2008 ஏப்ரல் 9, காலை 8.29 மணி முதல் 2009 அக்டோபர் 29 வரை
மனதில் துணிவுடன் செயல்படும் சிம்மராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு ஆறாம் இடத்தில் ராகுவும், பனிரெண்டாம் இடத்தில் கேதுவும்
பெயர்ச்சியாகி உள்ளனர். ராகுவின் பார்வை ராசிக்கு 4, 8ம் இடத்திலும்,
கேதுவின் பார்வை ராசிக்கு 2 மற்றும் 10ம் இடத்திலும் பதிகிறது.
ஜென்மச்சனியின் பலன்களை அனுபவித்து வரும் உங்களுக்கு ராகு, கேது பெயர்ச்சி
மகத்தான வளம் தரும் நற்பலனை தர உள்ளது. உத்வேகத்துடன் செயல்புரிந்து
உங்களை சுற்றி இருக்கும் இடரை சரிசெய்வீர்கள். நல்ல கருத்துக்களை பேசி
சமூகத்தில் நற்புகழ் பெறுவீர்கள். பணவரவு அதிகரிக்க பல்வேறு
சந்தர்ப்பங்கள் உருவாகும். சகோதரர்களின் செயலை ஊக்கப்படுத்தி உங்களுக்கும்
பயன்படச் செய்வீர்கள். வீடு, பூமி வாகன வகையில் வளர்ச்சிதரும் நல்ல
மாற்றம் எளிதாக நிறைவேறும். தாய்வழி உறவினர் கூடுதல் அன்பு பாராட்டுவர்.
அரசு சார்ந்த வகையில் அனுகூல பலன் கிடைக்கும். புத்திரர்கள் தமது தகுதி,
திறமையை வளர்த்து பெற்றோருக்கு பெருமை தேடித்தருவர். இஷ்ட, குலதெய்வ அருள்
பரிபூரணமாக துணை நிற்கும். எதிரிகளை எளிதில் வெல்வீர்கள். வழக்கு,
விவகாரங்களில் சாதகம் தரும் நன்னிலை உண்டு.
கணவன், மனைவி இடையே
நிலவிவந்த கருத்து வேற்றுமை விலகி நல்அன்பு வளரும். நண்பர்கள் உங்களின்
நற்குணத்தை புரிந்துகொண்டு உதவிகரமாக செயல்படுவர். வாழ்வியல்
நடைமுறைகளுக்கு தேவையான அனைத்து வளங்களும் கிடைத்து மனம் மகிழ்வீர்கள்.
தொழில் சார்ந்த வகையில் எதிர்வரும் சிறிய சிரமத்தை புத்திசாலித்தன
நடவடிக்கையால் சரிசெய்து வளர்ச்சி பெறுவீர்கள். முக்கியஸ்தர்களின்
அறிமுகம் கிடைத்து ஆதாயம் தரும் நற்பலன் உருவாகும். எதிர் கால தேவைக்கு
கணிசமான பணம் சேமிப்பீர்கள். வெளியூர் வேலைவாய்ப்பு முயற்சி நிறைவேறும்.
கண்களின் பாதுகாப்பில் கவனம் வேண்டும். வெளியூர் பயணம் கூடுதலாக
ஏற்படலாம். சிலருக்கு வீடு, பணியிட மாற்றம் ஏற்படலாம்.
தொழிலதிபர்கள்:
கம்ப்யூட்டர், மொபைல்போன், பாத்திர உற்பத்தி, இசைக்கருவி, எலக்ட்ரானிக்ஸ்
சாதனங்கள், டெக்ஸ் டைல்ஸ், படகு, நவீன பர்னிச்சர், பெயிண்ட், வீடியோ
கேமரா, வாசனை தைலம், காலணிகள், கார்மென்ட்ஸ், பிளாஸ்டிக் பொருட்கள்,
ஆட்டோமொபைல், உதிரி பாகங்கள், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் உள்ளிட்ட
பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தம் பெற்று தொழில்
வளர்ச்சியும், அதிக பணவரவும் பெறுவர். மற்றவர்களுக்கும் பாதகமில்லாத நிலை
இருக்கும். சமூக அந்தஸ்து தரும் பதவி, பொறுப்பு கிடைக்கும். தாராள
பணச்செலவு செய்வீர்கள். புதிய கிளைகளைத் துவங்கும் எண்ணம் மேலோங்கும்.
இருப்பினும், சனிபகவானின் சஞ்சாரம் சாதகமற்ற நிலையில் உள்ளதால், இது
விஷயத்தில் லாபம் கிடைக்குமா என்பதை ஒன்றுக்கு பத்துமுறை யோசனை செய்து
செய்யுங்கள்.
பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார்
துறையில் பணிபுரிபவர்கள் திறம்பட செயல்பட்டு நற்பெயர் பெறுவர். பணி
உயர்வு, எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். உறவினர்கள் உரிய அந்தஸ்து
தருவர். உதவும் வகையிலான புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவர். வாழ்க்கை வசதி
பெற தேவையான வீட்டு சாதனப் பொருள் வாங்குவீர்கள். விருந்து உபசரிப்பில்
மகிழ்வுடன் கலந்து கொள்வீர்கள். புத்திரர்களின் செயல்களை
ஊக்கப்படுத்துவீர்கள். காணாமல் போன பொருள் திரும்ப கிடைக்கும் அனுகூல நிலை
உண்டு.
வியாபாரிகள்: நகை, ஜவுளி, அரிசி, மளிகை,
கட்டுமான பொருள், அலங்கார சாதனங்கள், அழகு சாதன பொருள், தோல், கம்பளி ஆடை,
காலணி வகை, கால்குலேட்டர், மொபைல், கம்ப்யூட்டர், மீன், பால் பொருட்கள்,
காகிதம் வியாபாரம் செய்பவர்கள் அனுசரணையான வாடிக்கையாளர்கள் கிடைத்து
தொழில் வளர்ச்சி பெறுவர். மற்றவர்களுக்கு இன்னும் அதிகமாக சேமிக்கும்
வகையில் பணவரவு கிடைக்கும். புதிய கிளைகள் துவங்கலாம். சரக்கு வாகனம்
வாங்கும் எண்ணம் நிறைவேறும்.
பெண்கள்: அரசு
மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் மனம் ஒன்றி பணிசெய்யும்
நிலையை ராகு-கேது உருவாக்குவர். எதிர்பார்த்த சலுகைகள் தடங்கலின்றி
கிடைக்கும். ஒரு சிலருக்கு சனியின் தாக்கத்தையும் மீறி, உழைப்புக்கேற்ற
சம்பள உயர்வு எதிர்பாராத வகையில் கிடைக்கும். மனநலமு நன்றாக இருக்கும்
என்பதால், கூடுதலான நேரம் பணி செய்து உபரி வருமானம் ஈட்டும் எண்ணமும்
மேலோங்கும். பணி உயர்வு, விரும்பிய இடமாற்றம் போன்ற சலுகைகள் கிடைக்கும்.
சக பணியாளர்கள் நட்பு பாராட்டுவர். குடும்ப பெண்கள் கணவரின் நல் அன்பை
பெற்று இனிய வாழ்வுநலம் நடத்துவர். புத்திரர்களை உயர்ந்த நிலைக்கு
கொண்டுவருவதில் உங்களின் பங்கு அதிகமாக இருக்கும். திருமண முயற்சி
செய்பவர்களுக்கு அனுகூல பலன் உண்டு. சுயதொழில், வியாபாரம் நடத்தும்
பெண்கள் புதிய சந்தை வாய்ப்பு பெற்று வியாபார அபிவிருத்தியும் கூடுதல்
பணவரவும் பெறுவர். தகுதிக்கேற்ப ஆபரணம் வாங்கும் ஆசை நிறைவேறும்.
மாணவர்கள்:
எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல், தகவல் தொழில் நுட்ப பயிற்சி, இசை, சினிமா,
சிற்பக்கலை, தொல்பொருள் ஆராய்ச்சி, ஓவியம், மார்க்கெட்டிங், இளங்கலை,
முதுகலையின் அனைத்து துறை மாணவர்களும் கூடுதல் ஆர்வத்துடன் படித்து தர
தேர்ச்சி பெறுவர். இதர துறையிலுள்ளவர்கள் படிப்பில் பெரிய அளவுக்கு ஆர்வம்
காட்டாவிட்டாலும், தோல்வியைத் தழுவாத அளவுக்கு ராகு-கேது உதவி செய்வர்.
வேலை வாய்ப்பை எதிர்பார்த்து படிக்கும் மாணவர்கள் அதற்குரிய கிரகநிலை
சாதகமாக இருப்பதால், கடும் முயற்சி எடுத்து படித்தால் பலன் உறுதி.
நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். பெற்றோர் மீதான பாசம் அதிகரிக்கும்.
பகுதிநேர வேலை கிடைக்கவும், அதன் மூலம் விரும்பிய பொருட்களை அடையவும்
வாய்ப்பிருக்கிறது.
அரசியல்வாதிகள்: கடந்த
காலத்தில் இருந்த கசப்பான சூழ்நிலை மாறி மகிழ்ச்சி தரும் பலன் நடக்கும்.
ஆதரவாளர்கள் உங்கள் மீது கூடுதல் நம்பிக்கை வைப்பர். தர்ம காரியங்களில்
ஈடுபடுபவீர்கள். வீடு, வாகன வசதி அதிகரிக்கும். புத்திரர்கள் உறுதுணையாக
செயல்படுவர். எதிரிகளின் கெடுசெயல் பலமிழந்து போகும். அரசியலுடன் தொழில்
நடத்துவோர் அனுகூல வாய்ப்பு பெற்று அபிவிருத்தியும், அதிக பணவரவும்
பெறுவர். சமூகத்தில் புதிய பதவி, பொறுப்பு கிடைக்கும்.
விவசாயிகள்:
விவசாய பணிகளில் கூடுதல் ஆர்வத்துடன் செயல்படுவீர்கள். பயிர் விளைச்சல்
நல்ல மகசூலை தரும். கால்நடை அபிவிருத்தியால் சேமிக்கும் அளவு பணவரவு
கிடைக்கும். நிலம் தொடர்பான விவகாரம் இருந்தால் சாதக தீர்வு கிடைக்கும்.
சுபநிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்த கிரக நல்லருள் பலமாக உள்ளது.
பரிகாரம்: திருப்பதி வெங்கடாஜலபதியை வழிபடுவதால் மகத்தான நற்பலனை பெறுவீர்கள்.