கும்பம் 70/100 |
2008, ஏப்ரல் 9, காலை 8.29 மணி முதல் 2009 அக்டோபர் 29 வரை வாய்ப்பை பயன்படுத்தி வாழ்வில் முன்னேறும் கும்பராசி அன்பர்களே! உங்கள்
ராசிக்கு பனிரெண்டாம் இடத்தில் ராகுவும், ஆறாம் இடத்தில் கேதுவும்
பெயர்ச்சியாகி உள்ளனர். ராகுவின் பார்வை ராசிக்கு 2, 10ம் இடத்திலும்,
கேதுவின் பார்வை ராசிக்கு 4 மற்றும் 8ம் இடத்திலும் பதிகிறது. எனவே,
விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்து அன்பு பாராட்டுவர். புதிய
திட்டங்களைத் தீட்டி குடும்ப வருமானத்தை பெருக்குவீர்கள். வாழ்க்கையில்
மேலும் வளம் கொழிக்க பல்வேறு அனுகூல வாய்ப்புகள் தேடி வரும். பேச்சில்
நிதானம் அவசியம். பணவரவு அதிகமாக இருக்கும். இருந்தாலும் ஆடம்பரச்செலவில்
மனம் மூழ்கும். சிக்கனத்தை கடைபிடித்தால், எதிர்கால கிரக தோஷ காலங்களில்
கைகொடுக்கும். சகோதரர்கள் தகுதி, திறமையால் வாழ்வில் முன்னேறி
உங்களுக்கும் உதவுவர். வீடு,
பூமி, வாகனம் சார்ந்தவற்றில் வளர்ச்சியும், தகுந்த பணவரவும் கிடைக்கும்.
தாய்வழி சார்ந்த குலதெய்வ வழிபாடு செய்து வாழ்வில் மேன்மை பெறுவீர்கள்.
புத்திரர்கள் நல்ல விதமாக நடந்து பெற்றோருக்கு உறுதுணை புரிவர்.
புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம கிடைக்கும். உடல்நல
ஆரோக்கியம் சீராகும். எதிரிகளால் இருந்து வரும் தொல்லையை சமயோசிதமாக
செயல்பட்டு அவர்களை காணாமல் போகச் செய்து விடுவீர்கள். கடனை பெருமளவு
சரிசெய்து விடுவீர்கள். கணவன்,
மனைவி ஒற்றுமை பலம்பெற்று வாழ்வின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும்.
நண்பர்களுடன் இருந்த கருத்துவேறுபாடு விலகி நட்பில் புதிய பரிமாணம்
ஏற்படும். தந்தைவழி சார்ந்த உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். தொழில்
சார்ந்த வகையில் இருக்கும் சிரமங்களை உரியவர்களின் ஆலோசனையின் பேரில்
சரிசெய்வீர்கள். ஆதாய பணவரவை பெற வேண்டும் என்ற லட்சியத்தில் கூடுதலாக
உழைப்பீர்கள். வெளியூர் பயணம், வியாபாரத் தொடர்புகளில் பணம், பொருள்
காணாமல் போகலாம். தகுந்த பாதுகாப்பு முறையை அவசியம் பின்பற்ற வேண்டும்.
திருமண முயற்சி செய்பவர்கள் ஏமாந்து போக வாய்ப்புண்டு. தகுந்த
பரிசீலனைக்கு பின் வாழ்க்கைத்துணையை தேர்வு செய்வதால் நன்மை உண்டு.
ஏற்கனவே வீடு, மனைகள் இருந்தாலும் புதிதாக வாங்கும் யோகத்தை ராகு- கேது
உருவாக்கித் தருவர். சிலர் வெளிநாடுகளுக்கு சுற்றுலாவாகவோ, தொழில்
ரீதியிலோ சென்று பலனடைவர். ஆன்மிக சுற்றுலாவில் ஆர்வமுள்ளவர்கள் பல திவ்ய
தேசங்களை தரிசிப்பர். அதிர்ஷ்ட நிகழ்வுகள் சிலருக்கு உண்டு. ஏழ்மை
நிலையில் உள்ளவர்கள் கூட, திடீர் பணக்காரர்களாகும் நிலையை எட்டலாம். இந்த
பெயர்ச்சி உங்களுக்கு மிக சாதகமாக அமைந்துள்ளது. தொழிலதிபர்கள்:
ஆஸ்பத்திரி, ரியல் எஸ்டேட், செங்கல், ஓடு, கிரானைட், உரம், சணல், காலணி,
ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், மருத்துவ உபகரணம், மருந்து, குளிர்பானம்
உற்பத்தி, இரும்பு, காகிதம் சார்ந்த தொழிலதிபர்கள் போட்டி விலகி
தொழில்வளம் காண்பர். பணவரவு அதிகரிக்கும். மற்றவர்களின் நிலைமை இவர்களின்
அளவுக்கு இல்லாவிட்டாலும் ஓரளவு லாபத்துடன் பிரச்னைகளை சமாளிக்கும்
வகையில் பணவரவு அமையும். வெளியூர், வெளிநாட்டு பயணங்களால் அனுகூல பலன்
உண்டு. பணியாளர்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கூடுதல் ஆர்வத்துடன்
பணிபுரிந்து நற்பெயர் பெறுவர். நிர்வாகத்தின் கவனம் உங்கள் பக்கம்
திரும்பி, அவர்களிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். அதேநேரம், சக
பணியாளர்களின் சொந்த விஷயத்தில் தலையிட்டு பிரச்னைகளை எதிர்கொள்ள
நேரிடும். வீடு, வாகன வசதிக்கான கடன் கிடைத்து வாழ்க்கை முன்னேறும். பணி
தொடர்பான கூடுதல் பயிற்சி பெற வெளியூர்களுக்கு செல்ல வேண்டி வரும்.
உழைப்புக்கு தகுந்த ஓய்வு உடல்நலம் காக்க துணைநிற்கும். வியாபாரிகள்:
ஜவுளி, நகை, எண்ணெய், மளிகை, பேக்கரி பொருட்கள், உரம், தானியங்கள்,
காளான், ஏலக்காய், மிளகு, தேயிலை, ரப்பர், திராட்சை, மருந்து,
குளிர்பானம், செப்பு பாத்திரம் வியாபாரம் செய்பவர்கள் புதிய ஆர்டர்
கிடைத்து வியாபார வளர்ச்சி காண்பர். பணவரவு அதிகரிக்கும். மற்றவர்களுக்கு
வியாபாரத்தில் போட்டி குறைந்து லாபம் பெருகத்துவங்கும். சரக்கு வாகனங்களை
திட்டமிட்ட வகையில் வாங்கலாம். இளம் வியாபாரிகளுக்கு திருமண முயற்சி
நற்பலன் தரும். பெண்கள்:
பணிபுரியும் பெண்கள் முன்யோசனையுடன் செயல்பட்டு பணி சிறக்க
பாடுபடுவீர்கள். நிர்வாகத்திடம் நற்பெயர் பெறலாம். சக பணியாளர்களுடன்
நட்பு வளரும். பணச்செலவில் நிதானம் அவசியம். குடும்ப பெண்கள் கணவரின்
வழிகாட்டுதலின்படி செயல்பட்டு குடும்ப வளர்ச்சிக்கு காரணமாக மாறுவர். நகை,
ஆடைகள், கை நிறைய பணம் என சந்தோஷமாக இருப்பர். புத்திரர்களை நல்வழியில்
ஊக்கத்துடன் செயல்பட வைப்பீர்கள். அவர்களும் ஒத்துழைப்பு தருவார்கள்
என்பதால் மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். சுயதொழில், வியாபாரம் நடத்தும்
பெண்கள் போட்டி குறைந்து நன்னிலை பெறுவர். வியாபாரம் வளர்ந்து பணவரவு
கூடும். தகுதிக்கேற்ப ஆபரணம் சேரும். மாணவர்கள்: விவசாயம், மருத்துவம்,
கேட்டரிங், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், புள்ளியியல் துறை மாணவர்கள்
கவனத்துடன் படித்து தங்கள் லட்சியத்தை நிறைவேற்றுவர். பிறதுறை
மாணவர்களுக்கும் ஓரளவு நல்ல கால கட்டமே. படிப்பிற்கான பணத்தேவை சரளமாக
இருக்கும். படிப்புடன் பகுதி நேர வேலை வாய்ப்பு, படிப்பு முடியும்
நிலையில் உள்ளவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை என நல்ல பலன்களையே ராகு- கேது
அளிக்க இருக்கின்றனர். அரசியல்வாதிகள்:
தகுதி, திறமையை பயன்படுத்தி உங்களுக்கென சிறப்பான ஒரு இடத்தை உருவாகும்
நல்ல நேரம் வந்திருக்கிறது. விலகிச்சென்ற ஆதரவாளர்கள் திரும்பவும்
நட்புக்கரம் நீட்டுவர். எங்கு சென்றாலும் பாராட்டு மழையாகவே இருக்கும்.
எதிரிகள் காணாமல் போய்விடுவர். உங்களின் அரசியல் பணி சிறக்க
புத்திரர்களும் உதவுவர். பதவி, பொறுப்பு எதிர்பார்ப்பையும் விட
மிகச்சிறப்பாக கிடைக்கும். வாழ்க்கைக்கு தேவையான வசதி அதிகரிக்கும்.
தொண்டர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் இருக்கின்ற
வாய்ப்பை இன்னும் அதிகமாக்கிக் கொள்வீர்கள். விவசாயிகள்:
விவசாய பணி சிறந்து கூடுதல் பயிர் மகசூல் பெறுவீர்கள். விவசாய பணிகளுக்கான
பணம் கிடைத்தாலும் கூட, சிக்கனம் காட்டுவது மிகவும் நல்லது. கால்நடைகளால்
அபிவிருத்தியும், அவற்றால் கூடுதல் பணவரவும் கிடைக்கும். நிலம் தொடர்பான
விவகாரம் உள்ளவர்களுக்கு அனுகூல தீர்வு கிடைக்கும். பரிகாரம்: சிதம்பரம் நடராஜரை வழிபாடு செய்வதால் அனுகூல பலன்கள் மேலும் அதிகமாகும். |