கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2021-08-05
10:02 PM

Welcome Guest | RSS Main | கடகம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

கடகம் 50/100


2008 ஏப்ரல் 9, காலை 8.29 மணி முதல் 2009 அக்டோபர் 29 வரைஉதவி கேட்பவர்களுக்கு இயன்ற அளவு உதவும் கடகராசி அன்பர்களே!உங்கள் ராசியில் கேதுவும், ஏழாம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகி அமர்ந்துள்ளனர். ராகுவின் பார்வை ராசிக்கு 5, 9ம் இடத்திலும், கேதுவின் பார்வை ராசிக்கு 3 மற்றும் 11ம் இடத்திலும் பதிகிறது. மகர, கடக ராசிகளில் ராகு, கேதுவின் அமர்வு இருக்கும் பொழுது பிறக்கின்ற குழந்தைகளுக்கு, இறைவன் அந்த குழந்தை தாயின் கர்ப்பவாசத்தில் இருக்கும் பொழுதே நிறைந்த ஞானத்தை புகட்டுவதாக ஜோதிட சாஸ்திரத்தில் ஐதீகமாக சொல்லப்பட்டுள்ளது. இப்போதைய இந்த பெயர்ச்சியாலும், ராகு, கேது உங்களுக்கு நிறைந்த அனுபவ ஞானங்களை தர உள்ளனர்.

அதே நேரம் நிதானித்து பேசுவதால் மட்டுமே சகல வளமும் பெற முடியும். பணவரவு அதிகம் பெற சிலர் தவறான வழிகாட்டுவர். கவனம் தேவை. வீடு, வாகனம் சார்ந்த வகையில் திருப்திகரமான நிலை இருக்கும். சிலருக்கு பணிபுரியும் பொருட்டு இடமாற்றம் ஏற்படும். திருமண முயற்சி செய்பவர்களுக்கு மனதுக்கேற்ற துணையை தேர்வு செய்வதில் தாமதம் ஏற்படும்.நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கல் மற்றும் குடும்ப விவகாரங்களில் தலையிடும் உரிமையை அறவே தவிர்க்க வேண்டும். பயன்பாடு இல்லாத பொருட்களை வாங்கி நஷ்டப்பட நேரிடும்.

தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சி பெறுவதற்கான சந்தர்ப்பம் பல விதத்திலும் உருவாகும். மன உறுதி குலையும் காலம் என்பதால், தெய்வத்தின் மீது பாரத்தை போட்டு விட்டு தைரியத்துடன் எதிலும் இறங்க வேண்டும். வெளியூர் தொடர்பு அனுகூல பலனைத் தரும். தாய்வழி உறவினர்களிடம் தேவையற்ற விஷயங்களில் கருத்து பரிமாற்றம் செய்து சிக்கல்களில் மாட்ட நேரிடும். கவனம். புத்திரரின் சேர்க்கை சகவாசம் தடம் மாற வாய்ப்பிருக்கிறது. அவர்களை நல்வழி நடத்துவதால் நன்மை உண்டு. பூர்வ சொத்தில் வருமானம் பெறுபவர்கள், நம்பகமானவர்களை பணியமர்த்துவது அவசியம். உடல்நலம் பாதிக்கலாம் என்பதால், தகுந்த சிகிச்சை தேவைப்படலாம். வழக்கு, விவகாரத்தில் கடுமை காட்டாமல் பொறுமையைக் கடைபிடித்து இதம்பதமாக செயல்படுவதால் நற்பலன் ஏற்படும். கணவன், மனைவி ஒற்றுமையும் அவ்வளவு சீராக இராது.தொழிலதிபர்கள்: சூரியசக்தியில் இயங்கும் சாதனங்கள், உழவுத்தொழில் கருவிகள், பட்டாசு, தீப்பெட்டி உற்பத்தி, காஸ் அடுப்பு, மினரல் வாட்டர், நீர் இறைக்கும் இயந்திரங்கள், மீன்பிடி வலை, விசைப்படகு உற்பத்தி, பாய்லர் தொழிற் சாலை, கடற்கரை, மலைவாசஸ்தல ரிசார்ட்ஸ் நடத்துபவர்கள், குடை, கண்ணாடி, முத்து ஆபரணம் உள்ளிட்ட தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங் களை பெற சலுகைகளை அளிக்க வேண்டியிருக்கும். லாபம் பெரிய அளவிற்கு எதிர்பார்க்க இயலாது. மற்றவர்களுக்கு நிலைமை நன்றாக இருக்கும். இதனால் தொழில் அபிவிருத்தி பெறும். குடும்ப ஒற்றுமை பேணுவது அவசியம். தொழிலில் புத்திரர்களுக்கு பொறுப்பு தர விரும்புபவர்கள் தகுந்த பயிற்சி தருவது நலம்.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கடந்த காலங்களில் பெற்ற அனுபவத்தை பாடமாக வைத்து செயல்படுவர். சக பணியாளர்களிடம் சுமூக நட்பைப் பின்பற்றவும். தகுதிக்கு மீறிய பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. விட்டுக்கொடுத்து செயல்படுவதால் எதிர்மறை பலன் பெருமளவு குறையும். அலுவலகத்தில் விண்ணபித்த கடன்கள் எளிதில் கிடைக்கும். வீடு, வாகனம் வாங்க வழிவகை ஏற்படும்.

வியாபாரிகள்: கட்டட, கட்டுமானப் பொருட்கள், விவசாய இடுபொருட்கள், உணவு தானியங்கள், ஜவுளி, எலக்ட்ரானிக்ஸ், காளான், மாவு வகை, சமையல் எண்ணெய், மீன், இறைச்சி, பழம், பால் பொருட்கள், சலவைசோப்பு, பவுடர், வாசனை தைலம், மசாலா பொடிவகை, கடல்சார் பொருட்கள், செப்பு பாத்திரங்கள், ரப்பர், சணல் பொருட்கள், வலை போன்ற பொருட்களை வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் வியாபார வாய்ப்பு பெற்று லாபமடைவர். மற்றவர்களுக்கு ஓரளவு லாபம் இருக்கும். கடன் கொடுக்கும் விஷயத்தில் அளவு வேண்டும். சுய தேவையை குறைத்து சேமிப்பைப் பெருக்க ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். வெளியூர் வியாபார தொடர்பு புதிய அனுகூலம் பெற்றுத்தரும்.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் தங்களுக்கு தரப்பட்ட பணி இலக்கை நிறைவேற்ற கவனமுடன் செயல்படுவர். நிர்வாகத்தின் நடைமுறையை அறிந்து அதற்கேற்ப தம்மை தகுதிப்படுத்திக் கொள்வர். சக பணியாளர்களின் கருத்துக்களை மதிப்பதால் தேவையான உதவி அவர்களிடமிருந்து எளிதாக கிடைக்கும். சம்பள உயர்வு உள்ளிட்ட சலுகைகளை பெருமளவில் எதிர்பார்க்க இயலாது. குடும்பபெண்கள் கணவரின் குணநலனுக்கேற்ப நடப்பதால் குடும்பவளம் சீராகும். தாய்வழி உறவினர் உதவியாக செயல்படுவர். பணவிஷயம் பரவாயில்லை என்ற அளவிலேயே இருக்கும். சுயதொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் இனிய அணுகுமுறையால் தொழிலில் இருக்கும் நிலையை தக்கவைக்கலாம். அபிவிருத்தி பணிகளில் நிதானம் வேண்டும்.

மாணவர்கள்: மருத்துவம், சிவில் இன்ஜனியரிங், தகவல் தொழில்நுட்பம், நீர் சார்ந்த பாடங்கள், வாகனம் சார்ந்த படிப்பு, விவசாயம், கேட்டரிங் உள்ளிட்ட துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்கள் கூடுதல் முயற்சியால் தகுந்த தரதேர்ச்சி பெறுவர். மற்றவர்கள் சுமாராகப் படிப்பர். நடைமுறை வாழ்வில் பல்வேறு அனுபவங்கள் கிடைக்கும். சக மாணவர்களுடன் படிப்பு தவிர பிற வகையில் விவாதம் செய்யக்கூடாது. பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதால் எதிர்காலம் சிறக்கும். விளையாட்டு
பயிற்சியில் கூடுதல் கவனம் வேண்டும்.

அரசியல்வாதிகள்: கடந்தகாலத்தில் பெற்ற நற்பெயரை துணையாக கொண்டு சமூகப்பணியில் ஈடுபடுவீர்கள். எதிரிகளால் ஏற்படும் குறுக்கீடுகளை சரிசெய்ய உள்மனதில் இருந்து தகுந்த திட்டம் வெளிப்படும். ஆதரவாளர்கள் நம்பிக்கை கொள்வதற்கு தேவையான சீர்திருத்தத்தை பின்பற்றி நடப்பீர்கள். எதிரிகளிடம் பிடிகொடுக்காத வகையில் சமயோசிதத்துடன் செயல்படுவது நல்லது. குடும்ப ஒற்றுமை பலம்பெற கணவன், மனைவி கூடுதல் பொறுமையுடன் செயல்பட வேண்டும். தொழில் நடத்தும் வாய்ப்பு பெற்றவர்கள் நம்பகமானவர்களின் உதவியால் தொழிலை சீராக நடத்தலாம்.

விவசாயிகள்: விவசாய பணிகளில் கூடுதல் அக்கறையுடன் செயல்பட வேண்டும். அரசாங்கம் தவிர பிற வகையில் பயிர் வளர்ப்புக்காக கடன் எதுவும் பெறக்கூடாது. கால்நடை வளர்ப்பு பலன் தரும். பணவரவு சீராகும். நிலம் தொடர்பான பிரச்னையில் தீர்வு பெற இப்போது சமயமல்ல. பொறுமையுடன் இருந்தால் தானாகவே சரியாகிவிடும்.


பரிகாரம்: திருநள்ளாறு சனிபகவானை வழிபடுவதால் பணவரவு அதிகரித்து வாழ்வுநலம்சிறக்கும்.

Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆவணி 2021  »
ஞாதிசெபுவிவெ
1234567
891011121314
15161718192021
22232425262728
293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2021 Create a free website with uCoz