மீனம் 80/100 |
2008, ஏப்ரல் 9, காலை 8.29 மணி முதல் 2009 அக்டோபர் 29 வரை சுறுசுறுப்பான குணம் கொண்ட மீன ராசி அன்பர்களே! உங்கள்
ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் ராகுவும், ஐந்தாம் இடத்தில் கேதுவும்
பெயர்ச்சியாகி உள்ளனர். ராகுவின் பார்வை ராசியிலும், ராசிக்கு ஒன்பதாம்
இடத்திலும், கேதுவின் பார்வை ராசிக்கு 3 மற்றும் 7ம் இடத்தில் பதிகிறது.
எனவே, எந்தச் செயலைத் துவங்கினாலும் அதில் வெற்றி கிடைக்கும். அரசு
தொடர்புடைய ஆதரவு தேவையான இனங்களுக்கு வந்து சேரும். கடந்த காலத்தில்
பேச்சின் காரணமாக சில சிக்கல் தொழிலதிபர்கள்:
கல்வி நிறுவனம், கண் மருத்துவமனை, சிமென்ட் ஆலை அதிபர்கள், நிதிநிறுவனம்,
பெயின்ட், பர்னிச்சர், மருத்துவ உபகரணங்கள், எலக்ட்ரிக்கல்,
எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் உற்பத்தி செய்பவர்கள் அரசிடம் எதிர்பார்த்த
சலுகைகளை எளிதாக பெறுவர். மற்றவர்களுக்கும் தொழில்வளம் சிறந்து பணவரவு
அதிகரிக்கும். சமூகத்தில் அந்தஸ்துள்ள பதவிப்பொறுப்பு கிடைக்கும்.
நம்பகத்தன்மை நிறைந்த பணியாளர்கள் அதிகரிப்பர். புதிய வீடு, நிலம்
வாங்கும் எண்ணம் நிறைவேறும். பணியாளர்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணி இலக்கை இலகுவாக
நிறைவேற்றுவர். பணிச்சலுகை, பதவி உயர்வு போன்ற சலுகைகள் கிடைக்கும். சக
பணியாளர்கள் கூடுதல் அன்பு பாராட்டுவர். வாகன பயணங்களில் மிதவேகம் நல்லது.
கடன்கள் வசூலாகும். பணத்தை சேமிக்கும் அளவுக்கு சம்பள உயர்வு இருக்கும்.
வீடுகட்ட, பிற வளர்ச்சிப்பணிகள் செய்ய அலுவலகம் மற்றும் பாங்குகளில்
விண்ணப்பித்த கடன்கள் தடங்கலின்றி கிடைக்கும். அலுவலகத்தில் உங்களுக்கு
முக்கியத்துவம் அதிகரிக்கும் என்பதால் பிறரது பொறாமைக்கு உள்ளாகலாம்.
கவனம். சக ஊழியர்களுடன் ஆன்மிகப்பயணம் சென்று வருவீர்கள். வியாபாரிகள்:
நகை, ஜவுளி, வாகன உதிரி பாகங்கள், நோட்டு புத்தகம், எழுதுபொருட்கள்,
சீருடைகள், விவசாய இடுபொருட்கள், தானியங்கள், எண்ணெய் வித்து, பலசரக்கு,
தேன், பாத்திரம், சோப்பு, அலங்கார பொருட்கள், குளிர்பானம், உடற்பயிற்சி
கருவிகள் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் வாடிக்கையாளர்களைப் பெற்று
வியாபார வளர்ச்சி காண்பர். மற்றவர்களுக்கு இவர்களை விட அதிகமாக சேமிக்கும்
வகையில் லாபம் கிடைக்கும். கடன்கள் வசூலாகும். வாகன போக்குவரத்தில்
மிதவேகம் நல்லது. வியாபார போட்டி பெருமளவு குறையும். புதிய வாகனங்களை
சொந்த உபயோகத்துக்கும், வியாபார வசதிக்கும் வாங்கும் யோகம் பலருக்கும்
இருக்கிறது. பெண்கள்:
பணிபுரியும் பெண்கள் லட்சியத்துடன் செயல்பட்டு பணியில் சிறப்பு பெறுவர்.
நிர்வாகத்திடம் எதிர்பார்த்த பதவி உயர்வு, பணியிட மாற்றம் எளிதாக
கிடைக்கும். சக பணியாளர்கள் ஆதரவாக செயல்படுவர். வாகன போக்குவரத்தில்
மிதவேகம் நல்லது. குடும்ப பெண்களுக்கு உறவினர்களால் உதவி உண்டு.
புத்திரரின் செயல்களை சீர்திருத்தும் பொறுப்பு அதிகரிக்கும். கர்ப்பிணி
பெண்கள் உடல்நலத்தில் அதிக அக்கறை கொள்வது நலம். ஆடை, அணிகலன் சேரும்.
சுயதொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் எவருக்கும் அளவுக்கு மீறி
சரக்குகளை கடனாக கொடுக்கக்கூடாது. தொழில்வளர்ச்சி அதிகரிக்கும். பணவரவு
சீராக இருக்கும். மாணவர்கள்:
ஆசிரியர் பயிற்சி, எம்.சி.ஏ., சட்டம், பாங்க் மேலாண்மை, கண் மருத்துவம்,
கம்ப்யூட்டர், அரசு நிர்வாகம், அழகுக்கலை, இசை, நடனம், சாஸ்திரம், ஓவியம்,
ஜோதிடம், கேட்டரிங் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் முழு
கவனத்துடன் செயல்பட்டு நல்ல தரத்தேர்ச்சி பெறுவர். மற்றவர்களுக்கும்
படிப்பில் பாதக நிலை இருக்காது. படித்து முடித்தவர்களுக்கு வேலை
வாய்ப்புகள் பல கதவைத் தட்டும். பெற்றோரும் உறவினரும் கூடுதல் அன்பு
பாராட்டுவர். தவறான பழக்கம் உடையவர்களிடம் நட்புறவு பாராட்டுவதை
தவிர்க்கவும். அரசியல்வாதிகள்:
திட்டமிட்ட காரியங்களை அரசு அதிகாரிகளின் உதவியால் திறம்பட
நிறைவேற்றுவீர்கள். ஆதரவாளர்கள் புதியவர்களை கொண்டுவந்து சேர்ப்பர்.
புத்திரர்களை அரசியல் பணியில் ஈடுபடுத்த வேண்டாம். எதிரிகளின்
செயல்திட்டங்களை தகுந்த முறையில் முறியடிப்பீர்கள். பயணங்களின் போது
பொருள்கள் காணாமல் போகலாம். கவனம். வழக்கு விவகாரங்களில்ல் சாதக தீர்வு
ஏற்படும். எதிர்பார்த்த பதவிப்பொறுப்பு கிடைக்கும். விவசாயிகள்:
விவசாய பணிகளுக்கு தேவையான கடன்கள் சிரமமின்றி கிடைக்கும். டிராக்டர்
மற்றும் நவீன விவசாயக்கருவிகளை வாங்க யோகம் இருக்கிறது. பயிர் விளைச்சல்
அதிகரிக்கும். கால்நடைகளின் அபிவிருத்தியால் பணவரவு கூடும். நிலம்
தொடர்பான விவகாரம் உள்ளவர்களுக்கு அனுகூல தீர்வு கிடைக்கும். பரிகாரம்: ஐயப்பனை வழிபடுவதால் குடும்பவளம் சிறக்கும். |