கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2021-08-05
10:34 PM

Welcome Guest | RSS Main | துலாம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

துலாம் 40/100


2008 ஏப்ரல் 9, காலை 8.29 மணி முதல் 2009 அக்டோபர் 29 வரைநீதி, நேர்மைக்கு முக்கியத்துவம் தரும் துலாம் ராசி அன்பர்களே!உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் ராகுவும், பத்தாம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சியாகி உள்ளனர். ராகுவின் பார்வை ராசிக்கு 2, 6ம் இடத்திலும், கேதுவின் பார்வை ராசிக்கு 8 மற்றும் 12ம் இடத்திலும் பதிகிறது. எனவே, நியாயப்படி நடந்து கொண்டால், வரப்போகும் சிரமங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அத்துடன் பேச்சிலும் நிதானம் மிகமிக அவசியம். பணவரவைப் பொறுத்த மட்டில் மத்திம பலனே இருக்கும். அத்தியாவசிய தேவைகளுக்குரிய பணத்திற்கு தடையிருக்காது. ஆனால், ஏற்கனவே வாங்கிய வீட்டுக்கடன் இதர கடன் வகைகளில் தொல்லை ஏற்படும். சமயோசிதமாகவும், பொறுமையாகவும் பணப்பிரச்னையை சமாளிக்க வேண்டும்.

பொன், பொருள் காணாமல் போகும் அல்லது பறிக்கப்படும் வாய்ப்புள்ளதால், மிகுந்த கவனம் வேண்டும். தாயாருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். எனவே, அவரது விருப்பம் அறிந்து செயல்படுவதால் குடும்ப ஒற்றுமை பலம் பெறும். வீடு, வாகன வகையில் செய்ய நினைத்த அபிவிருத்தி மாற்றம் நிறைவேற தாமதம் ஆகும். புத்திரர்கள் தங்கள் தகுதி, திறமையை வளர்த்து உயர்ந்த நிலையை பெறுவர். பூர்வசொத்தில் வருமானம் குறைவுபடாத தன்மையில் கிடைக்கும்.

எதிரிகளின் தொல்லை அதிகமாகும் என்பதால், முன்யோசனையுடன் நடந்து கொள்வது நல்லது. உடல்நலமும் சீராக இராது. நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுபவர்களை நோய் தொந்தரவு அண்டாது. கணவன், மனைவி ஒற்றுமை வளமுடன் இருக்க அனுகூல கிரகநிலை பலமாக உள்ளது. நண்பர்களும் உதவி மனப்பான் மையுடன் செயல்படுவர். ஆபத்தான இடங்களில் பிரவேசிக்கும் சூழ்நிலையை தவிர்ப்பது நல்லது. குலதெய்வ அருள் பரிபூரணமாக நின்று உதவும். ஆன்மிக வாழ்வுமுறையை மேற்கொள்வதில் ஆர்வம் வளரும். வெகுநாள் திட்டமிட்ட தீர்த்தயாத்திரை மற்றும் வழிபாடு எளிதாக நிறைவேறும்.


நடைமுறை வாழ்வை வளப்படுத்த முக்கியஸ்தர் கள் மற்றும் அறிஞர்களின் ஆலோசனை கிடைக்கும். தந்தைவழி சார்ந்த உறவினர்கள் கனிவுடன் செயல்பட்டு உங்களை வழிநடத்துவர். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சியும், வருமானமும் அதிகமாகி மனநிறைவு பெறுவீர்கள். ஆபரண சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். வெளியூர் தொடர்புகளால் நன்மை ஏற்படும்.

தொழிலதிபர்கள்: மீன், இறக்குமதி, ஏற்றுமதி, பழச்சாறு, குளிர்பானம், உப்பளம், ஏர்கூலர், வாஷிங் மெஷின் இன்னும் தண்ணீர் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்வோருக்கு சோதனையான காலகட்டத்தை ராகு- கேது தருவர். கூடுதல் கவனத்துடன் செயல்படுவதால் இருக்கும் நிலை யை தக்க வைக்கலாம். மற்ற தொழில் செய்வோருக்கும் மிகுந்த லாபம் எதிர்பார்க்க இயலாது. தொழில் தவிர பிற வெளிபொறுப்புகள் வந்தால் அவற்றைத் தவிர்க்கப் பாருங்கள். ராகு, கேது பெயர்ச்சி காலம் அவ்வளவு உகந்ததாக இல்லை. தொழில் போட்டி அதிகமாக இருக்கும். பணியாளர்களுடன் கருத்து மோதல் ஏற்பட வழியிருப்பதால், உற்பத்தி திறன் குறையும். மிக கவனமாக தொழிலை நடத்துங்கள்.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தினர் என்ன சொல்கின்றனரோ அதை அப்படியே கடைபிடித்தால் மட்டுமே இடைஞ்சல்களில் இருந்து தப்பலாம். சக பணியாளர்களுடன் சீரான நட்பு இருக்கும். பணி மாற்றம், பணியிட மாற்றம் போன்றவை தேவையில்லாமல் ஏற்பட்டு சிரமத்தை தரும். பணவரவும் அதிகமிருக்காது. பணியில் கவனக்குறைவு ஏற்பட்டு பைல்கள் தொலைந்து போதல், உற்பத்தி பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டு அபராதம் கட்டுதல் போன்ற பலன்களை அனுபவிக்க வாய்ப்பிருக்கிறது. கவனமாக இருந்தால், ராகு, கேது வைக்கும் தேர்வில் ஜெயித்து விடலாம்.

வியாபாரிகள்: உணவு பண்டங்கள், ஜவுளி, மாவு, பூ, சமையல் எண்ணெய், மசாலா பொடி, அழகு சாதனப்பொருட்கள், சென்ட், மீன், குடை, ரெயின்கோட், பிளாஸ்டிக் பொருள், பழச்சாறு, குளிர்பானம், கண் கண்ணாடி, பீங்கான் பொருட்கள், வலை, விவசாயக்கருவி, விவசாய இடுபொருட்கள், பால் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் லாபம் எதிர்பார்க்க இயலாது. அளவான மூலதனம் இட்டு, கூடுதல் உழைப்பைக் காட்டினால் இருப்பதை தக்க வைத்துக் கொள்ளலாம். மற்ற வியாபாரிகள் ஓரளவு பலனடைவர். பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. பெண்கள்: பணிபுரியும் பெண்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படுவதால் குறை ஏதும் வராத நன்னிலையை பெறலாம். சக பணியாளர்களிடம் பொதுவிஷயம் தொடர்பான சர்ச்சை கூடாது. பணியிட மாறுதல் விரும்புபவர்களுக்கு அனுகூல குறைவு தரும் இடமாற்றம் ஏற்படலாம். குடும்ப பெண்கள் கணவரின் சூழ்நிலை அறிந்து நடந்து கொள்வதால், கருத்து வேறுபாடு, பிரிவினை போன்றவற்றை தவிர்க்கலாம். பணவரவும் சுமாராகவே இருக்கும் என்பதால் சிக்கனம் அவசியம் தேவை. தாய்வழி உறவினர்கள் ஆதரவாக செயல்படுவர். சுயதொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் கூடுதல் உழைப்பால் மட்டுமே, தொழிலில் இருக்கும் நிலையை பாதுகாக்க முடியும். தொழில் அபிவிருத்திக்காக தகுதிக்கு மீறிய பணக்கடன் பெறக்கூடாது. மிகப்பெரிய லாபமும் எதிர்பார்க்க முடியாது.

மாணவர்கள்: மருத்துவம், கேட்டரிங், ஓவியம், இசை, சினிமா, கப்பல் சார்ந்த படிப்பு, எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் உட்பட பல்வேறு துறையில் பயிற்சி பெறும் மாணவர்கள் சுமாராகவே படிப்பர். மற்றவர்கள் மனதை ஒருநிலைப்படுத்தி படித்தால், தரத்தேர்ச்சியை எதிர்பார்க்கலாம். சக மாணவர்கள் படிப்பில் உறுதுணை புரிவர். செலவில் சிக்கனம் வேண்டும். பெற்றோரின் கண்டிப்பு நன்மைக்கே எனக்கருதி செயல்பட்டால் படிப்பில் முன்னேறலாம்.

அரசியல்வாதிகள்: உங்களைவிட அரசியல் அனுபவம் அதிகம் உள்ள ஒருவரை துணைக்கு வைத்து உங்களின் செயல்களில் சீரான வெற்றி பெறலாம். ஆதரவாளர்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதில் கூடுதல் முயற்சி தேவைப்படும். வளர்ச்சிக்காக கடன் வாங்க வேண்டி வரும். புத்திரர்களையும் அரசியலில் ஈடுபடுத்த நல்ல நேரம். எதிரிகளின் தொல்லை அதிகமே என்றாலும், உங்கள் அனுபவ ஞானத்தால் அவர்களை அடக்கும் சக்தி அதிகரிக்கும். நிலம் தொடர்பான விவகாரங்களில் தலையிட்டு பெயரை கெடுத்துக் கொள்ள நேரிடும். கவனம்.

விவசாயிகள்: இருக்கும் பணவசதிக்கேற்ப விவசாய பணியை செம்மையாக நிறைவேற்றுங்கள். உழைப்புக்கு தகுந்த பலன் உறுதியாக கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் பாதுகாப்பிலும் கூடுதல் கவனம் வேண்டும். சொத்தின் பேரில் தகுதிக்கு மீறிய பணக்கடன் பெறக்கூடாது.


பரிகாரம்: சமயபுரம் மாரியம்மன் கோயிலில் வழிபடுவதால் தொழில்வளம் முன்னேற்றம் பெறும்.

Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆவணி 2021  »
ஞாதிசெபுவிவெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2021 Create a free website with uCoz