கலைமகள் செட்டிகுளம் வவுனியா வியாழன்
2021-06-17
3:54 AM

Welcome Guest | RSS Main | ரிஷபம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

ரிஷபம் 60/100


2008 ஏப்ரல் 9, காலை 8.29 மணி முதல் 2009 அக்டோபர் 29 வரை
இனிய பேச்சால் பிறர் மனம் கவரும் ரிஷபராசி அன்பர்களே!உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் ராகுவும், மூன்றாம் இடத்தில் கேதுவும் பெயர்ச்சியாகி உள்ளனர். ராகுவின் பார்வை ராசிக்கு 7, 11ம் இடத்திலும், கேதுவின் பார்வை ராசி மற்றும் 5ம் இடத்திலும் பதிகிறது. ராகுவின் அமர்வு அனுகூலக்குறைவையும் கேதுவின் அமர்வு பல்வேறு வளங்களையும் தர உள்ளது. எந்த செயலையும் திட்டமுடன் மேற்கொள்ள வேண்டும். பணவரவு அதிகம் பெற புதிய வாய்ப்பு பலவிதத்திலும் உண்டு. இதம் பதமாக பேசி பணவரவை பெருக்குவீர்கள்.சகோதரர்கள் வாழ்வில் முன்னேறி உங்களுக்கும் உதவுவர். இசை மற்றும் சமூகப்பணிகளில் அதிக ஆர்வம் கொள்வீர்கள். வீடு, வாகனம் போன்றவற்றில் உள்ள எதிர்மறை பலன்கள் விலகி விரும்பிய வளர்ச்சி மாற்றம் பெறுவீர்கள். தாய்வழி உறவினர் உரிய மரியாதையுடன் நடத்துவர். புத்திரர்கள் ஆன்மிக விஷயங்களை அறிவதிலும், படிப்பில் முன்னேற்றம் பெறுவதிலும் சிறப்பாக செயல்படுவர். குலதெய்வ அருளும், முருகப்பெருமான் திருவருளும் உற்ற துணையாக நின்று உங்களுக்கு உதவும். பூர்வ தொழில் வளர்ச்சியும், புதிய சொத்து வாங்குவதுமான சுபபலன் உண்டு.உடல்நலத்தில் சிறுபாதிப்பு ஏற்படலாம். கவனம். எதிரிகள் கெடுதல் செய்தாலும், சமயோசிதமாக முறியடித்து விடுவீர்கள். கணவன், மனைவி ஒற்றுமையில் பிரச்னை ஏற்படும். இருப்பினும், விட்டுக் கொடுக்கும் தன்மை உள்ளவர்கள் இதுபற்றி கவலைப்பட வேண்டாம். நண்பர்களிடம் பணம் கொடுக்கல், வாங்கலில் தகுதிக்கு மீறிய நடைமுறை எதுவும் பின்பற்றக்கூடாது. தந்தை மற்றும் தந்தை வழி உறவினர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். தொழில் சார்ந்த வகையில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி கூடுதல் வெற்றி பெறுவீர்கள். இயன்ற அளவில் பணம் சேமிக்க கிரக நல்லருள் உதவும். வெளியூர் தொடர்பு ஓரளவு நன்மை தரும்.

தொழிலதிபர்கள்: கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், கேமரா, மொபைல், அழகு சாதனப் பொருட்கள், பர்னிச்சர், நவரத்தின அணிகலன், எலக்ட்ரிக்கல், சினிமா தியேட்டர், நட்சத்திர ஓட்டல் நடத்துபவர், பால், சாயப்பொருட்கள், ஜவுளி உற்பத்தி போன்ற பல்வேறு தொழிலதிபர்கள் தொழில் வளர தேவையான வசதி வாய்ப்புகளை பெறுவர். மற்றவர்களுக்கு லாபம் சுமார் என்றாலும், பெரிய பாதிப்பு இருக்காது. இனிய அணுகுமுறையால் தொழில்வளம் சிறந்து பணவரவுகூடும். தேவையான அரசு சார்ந்த உதவி, கடன் வசதி சிரமமின்றி கிடைக்கும். இயந்திரங்கள் விஷயத்தில் அவ்வப்போது ஏற்படும் செலவைத் தவிர்க்க முடியாது என்றாலும் கட்டுக்குள் இருக்கும். சமூக பொறுப்புள்ள பதவி சிலருக்கு கிடைக்கும்.

பணியாளர்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தங்களுக்குரிய பொறுப்பை உணர்ந்து செயல்பட்டு இலக்கை நிறைவேற்றுவர். சக பணியாளர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். பணவரவில் திருப்திகரமான நிலை உண்டு. நீண்ட கால கோரிக்கைகளை நிர்வாகத்தினர் கவனிக்கும் நல்ல நேரம் வந்திருக்கிறது. பணியிட மாற்றம் விரும்பி கேட்பவர்கள், அதனால் பயன் ஏற்படுமா என்பதை நன்கு யோசித்த பின்பே கேட்க வேண்டும். இல்லாவிட்டால், செல்லும் இடத்தில் கூடுதல் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

வியாபாரிகள்: கம்ப்யூட்டர், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள், பால்பொருட்கள், பழம், குளிர்பானம், சோப்பு, வாசனை திரவியங்கள், பெயிண்ட், பர்னிச்சர், சமையலறை சாதனங்கள், பாத்திரங்கள், பருத்தி ஆடை, வெள்ளி, வைர நகைகள், அரிசி, மளிகை வியாபாரிகள் அபரிமிதமான வளர்ச்சியும், முக்கிய தேவைகளுக்கான சேமிப்பும் உருவாகப்பெறுவர். மற்றவர்களுக்கு பரவாயில்லை என்ற நிலையே இருக்கிறது. வியாபாரம் சார்ந்த இடையூறுகள் அவ்வப்போது தலைதூக்கும் என்றாலும், உங்கள் அனுபவமும், நற்செயல்களும் அவற்றைக் களைந்து விடும் அளவுக்கு கேது உதவி செய்வார். அபிவிருத்தி பணிகளுக்குரிய பணம் தடங்கலின்றி கிடைக்கும் என்பதால், பொன்னான காலகட்டம் தான். வியாபார வசதிக்காக புதிய வாகனம் வாங்கும் யோகம் பலருக்கும் இருக்கிறது.

பெண்கள்: பணிபுரியும் பெண்கள் அனுகூல சூழ்நிலை கிடைத்து பணியில் திறம்பட செயல்படுவர். பணி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் போன்ற நீண்டகால கோரிக்கைகளில் தகுந்த முன்னேற்றம் உண்டு. குடும்பபெண்கள் கணவரின் உடல்நலத்தில் அதிக கவனம் கொள்வது நலம். பணவரவு சீராக இருக்கும். புத்திரர்களை நல்வழியில் நடத்துவதில் ஆர்வமுடன் செயல்படுவீர்கள். சுயதொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள் மார்க்கெட்டிங் விஷயங்களுக்காக அடிக்கடி வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். இதில் சில இடைஞ்சல் கள் வந்தாலும், தொழில் நடத்த தேவையான பணவசதி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும் என்பதால், சிறுசிறு பிரச்னைகளை சமாளித்து வெற்றி பெற்று விடுவீர்கள்.

மாணவர்கள்: சிவில் இன்ஜினியரிங், கண் மருத்துவம், தொல்பொருள் ஆராய்ச்சி, தகவல் தொழில்நுட்பம், சினிமா, மாடலிங், தொழில்நுட்ப சாதனங்களை பழுதுநீக்குதல், ஆடை, ஆபரண வடிவமைப்பு, கால்நடை, அழகுக் கலை, சமயம், இசை, தத்துவம், வியாபார மேலாண்மை சார்ந்த மாணவர்கள் படிப்பில் தரத்தேர்ச்சி பெறுவர். இதர துறைகளில் படிப்பவர்கள் சுமாரான படிப்பையே வெளிப்படுத்துவர். கடுமையான உழைப்பே பலன் தரும். சக மாணவர்களின் கருத்துக்கு மதிப்பு தருவது நல்லது. பெற்றோர் உங்களிடம் அதிக எதிர்பார்ப்பு மனதுடன் நடந்துகொள்வர். அவர்களின் வழிகாட்டுதலை பெற்று செயல்படுவதால் நன்மை அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: கடந்த காலங்களில் செயல்படுத்திய சமூகப்பணியை மிஞ்சும் வகையில் இப்போது மிகுந்த ஆர்வமுடன் பணியாற்றுவீர்கள். ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடந்துகொள்வர். அவர்களிடம் நல்ல முறையில் செயல்பட்டு கூடுதல் நம்பிக்கையை பெறுவீர்கள். இதனால், பணச்செலவு அதிகமாகும் என்றாலும், வருமானமும் இருக்கும் என்பதால் தைரியமாக செலவிடுவீர்கள். எதிரிகளின் தொல்லை சற்றும் குறையாது. அவர்களைக் கண்காணித்து நடப்பதால் சிரமம் அணுகாத நல்ல நிலை ஏற்படும். புத்திரர்களால் தகுந்த உதவி உண்டு. அரசியலுடன் பிற தொழில் நடத்துபவர்கள், கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணியை திறம்பட நிறைவேற்றுவர். தொழில்வளம் சிறப்பாகும்.

விவசாயிகள்: விவசாய பணியை திறம்பட நிறைவேற்ற தேவையான பணவசதி கிடைக்கும். பயிர்வளம் சிறந்து மகசூல் அதிகரிக்கும். கால்நடைகள் அபிவிருத்தியும், அதனால் உபரி வருமானமும் கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி திட்டமிட்ட வகையில் நிறைவேறும்.

பரிகாரம்: சிவபெருமானை வழிபடுவதால் தொழில் வளர்ச்சித்திட்டம் நற்பலன் தரும்.

Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆணி 2021  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
27282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2021 Create a free website with uCoz