக சுரப்பதை பூப்பெய்து
விட்டாள் என்று சொல்லுகிறோம். அதற்காக சமூகத்தில் அந்தப் பெண்
மணவாழ்க்கைக்கு தகுதியானவள் என்று அறிவிப்பதற்காகவே சடங்கு விழாவை
நடத்துகிறார்கள். அப்போது முதல் அந்த பெண்ணின் கர்ப்பப்பை பலம்
பெறுவதற்காக உணவுகளை அக்கறையுடன் பெற்றோர்கள் கொடுப்பது ஒன்று. திடீர்
வயிற்றுவலி மூலம் மாதவிடாய் நிகழ்ச்சி உடலில் ஏற்படுகிறது. இதுக்கு தான்
பெண்ணாய் பிறக்கக் கூடாது என்று இளம் பெண்கள் சலித்துக் கொள்வார்கள்.
முப்பது நாட்களுக்கு ஒருமுறை ஒவ்வொரு மாதமும் கர்ப்பபையில் இருந்து
சினைமுட்டைகள் வெளியேறுவதற்கு ஈஸ்ட்ரெஜன், புரொஜஸ்ட்ரான் என்ற இரண்டு
ஹார்மோன்களும் உதவி செய்யும். கருவை உருவாக்கும் இந்த சினை முட்டைகள்
கர்ப்ப பையின் சுவற்றில் பதிந்து ரத்தத்துடன் வெளி வருவதே மாதவிடாய்
பருவம். அதே போல், ஆணின் விந்து அணுக்களுடன் சினை முட்டைகள் இணையும்போது
மாதவிடாய் நிகழ்ச்சி தடைப்பட்டு, கர்ப்ப பையில் கரு உருவாகிவிடும். ஆனால்,
பெண் தன் வயிற்றில் கருவை சுமக்கும் போது மாதவிடாய் சுழற்சி நடைபெறுவது
இல்லை. மாதவிலக்கு சுழற்சி இப்படித்தான் நிகழ்கிறது. மாதவிடாய்
பருவத்தின்போது அதிகமான ரத்தப்போக்கு, வயிற்றுவலி, சோர்வு இருக்கும்.
எனவே, அந்த சமயத்தில் வெறுப்புணர்ச்சியே மேலோங்கி நிற்கும். அந்த
உணர்ச்சியை பெண்கள் வெளிக்காட்டுவார்கள். கோபம், எரிச்சல், எதையோ
பறிகொடுத்தது போல விரக்தி உணர்வு இருக்கும். அதை வெளியில் யாரிடமும்
பகிர்ந்து கொள்ள கூட தயக்கமும், வெட்கமும் வரும். உடல் ரீதியாக கலந்து
விட்ட அந்த மாற்றத்தை எப்படி மற்றவர்கள் குறிப்பாக ஆண்கள் போட்டோந்து
கொள்ள முடியும்? அவர்களுக்கு எப்படி போட்டோய வைக்க முடியும்? கல்லூரியில்
படிக்கும் பெண்கள் பலருக்கு இந்த மாதவிடாய் பிரச்சனையில் எத்தனையோ
போராட்டங்கள். அவர்கள் நார்மலான மனநிலைக்கு வருவதற்கு நான்கு அல்லது ஐந்து
நாட்கள் ஆகலாம். எனவே ஒவ்வொரு ஆணும் பெண்ணின் வாழ்க்கையின் முதல்
அத்தியாயத்தில் நடக்கும் மாதவிடாய் என்ற பூப்பெய்தல் நிகழ்ச்சியால்
பெண்ணின் உடலில் ஏற்படும் மன, உடல் ரீதியான மாற்றங்கள், உணர்ச்சிகளின்
தடுமாற்றங்கள், வேதனைகளை அறிந்து கொள்வது அவசியம். ஒவ்வொரு
மனைவியும், தனது கணவனுக்கு கூச்சபடாமல் தனது உடல் ரீதியான பிரச்சனைகளை
மனம் திறந்து சொல்ல வேண்டும். அந்த சமயத்தில், தனக்கு வரும் வெறுப்பு,
கோபம், தளர்ச்சி போன்ற உணர்ச்சிகளை எடுத்து சொல்ல வேண்டும். அப்போது தான்
அவர்களது செக்ஸ் தொந்தரவில் இருந்து நீங்கள் தப்பிக்க முடியும். உங்களை
காத்துக் கொள்ளவும் முடியும். மாதவிடாய் சமயத்தில் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்ளலாமா? என்பதை அடுத்த வாரம் விரிவாக சொல்கிறேன்............... |