விருச்சிகம் 75/100 |
2008, ஏப்ரல் 9, காலை 8.29 மணி முதல் 2009 அக்டோபர் 29 வரை வாழ்வில் வளம்பெற திறமையே அடிப்படை என்ற கொள்கையுடைய விருச்சிகராசி அன்பர்களே! உங்கள்
ராசிக்கு மூன்றாம் இடத்தில் ராகுவும், ஒன்பதாம் இடத்தில் கேதுவும்
பெயர்ச்சியாகி உள்ளனர். ராகுவின் பார்வை ராசியிலும், ராசிக்கு ஐந்தாம்
இடத்திலும், கேதுவின் பார்வை ராசிக்கு 7 மற்றும் 11ம் இடத்திலும்
பதிகிறது. எனவே, புதிய திட்டங்களை உருவாக்கி தகுந்தவர்களின் உதவியுடன்
நிறைவேற்றி வெற்றி பெறுவீர்கள். பணவரவு எதிர்பார்த்த வகையில் தாராளமாக
கிடைக்கும். சகோதரர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். அவர்களுக்கு
புத்திசொல்லுதல் போன்றவற்றை நீங்களாக நேரடியாக செய்யாமல், பிறர் மூலம்
செய்வது கருத்து வேறுபாட்டின் அளவைக் குறைக்கும். சிலருக்கு ஆன்மிகம்
சார்ந்த பணியில் ஈடுபட கவுரவமான வாய்ப்பு ஏற்படும். வீடு, வாகன வகையில்
நிலவி வந்த மனக்குறை விலகி மகிழ்ச்சி தரும் நன்னிலை பெறுவீர்கள். தாய்வழி
உறவினர்கள் உற்ற துணையாக செயல் படுவர். வயது அதிகமானவர்கள் கூட புதிதாக
கலை, கல்வி பயிற்சி பெறும் வகையிலான வாய்ப்பு ஏற்படும். புத்திரர்கள்
நல்லவிதமாக நடந்து பெற்றோரின் மகிழ்ச்சிக்கு துணை நிற்பர். அரசு தொடர்பான
சலுகைகளை எளிதில் பெறலாம். குலதெய்வ அருள் பரிபூரணமாக கிடைக்கும்.
எதிரிகளால் தொல்லை இருந்தாலும், நண்பர்களின் உதவியுடன் சமாளித்து
விடுவீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும் என்றாலும், காது தொடர்பான பிரச்னை
ஏற்படலாம். கவனம் தேவை. தர்மம் செய்வதில் மனம் ஈடுபாடு கொள்ளும். கணவன்,
மனைவி ஒற்றுமை உறவினர்கள் பாராட்டும் வகையில் அமையும். நண்பர்கள் உதவும்
வகையில் செயல்படுவர். தந்தையாருடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம் என்பதால்,
அவரது கருத்துக்கு உரிய மதிப்பு தந்து ஏற்றுக்கொண்டு குடும்ப ஒற்றுமையை
பேணுங்கள். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சி பெற கிரகநிலை அனுகூலமாக
உள்ளது. அதேநேரம் அதிக உழைப்பை கொடுக்க வேண்டியிருக்கும். ஆதாய பணவரவை
தகுந்த சேமிப்பாக மாற்றுவீர்கள். வெளியூர் தொடர்பு தாமதமாக நற்பலனை
பெற்றுத்தரும். பயணங்களின் போது பொருள்கள் தொலைந்து போக வாய்ப்புள்ளது.
கவனம். தொழிலதிபர்கள்:
மின்சார பொருட்கள், சூரிய அடுப்பு, பட்டாசு, தீப்பெட்டி, மருந்து,
மருத்துவ உபகரணங்கள், எலக்ட்ரிக் சாதனங்கள், ஓவன், பெட்ரோல் பங்க்,
அச்சகம் நடத்துபவர்கள் தேவையான அரசு உதவியை எளிதாக பெறுவர். தொழில்வளம்
பெருகி பணவரவு கூடும். மற்றவர்களுக்கு ஓரளவு வருமானம் இருக்கும்.
சமூகத்தில் அந்தஸ்துள்ள பதவி கிடைக்கும். புத்திரர்களின் தேவையை
நிறைவேற்றுவீர்கள். தொழில் சார்ந்த இடர் விலகும். புதிய கிளை துவங்கும்
முயற்சி வெற்றி பெறும். பணியாளர்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்களது பணியை திறம்பட
செய்து நிர்வாகத்திடம் நற்பெயர் பெறுவர். சம்பள உயர்வு, வீடு கட்ட கடன்
போன்ற சலுகைகள் கிடைத்து மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். சக பணியாளர்கள்
உதவிகரமாக நடந்துகொள்வர். வீட்டில் வசதி தரும் மாற்றம் செய்வீர்கள். சமூக
சேவையில் ஈடுபாடு கொள்வீர்கள். சிலருக்கு பதவி உயர்வு எதிர்பார்த்த
வகையில் கிடைக்கும். வெகுநாள் திட்டமிட்ட ஆன்மிக பயணத்தை அலுவலக
நண்பர்களுடன் சென்று வருவீர்கள். வியாபாரிகள்:
நகை, ஜவுளி, அரிசி, மளிகை, பிலிம், எலக்ட்ரிக் சாதனங்கள், பட்டாசு,
தீப்பெட்டி, மெழுகுவர்த்தி, கற்பூரம், மிளகு, கோதுமை, மரச்சாமான்கள்,
நாட்டு மருந்து, அழகு பொருட்கள், உடற்பயிற்சி கருவிகள், பித்தளை
பாத்திரங்கள், தேயிலை, காப்பி, ஏலக்காய், விவசாய இடுபொருட்கள் வியாபாரம்
செய்பவர்கள் சேமிக்கும் வகையில் லாபம் பெறுவர். மற்றவர்களுக்கும் ஓரளவு
லாபம் இருக்கும். சரக்கு வாகனம் விரும்பிய வகையில் வாங்குவீர்கள். போட்டி
பெருமளவு குறையும். இளம் வியாபாரிகளுக்கு திருமண முயற்சி கைகூடும். பெண்கள்:
பணிபுரியும் பெண்கள் தகுதி, திறமையை முழுவதும் வெளிப்படுத்தி பணியைச்
சிறப்புறச் செய்வர். கடந்த காலத்தில் கோரிக்கை வைத்து இனி கிடைக்குமோ என
மறந்து போன சில சலுகைகளை ராகுவும், கேதுவும் இந்த காலகட்டத்தில்
பெற்றுத்தர வாய்ப்பிருக்கிறது. சக பணியாளர்கள் நல் அன்பு பாராட்டுவர்.
குடும்ப பெண்கள் கணவரின் நல்அன்பும், தாராள பணவசதியும் பெற்று மகிழ்ச்சி
நிறைந்த வாழ்க்கை நடத்துவர். சிலருக்கு கார், ஆடம் பர நகைகள் வாங்கும்
யோகமுண்டு. புத்திரர்களின் திறமையை வெளிக்கொணருவதில் வெற்றி பெறுவீர்கள்.
திருமணமாகாத பெண்களுக்கு அதற்குரிய முயற்சி நற்பலன் தரும். சுயதொழில்,
வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் சந்தை வாய்ப்பு பெற்று வியாபார வளம்
காண்பர். பணவரவு திருப்திகரமாக இருக்கும். மாணவர்கள்:
கண் மருத்துவம், மனநல மருத்துவம், விவசாயம், வானியல், எலக்ட்ரிக்கல்,
எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், பிரிண்டிங் டெக்னாலஜி, ஆசிரியர்
பயிற்சி, வேதசாஸ்திரம், விளையாட்டு துறை, லைப்ரரி சயின்ஸ், சினிமா
தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள்
மனக்கட்டுப்பாடுடன் படித்து தரத்தேர்ச்சி பெறுவர். மற்ற துறைகளில்
இருப்பவர்களுக்கும் பாதகமில்லாத சூழ்நிலையை ராகு-கேது ஏற்படுத்தி தருவர்.
வேலைவாய்ப்புக்கு முயற்சிக்கும் மாணவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. சக
மாணவர்கள் உதவிகரமாக செயல்படுவர். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாகும்.
சிலர் கவிதை எழுதும் திறனை வளர்த்து சமூகத்தில் பிரபலமாகும் வாய்ப்பைப்
பெறுவர். அரசியல்வாதிகள்:
செயல்படுத்த நினைத்த திட்டங்களை சகல வசதியும் பெற்று எளிதாக
நிறைவேற்றுவீர்கள். ஆதரவாளர்கள் கூடுதல் நம்பிக்கை கொள்வர். அந்தஸ்துள்ள
பதவிப்பொறுப்பை பெறலாம். புத்திரர்கள் அரசியல் வளர்ச்சிக்கு உதவிகரமாக
இருப்பர். எதிரிகள் விலகிப்போவர். சாஸ்திர சம்பிரதாயத்தை
பின்பற்றுபவர்களிடம் தேவையற்ற வாக்குவாதம் கூடாது. உறவினர்களின் நிர்ப்பந்
தத்தால் அவர்களுக்கு சில காரியங் களை செய்து கொடுக்க வேண்டி வரும்.
அரசியலுடன் தொழில் நடத்துபவர்கள் நம்பகம் நிறைந்த பணியாளர்களின் உதவியால்
தொழில் வளர்ச்சியும் அதிக பணவரவும் பெறுவர். வெளியூர் பயணத்தில்
பாதுகாப்பு நடைமுறையை பின்பற்றவும். விவசாயிகள்:
அதிக ஆர்வத்துடன் பணிசெய்து விளைச்சலைப் பெருக்குவர். கால்நடைகளின்
அபிவிருத்தியால் கூடுதல் வருமானம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
நிலப்பிரச்னைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும். பரிகாரம்: திருச்செந்தூர் முருகப்பெருமானை வழிபடுவதால் தொழில்வளம் சிறந்து சமூக அந்தஸ்து உயரும். |