கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-02-09
3:29 AM

Welcome Guest | RSS Main | காதல் தோல்வி - மனப் போராட்டம்! | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

இனியெல்லாம் சுகமே!
டாக்டர். ஷர்மிளா
காதல் தோல்வி - மனப் போராட்டம்!

காதல் தோல்வியோட வாழ்க்கையில் இணைகிறவர்கள் எத்தனையோ பேர். அந்த எண்ணத்துடன் ஆண், பெண் இருபாலர்களில் நடைபிணமாக வாழ்பவர்களும் இருக்கிறார்கள். திருமணத்துக்கு முன்பு நடந்த பிளாஷ்பேக் சம்பவங்களை மறந்துவிட்டு தாம்பத்ய வாழ்க்கையில் சந்தோஷமாகவும் சிலர் ஈடுபடுகிறார்கள்.

தாம்பத்ய உறவில் இணையும் தம்பதிகளின் மனநிலை மகிழ்ச்சியோடு இருந்தால்தான், பெண்மையின் வயிற்றில் உருவாகும் கருவும் நல்லமுறையில் வளர்ச்சியடையும். ஆண்மையின்; சந்தோஷத்துடன் வசந்தங்களை சுமந்து கொண்டு தன்னையே அர்ப்பணிக்கும் பெண்மையோ, தனக்கு விருப்பமில்லாவிட்டால், நத்தையானது தனது உடலை தனது உடல் மேல் கவசமாக ஒட்டிக் கொண்டிருக்கும் ஓட்டுக்குள் படக்கென்று உடலை இழுத்துக் கொள்ளும். அதுமாதிரி தான் பெண்ணின் உணர்ச்சிகளும். தனது உணர்ச்சிகளை வெளிக்காட்டாமல் உள்வாங்கிக் கொள்வார்கள்.

திருமணத்துக்கு முன்பு தனது இதயத்தில் ஒருவனை சுமந்துக் கொண்டு, அவனோடு பழகி, முத்தம், கட்டியணைப்பு வரை சென்றுவிடும் பெண், பெற்றோர் எதிர்ப்பு, காதலன் கைவிரிப்பு, கட்டாய திருமணம், தன் காதலன் அந்தஸ்தை விட பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளைக்கு சம்மதம் ஆகிய காரணங்களால் வேறு ஒருவரை திருமணம் செய்து விடுகிறாள். காதல் அரவணைப்புக்கும் அடுத்தகட்ட தாம்பத்ய உறவுக்கான செயல்பாடுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு. காற்றைப் போல் சலனமுடைய பெண் மனசுக்கு பச்சோந்தி போல நிறம் மாறக்கூடிய குணமும் உண்டு. அதற்கு ஆண்களின் நடத்தையையும், போக்கையும் காரணமாக சொல்லலாம்.


காதல் தோல்வியில் வேறு ஒருவரை திருமணம் செய்த பெண்ணின் மனப் போராட்டத்திற்கு ஒரு உதாரணம் சாருமதியின் கதை! முதல் இரவில் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை சாருமதி சொல்லி கண் கலங்கினாள். பி.எஸ்ஸி (அக்ரிகல்சர்) படித்த சாருமதிக்கும், அவளுடைய வகுப்பு நண்பன் சுந்தருக்கும் முதல் ஆண்டு படிக்கும் போதே லவ். கல்லூரியல் காதல் பறவைகளாக பாடித் திரிந்தார்கள். நானும் சுந்தரும் ரொம்ப காதலிச்சோம். தினமும் அவனை பாக்காமல் என்னால இருக்க முடியாது. எங்க காதலுக்குப் போட்டோசாக முத்தங்களை போட்டோமாறிக் கொள்ளவும் நாங்கள் தவறவில்லை. அதுக்கு மேலே அவன் என்னை தொடுவதை நான் அனுமதிப்பதில்லை. திருமணம் ஆன பிறகு என்னையே உனக்குத் தருவேன்னு நாசூக்காக தவிர்த்துவிடுவேன். அவனது மெல்லிய அரவணைப்பில் ஒரு அன்பு, பாசம் தெரியும். அது மனசுக்கு இதமாக இருக்கும். வீட்டுக்குத் தெரியாமல் காதல் என்பதால், ஒரு த்ரில் இருந்தது. கல்லூரியில் இறுதி படிப்பு முடிந்ததும் திடீர்னு எனக்கு கல்யாணம் வெச்சுட்டாங்க. என் காதலனுக்கு தகவல் தெரிவித்தேன். அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. பெற்றோரை எதிர்க்க மனமில்லாமல் அவங்க பார்த்த மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டினேன்.

காதலனுக்கு துரோகம் பண்ணிட்டு வேறு ஒருவருக்கும் துரோகம் பண்ணுகிறேனா? என்று என் மனம் துடிதுடித்தது. முதலிரவில் என் மனதுக்குள் போராடும், கொந்தளிக்கும் உணர்வுகளை என் கணவரால் எப்படி போட்டோந்து கொள்ள முடியும்? மனம்விட்டு பேசக் கூட அவர் எனக்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை. என்னை வர்ணித்துக் கொண்டே போனவர் திடீர்னு பாய்ந்து என்னை வெறித்தனமாக கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்து கட்டிலில் தள்ளிவிட்டார். நான் பயந்து போய், என்னை விட்டுடுங்க.... கொஞ்ச நாள் போகட்டும். இன்னைக்கு வேண்டாம்னு போராடினேன். என்னால அவரை ஜெயிக்க முடியவில்லை. என் விருப்பமில்லாமல் என்னை அனுபவித்துவிட்டு தான் எழுந்தார். கிட்டத்தட்ட ஒரு கற்பழிப்பு சம்பவம் மாதிரிதான் என் முதலிரவு நடந்தது.

அதில் இருந்து அவர் என்னை நெருங்கும் போது ஜடமாக இருப்பேன். இதுல உனக்கு ஆசையே இல்லையா? ஏன்.....மரக்கட்டை மாதிரி கிடக்கிறாய்? சினிமாவுல வர்ற மாதிரி என்னைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுன்னு மிரட்டுவார். என்னால அவரை காதலிக்க முடியல. என் உடலை மட்டும்தான் அவருக்கு கொடுக்க முடியுது. என் நிஜ வாழ்க்கை தினமும் போராட்டமாக இருக்கிறது. தாம்பத்ய உடலுறவில் எனக்கு எந்த சந்தோஷமும் இல்லை என்று கண்கலங்கினாள்.

காதல் தோல்வியால் பாதிக்கப்பட்ட பெண் மனம் மெல்ல மெல்ல திறக்கும். புது சூழ்நிலை, புது கணவர் அல்லது ஆணுடன் உடல் ரீதியாக சங்கமம் நடப்பதில் ஆணுக்கு எளிதாக இருக்கலாம். பெண்ணுக்கு அப்படியல்ல. அது அவளது உடல் நிலை, மன நிலையை பொறுத்தது. முதலிரவில் தனியாக விடப்பட்ட ஆணும், பெண்ணும் புதியவர்கள். சாதாரண நட்புக்கு நம்பிக்கை வருவதற்கே பல நாள்கள் ஆகின்றன. ஆனால், தாம்பத்ய வாழ்க்கையின் பிடிப்பு எற்படுவதற்கு ஒரு வார இடைவெளியாவது தேவை.

திருமணம் ஆன மனைவியும், கணவனும் மனம்விட்டு பேசி தொடு உணர்ச்சிகள் மூலம் நெருங்கி பின்பே தாம்பத்ய உறவில் ஈடுபட வேண்டும். அப்போது தான் பெண்மையும், ஆண்மையின் ஆசைக்கு வளைந்து கொடுக்கும். இதை பெரும்பாலான ஆண்கள் போட்டோந்து கொள்வதேயில்லை என்பதுதான் திருமணம் ஆன பெண்கள் சொல்லும் குற்றசாட்டு. இதே மாதிரி காதல் தோல்வியில் துவண்டு போன ஆணும் தன்னுடைய சகஜ நிலைக்கு வர நாட்கள் ஆகலாம். தன் காதலியை விட அழகான மனைவி கிடைத்து விட்டால், காதலி நினைப்பை மறந்துவிட்டு தாம்பத்ய வாழ்க்கையில் ஜாலியாக நடைபோடுவார்கள்.

மனதிலே குழப்பமா? வாழ்க்கையில் நடுக்கமா?

காதல் தோல்வியில் வேறு பெண்ணை திருமணம் செய்த இளைஞர் ஜானியின் மனநிலை தடுமாறத் தொடங்கியது. தன் காதலி கிறிஸ்டியுடன் குடும்பம் நடத்தாத குறையாக ஜாலியாக ஜானி சுற்றி வந்தார். திடீரென்று, ஜானியின் பெற்றோர் அவருக்கு நெருங்கிய உறவு விட்டு போகக் கூடாது என்பதற்காக அத்தை மகளை கட்டாயத் திருமணம் செய்து வைத்தனர். கிறிஸ்டியை நினைத்துக் கொண்டே இருந்த ஜானி, தனது அத்தை மகளைத் தொடக் கூட இல்லை. ஆனாலும்ஆசையுடன் ஜானியை வலியச் சென்று புது மனைவி கட்டிப்பிடித்தாலும், அவளை ஒதுக்கிவிட்டு விலகி போய் விடுகிறான். கணவனின் கட்டியணைப்பு, முத்தம், செல்லமான சீண்டல்கள், அன்பான வருடல் ஆகியவற்றை எதிர்பார்த்த ஜானியின் அத்தை மகளுக்கு ஏமாற்றம்தான்.

ஜானி உனக்கு என்ன ஆச்சு? என்று அவனது நெருங்கிய நண்பன், அவனை மனநிலை மருத்துவரிடம் அழைத்து சென்று காண்பித்தார். அப்போதுதான் ஜானி மனம் திறந்து பேசினான். என் இதயம் கிறிஸ்டிக்கு மட்டும் தான் சொந்தம். என் உடலும், கற்பும் அவளுக்குத்தான். என் அத்தை மகளுடன் தாம்பத்ய உறவில் ஈடுபட என் மனம் மறுக்கிறது. அவள் என்னை கட்டிப்பிடிக்கும்போது எனக்கு எந்த ஆசையும், எரெக்ஷனும் (விறைப்புத் தன்மை) வருவதில்லை. அதனால், தாம்பத்ய உறவில் என்னால் ஈடுபட முடியவில்லை என்று சொன்னார்.

தொடு உணர்ச்சிகள் மூலம் விறைப்பு தன்மை ஏற்படும் போதுதான் ஆண்மையானது தனது பெண் பார்ட்னரை தாம்பத்ய உறவுக்கு அழைக்கும். ஆனால் அதுவே, ஜானிக்கு ஏற்படாத காரணம், அவரது மனத்தடுமாற்றம் தான். அதற்காக ஜானிக்கு மனநிலை சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும், உணர்ச்சிகளுடன், உணர்ச்சிகளைப் போட்டோமாறத் துடிக்கும் பெண்மையோ, தனக்கு தன் கணவனிடம் இருந்து எந்த சுகமும் கிடைக்காவிட்டால், அதை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளும் துணிச்சலான முடிவையும் எடுக்கக்கூடும். தன்னிடம் அன்பாக பேசி நெருங்கும் ஆணிடம் தன் உடலை அனுபவிக்க கொடுத்துவிட்டு தானும் சந்தோஷமடைவாள். அந்த விபரீதமான கள்ளக் காதலால் துன்பம்தான் ஏற்படும். இதை என்னவென்று சொல்ல? மனித உணர்ச்சிகளின் விபரீதமான விதி என்பதா? விளையாட்டு என்பதா?

ஆற்று வெள்ளமாக கரைபுரண்டு ஓடும் உணர்ச்சிகளுக்கு அணை போடுவது கடினம் என்பதற்கு நடைமுறையில் எத்தனையோ ஆதாரமான சம்பவங்கள் நடந்துள்ளன. உணர்ச்சிகளுக்கு வயதுண்டா? வயதான ஆணின் வேகமான உணர்ச்சி.........! வரும் வாரத்தில்.

Login form

Search

Calendar
«  மாசி 2025  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
232425262728

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz