கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2020-08-09
3:57 PM

Welcome Guest | RSS Main | யோசனை..... | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

யோசனை.....


உனக்கு என்ன வர்ணம் பிடிக்கும் ? - கேட்டாய் நீ,
உனது கண்ணின் கருவிழியில் தெரியும் மென்மையான கருப்பு;
யோசிக்காமல் சொன்னேன் நான் !!

உனக்கு என்ன பாடல் பிடிக்கும் ? - கேட்டாய் நீ,
உனது பெயரை வரிக்கு,வரி சொல்லும் திரைப்பாடல்தான்;
யோசிக்கவேயில்லை நான் !!

உனக்கு எந்த மொழி பிடிக்கும் ? - கேட்டாய் நீ,
அழகான தமிழ்,நீ பேசும்போது இன்னும் அழகு கூடுவதால்;
யோசிக்க என்ன இருக்கிறது இதில் ?!

உனக்கு எந்த உணவு பிடிக்கும் - கேட்டாய் நீ,
உன்னிடம் இருந்து கற்றுக்கொண்ட சைவ உணவு;
சுவையைப்பற்றியும் யோசிக்கவில்லை !!

உனக்கு எந்த கலைஞனை பிடிக்கும் - கேட்டாய் நீ,
தனது தூரிகையில் அழகாய் உன்னை படைத்த பிரம்மன்னைதான்;
யோசனை எதற்கு இப்பதில் சொல்ல ?!

உனக்கு யாரைப் பிடிக்கும் - கேட்டாய் நீ,
என்றென்றும் உன்னை மட்டும்தான்;
யோசனைக்கே இடமில்லை இக்கேள்வியில் !!

நான் கேட்டேன்.....
என்னை உனக்கு பிடிக்குமா ??
எனது காதல் உனக்கு புரிகிறதா ??
என்னோடு காலமெல்லாம் வாழ்கிறாயா ??

யோசிக்கின்றாய் !!

உனது கேள்விகளுக்கு யோசிக்காமல் பதில் தந்தேன் நான்;
உன்னிடம்தான் எவ்வளவு நீண்ட யோசனை ?!
யோசனையும் அழகு பெறுவது உன்னிடம்தான்;
இதையும் யோசிக்காமல்தான் சொல்கிறேன் !!
Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆவணி 2020  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2020 Create a free website with uCoz