கலைமகள் செட்டிகுளம் வவுனியா வெள்ளி
2020-06-05
5:13 AM

Welcome Guest | RSS Main | ஹனிமூன் ஹனிமூன்! | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

இனியெல்லாம் சுகமே!
டாக்டர். ஷர்மிளா
ஹனிமூன் ஹனிமூன்!

ஹனிமூன் என்ற வார்த்தைகள் மேரேஜ் ஆன இளம் தம்பதிகளுக்கு ஸ்வீட்டாக இருக்கும். தாம்பத்ய உறவை முதன்முதலாக ஆரம்பிக்கறதுக்கு தனிமையான சூழல், குழப்பம், கவலையில்லாத மனசு, எந்த டென்ஷனும் இல்லாமல் அப்ரோச் பண்ணுவதற்கான சூழ்நிலை, இரண்டு மனங்களும் ஒத்துப் போறதுக்கு முன்னோட்டமே ஹனிமூன்.

ஸ்ரீதர் - ஜெசிந்தாவுக்கு திருமணமானவுடன் ஹனிமூனுக்காக டார்ஜிலிங் போனாங்க. அங்க அஞ்சு நாட்கள் ரொம்ப ஜாலியா இருந்தாங்க. ஒருத்தரையருத்தர் போட்டோஞ்சுண்டு செக்ஸ் உறவுல அப்ரோச் பண்ணியிருக்காங்க. ஜெசிந்தா என்ற மலர் ஸ்ரீதரின் மனதில் ஓடிய ஆசையை தவிப்பை தணித்தது.

 

ஹனிமூன் சென்று திரும்பியபின் தான் இரண்டு பேர் வாழ்க்கையில் ஒரு இடைவெளி. ஸ்ரீதர் தன் வீட்டில் அம்மா, அப்பா, தங்கையுடன் ஜாயின்ட் ஃபேமிலியாக இருக்கிறார். அந்த வீட்டில் உள்ள ஒரு போர்ஷனில் ஜெசிந்தாவும், ஸ்ரீதரும் இருந்தாங்க. தினமும் ஸ்ரீதர் பேமிலியோட சின்ன சின்ன டார்ச்சர் ஆரம்பிச்சது. அது செக்ஸ் உறவில் எதிரொலித்தது. டாக்டர் என் வொய்ப் முன்னே மாதிரி செக்ஸ் ஆக்ஷன்ல கோஆப்பரேட் பண்றதில்லை. ஜடமாக இருக்கிறாள். எனக்கும் அப்ரோச்சுல எரெக்ஷன் வர்றதில்லை. லைப்பே போரடித்துவிட்டது என்று ஸ்ரீதர் என்னிடம் கவுன்சிலிங்கில் புலம்பினார்.

ஜெசிந்தாவை அழைத்து கேட்டதும்தான் உண்மையே போட்டோந்தது. வேலைக்கு போய்விட்டு வரும் ஸ்ரீதரோடு தனிமையில் ஃப்ரீயாக மனம் விட்டு பேசுவதற்கான நிமிஷங்களே குறைவு. தன் மனைவியிடம் பேசும் நேரத்தை விட அவருடைய தங்கை, தாயிடம் பேசும் நேரங்களே அதிகம். அவங்க ஜெசிந்தாவை அடிக்கடி பண்ணும் டீசிங் வேறு ஜெசிந்தாவின் அமைதியான மனசுல டென்ஷனை உருவாக்கினது. அது செக்ஸ் உறவுக்கு குட்பை சொல்லி விட்டது. தனிக் குடித்தனம் என்ற கான்சப்டுல சுதந்திரமான, பிரைவசி கிடைத்து செக்ஸ் போட்டோலேஷன்ஷிப்ல ஒரு அண்டர்ஸ்டான்டிங் கிடைக்குதுன்னு ஸ்ரீதரிடம் நான் அட்வைஸ் சொன்னேன். இப்போ ரெண்டு பேர் நடுவே இருந்த இடைவெளி குறைந்து சந்தோஷமாக இருக்கிறார்கள்.

ஸோ தேன்நிலவு................ இளம் தம்பதிகள் இடையில் எந்தவொரு சிறு கீறல்கள் இல்லாமல் தொடங்க போகும் மண வாழ்க்கையின் முதல் அத்தியாயம். அதில் முன்னுரையிலேயே செக்ஸ் உறவானது முற்று புள்ளி விழுந்து விட்டாலோ, விரிசல் ஏற்பட்டாலோ அடுத்தடுத்த அத்தியாயங்களில் யுத்த காண்டத்தோடு தான் வாழ்க்கை படகு ஒரு தத்தளிப்போடு நகரும்.

இமேஜ் அண்ட் டிரீம்ஸ் செக்ஸ்

ஒரு ஆணோ அல்லது பெண்ணோ சரீர சுக உறவில் ஈடுபடும்போது இமேஜ் டிரீம்ஸில் மிதக்கிறார்கள். செக்ஸ் ஆக்ஷனில் கற்பனை அழகை அல்லது மனதில் பதிந்துவிட்ட காதலனை, காதலியை நினைத்துக் கொண்டு ஈடுபடுகிறார்கள் என்று செக்ஷ§வல் போட்டோலேஷன்ஷிப் சர்வேயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது க்ஷியூமன் லைப்பில் ஏற்படுகிற நிஜம்.

ஐ திங்க் செக்ஸ் ஆக்ஷனில் பர்ஸ்ட் ஸ்டேஜுக்கு காரணமாக வெளிப்புற கவர்ச்சி ஒரு பேசிக் டச். தன் மனைவியோடு உறவு கொள்ள முற்படும் பெரும்பாலான ஆண்கள் எனக்கு எரெக்ஷன்ல (விறைப்பு தன்மை) ப்ராப்ளம்னு அவமானப்படுறாங்க. அந்த செக்ஸ் மூவ்மென்ட்ல எரெக்ஷன் நெர்வர்ஸ் ஆனதும், லைப் பார்டனரான மனைவி என்னாச்சு? என்று கேட்பாள். எரெக்ஷன் ப்ராப்ளத்தை சொல்ல வெட்கப்பட்டு போய் எனக்கு மூட் அவுட் என்று பாதியிலேயே உறவுக்கு திரை போட்டு விடுகிறான். அவ்வளவு நேரம் செக்ஸ் உணர்வை தூண்டிவிட்டு அதை அணைக்காமல் போகும் கணவன் மீது பெண்ணுக்கு கோபமும், ஆத்திரமும் வருவது இயற்கையான ஒன்று.

இதில் மற்றொரு வகையான பிரச்சனை, டாக்டர் என் கணவர் யாரையோ கற்பனையாக நினைத்து கொண்டு என்னுடன் ஆக்ஷனில் இறங்குகிறார். கிளைமாக்ஸ்ல அவருக்கு பிடிச்ச நடிகை பெயரை முணுமுணுத்தபடி என்னை தழுவி ஆசையை தீர்த்துக் கொள்கிறார். இதே போல், நானும் ஒரு நடிகரின் பெயரை உச்சரித்து கொண்டு அவரை கட்டிப்பிடித்தால் என்னாகும்? என்று சொல்லி விட்டு விழிகளில் ஓடிய கண்ணீரை துடைத்த சாந்தாவின் நிலைமை போட்டோதாபமாக இருந்தது.

இதற்கு அவரது கணவர் சுரேஷ் சொன்ன விளக்கம், எனக்கு டீன் ஏஜ்ல இருந்து மாஸ்டர் பேஷன் பழக்கம் இருந்துச்சு. அப்போ, எனக்குப் பிடித்த பெண்கள், என் ஃபேவரெட் நடிகைகளுடன் உறவு கொள்வது போல கற்பனை செய்து கொள்வேன். அது இப்போ என் மனைவியுடன் உறவு கொள்ளும்போது தொடருது. ஐ லவ் மை ஒய்ஃப், ஐ என்ஜாய் வித் ஹெர். அதையும் மீறி என் கற்பனை டிரீம்ஸில் வரும் ஹீரோயினை நினைத்தால் தான் எரெக்ஷன் வருது. ஹெள டு கண்ட்ரோல் டாக்டர்? என்று சோகமாக அவர் கேட்டதை என்னவென்று சொல்ல, இது அவருடைய ஏக்கமான கேள்வி.

சைக்காலஜியாக ஆண்கள் இளவயதில் பண்ணும் தவறுகள் என்று சொன்னாலும் டீன் ஏஜுக்கும், மேரேஜ் லைப்புக்கும் இடையில் காத்திருக்கும் வருடங்களில் அவர்கள் தங்களுக்குள்ளாகவே ஏற்படுத்திக் கொள்ளும் மாஸ்டர் பேஷன், இல்லீகல் செக்ஸ் பிரச்சனைகளால் இதுபோன்று ஏற்படுவது சகஜம். அதற்காக தாம்பத்ய வாழ்க்கையில் லைப் பார்ட்னர், மனைவி அந்தஸ்து வழங்கி சம போட்டோமை கொடுத்தபின் இன்னொரு நடிகை பெயரை உச்சரித்தவாறு செக்ஸ் ஆக்ஷனில் ஈடுபடுவது ரொம்ப தப்பு. மனைவி அழகை மட்டும் நினைக்கும்படியாக உங்களை மாற்றியாக வேண்டும். அப்போதுதான் உங்க வொய்ப்பும் கோ-ஆப்ரேட் பண்ணுவதற்கு அவங்க மனசு இடம் தரும்னு சொன்னபின் தான் சுரேஷ் மனசு யோசிக்க ஆரம்பித்தது.

காமசூத்ராவின் ஸ்வீட் சிக்ஸ்டிஃபோர் கலைகளையும் புகுந்து இன்ப கடலில் நீந்தலாமே என்று கனவுலகில் சஞ்சரிக்கும் ஆண் வர்க்கத்தின் துடிப்பு வொர்க் அவுட் ஆகுமா? செக்ஸ் உறவில் பொதுவான டைரக்ட் ஆக்ஷன்ல அறுபது சதவீத லேடீஸ் தான் கோ-ஆப்பரேட் பண்ணுராங்க என்பது இள வயது பெண்களின் மத்தியில் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின் உண்மை.

காமசூத்ராவின் பார்முலாவை சித்தரிக்கும் ஓவியங்கள், கோவில்களில் வடிக்கப்பட்ட சித்திரங்கள் நடைமுறை செக்ஸ் வாழ்க்கையில் உயிரோட்டம் தர முடியுமா? என்ற கேள்விக்கு சில சித்திரங்கள் ஆக்ஷன்கள் ஓ.கே. என்பது நிஜ வாழ்க்கையில் கண்டறிந்தது. ப்ராபப்ளி அறுபத்தி நான்கு பொசிஷன்கிளிலும் டிரை பண்ணி பார்க்க முடியாது. காமசூத்ரா எழுதிய வாத்சைவர் ஒரு செலிபசி. அதாவது அவர் உடலுறவு வைத்து கொள்ளாதவர். எனவே, மனித உடல்கள் சங்கமித்து சந்தோஷ எல்லையைத் தொடுவதற்காக காமசூத்ராவில் மனித உடல் அமைப்பை வைத்த எந்தெந்த பொசிஷன்களில் உடல் சங்கம உறவை வைத்துக்கொள்ளலாம் என்ற கற்பனையின் அடிப்படையிலேயே எழுதப்பட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் ஆப் ஆல் காமசூத்ராவில் வடிக்கப்பட்டுள்ள சில பொசிஷன்களுக்கு உடல்வாகு என்பது மிகவும் முக்கியம். கணவன் குண்டு பூசணியாக இருந்துவிட்டு, ஒமக்குச்சி மாதிரி மனைவி இருந்தால் அம்பேல். புல்டோசர் ரோடு போட்ட மாதிரி மனைவியை ஒருவழி பண்ணி விடுவார். அப்புறம் கணவரை கண்டாலே மனைவி தலைதெறிக்க தன் பிறந்த வீட்டுக்கே ஜுட்!!
அதே மாதிரி மனைவி யானைக்குட்டி மாதிரி இருந்தால் ஒல்லியான கணவன் மேல்மூச்சு, கீழ் மூச்சு வாங்க ஓடிவிடுவார். ஸோ, உடல்வாகைப் பொறுத்தே உடல்கள் சங்கமம் ஆகி சந்தோஷ எல்லையைத் தொடும். மனித உடல்கள் ரப்பர் மாதிரி கன்னாபின்னாவென்று வளையக் கூடியது அல்ல. அப்புறம் எலும்புகள் நொருங்கிப் போய் பிசியோதெரபி எக்சைஸ் எடுக்க வேண்டிய அவசியம் வந்து விடும்.

கோவில் சிலைகளில் வடிக்கப்பட்ட செக்ஸ் ஆக்ஷன் சிலைகள் பாலியல் உணர்ச்சிகளை தூண்டுவதற்காகத்தான் வடிக்கப்பட்டுள்ளன. சரசமாடும் சிலைகள் மனதில் சஞ்சலத்தை ஏற்படுத்தி உணர்ச்சிகளை ஒரு பாயிண்ட்டுக்கு அதாவது, உறவில் போட்டோயாத விஷயங்களை ஒரு பார்வையின் மூலம் பளிச்சென்று மின்னல் அடிப்பது போல, காமசூத்ரா சிலைகளை பார்த்த மாத்திரத்தில் உடலில் ஒரு அதிர்வு அது செக்ஸ் உறவை ஸ்டார்ட் பண்ணும் இக்னிஷியன்.

மைனஸ் பெயின் ப்ளஸ் செக்ஸ்

செக்ஸ் உறவில் மனவலியை விட உடல் வலியின்றி ஈடுபட வைப்பது தாம்பத்ய சுகத்தை தரும் பெண்மையின் எதிர்பார்ப்பு. ஆனால் உடல்வலியால் துடிக்க வைத்து மனவலியையும் உருவாக்கி பெண்மையை கண்ணீர்விட வைத்து உறவு கொள்ளும் முறை பெயினபிள் செக்ஸ்.
இருபத்து எட்டு வயதை நெருங்கிய வசந்திக்கு உடல்வலிதான். அதுவும் அவரது கணவர் சேகரின் செக்ஷ§வல் ஃபோர்ஸ், காமசூத்ராவில் வடிக்கப்பட்ட பல கலைகளில் உள்ள சித்திரங்களை தனது மனைவிக்கு காட்டியிருக்கிறார். தனக்கு மூட் வரும் நேரங்களில் அதே மாதிரி கஷ்டமான பொசிஷன்கிளில் உறவு கொள்ள வற்புறுத்துவார். இதில்தான் வசந்தி துடிதுடித்து போனார். மரண அவஸ்தையுடன் எலும்புகள் நொறுங்கி போகும் அளவுக்கு உறவு கொள்வதை வசந்தி எதிர்த்து, என்னை விட்டுடுங்க என்று கெஞ்சினார். ஆனாலும் வசந்தியை அடித்து உதைத்து துன்பபடுத்தி கதற கதற தனது கற்பனை கலைகளில் ஈடுபடுத்தியிருக்கிறார். இந்த துன்பங்களை தாங்கிக் கொள்ள முடியாத வசந்தியோ, எனக்கு மண வாழ்க்கையே வேண்டாம் என்று அழுகிறாள்.

காமசூத்ராவின் ப்ரின்சிபிள் இதுவல்ல. ஆணும், பெண்ணும் மனமுவந்து முழு மகிழ்ச்சியோடு அந்தந்த பொசிஷன்களில் ஈடுபடுவதை அதில் உருவாகும் சந்தோஷ ரேகைகள் சிலைகளின் முகங்களில் வெளிப்படுவதை காணலாம். ஸோ, வசந்திக்கு ஏற்பட்ட நிலமையானது ஒரு மிருகத்தோடு, ஒரு மிருகம் வலுகட்டாயமாக உறவு வைத்துக் கொள்வதற்கு சமம். எனவே, மைனஸ் பெயின் ப்ளஸ் செக்ஸ் என்ற தாட் தாம்பத்ய உறவில் சந்தோஷ கோடுகளை வரைவதற்கு பேசிக் பிரின்சிபிள்.

Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆணி 2020  »
ஞாதிசெபுவிவெ
 123456
78910111213
14151617181920
21222324252627
282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2020 Create a free website with uCoz