2008 ஏப்ரல் 9, காலை 8.29 மணி முதல் 2009 அக்டோபர் 29 வரை
அசுவினி, பரணி, கார்த்திகை 1
சுறுசுறுப்பாக செயல்படும் திறமை மிகுந்த மேஷராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு பத்தாம் இடத்தில் ராகுவும், நான்காம் இடத்தில் கேதுவும்
பெயர்ச்சியாகி உள்ளனர். ராகுவின் பார்வை ராசிக்கு 8, 12ம் இடத்திலும்,
கேதுவின் பார்வை ராசிக்கு 2 மற்றும் 6ம் இடத்திலும் பதிகிறது. ராகுவின்
அமர்வால் தொழிலில் வளர்ச்சி தரும் மாற்றங்களை செய்ய எண்ணம் கொள்வீர்கள்.
சகோதரர்கள் உற்ற துணையாக செயல்படுவர். சமூகத்தில் இருக்கும் நல்ல பெயர்
கெடுவதற்குரிய சூழ்நிலைகளை ராகு, கேது உருவாக்குவர். இதை தவிர்க்க
வெளிவட்டார பழக்க வழக்கங்களிலும், பொது இடங்களில் பேசும் போதும் கூடுதல்
கவனம் செலுத்தவும். வீடு, வாகன வகையில் நம்பகத்தன்மை இல்லாத எவருக்கும்
இடம் தரக்கூடாது. தாயின் தேவையை நிறைவேற்றுவதால் நன்மை உண்டு.
புத்திரர்களின் வளர்ச்சியில் அக்கறை கொள்வீர்கள். அவர்களும் தங்கள் தகுதி,
திறமையை வளர்த்து பெற்றோருக்கு பெருமை தேடித்தருவர். சொத்து, நிலம்
போன்றவை பரிபாலனம் செய்வதில் அதிக பாதுகாப்பு அவசியம். உறவினர்களிடம்
கருத்து வேறுபாடு ஏற்படும். எதிரிகளை வெல்வதற்கு உரிய தருணம் ஏற்படும்.
இருதயம் தொடர்பான நோய்கள் தாக்குவதற்குரிய கிரகநிலை இருக்கிறது. தியானம்
போன்ற பயிற்சிகளால் இதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். மனைவியின் அன்பும்
உதவியும் சிறந்து மன திடம் பெறுவீர்கள்.இடம் விட்டு இடம் மாறி வசிக்கும்
சூழ்நிலை ஏற்படும். நண்பர்கள் ஆதரவு மனப்பான்மையுடன் செயல்படுவர்.
தந்தைவழி உறவினர்களிடம் நல்லுறவும், தாய்வழி உறவினர்களிடம்
கருத்துவேறுபாடும் ஏற்படும் கிரக நிலை உள்ளது. தொழில் சார்ந்த வகையில்
உயர்வு பெறுவதற்கு அனுகூல தன்மை பரிபூரணமாக உள்ளது. சிக்கன பணச்செலவு
செய்து இயன்ற அளவு பணம் சேமிப்பீர்கள். வெளியூர் தொடர்பு நன்மையைத் தரும்.
தொழிலதிபர்கள்:
மோட்டார் வாகன உற்பத்தி, இயந்திரங்கள் சார்ந்த தொழில், எலக்ட்ரிக்கல்,
எலக்ட்ரானிக்ஸ், கிரானைட் கற்கள் உற்பத்தி, கட்டட, கட்டுமானப் பொருட்கள்,
மருத்துவ உபகரணங்கள், கார்மென்ட்ஸ், உணவுப் பொருட்கள், நவீன பர்னிச்சர்
வகை உற்பத்தி, ரியல் எஸ்டேட் தொழில் சார்ந்தவர்கள் வளர்ச்சி தரும்
வாய்ப்பு பெற்று தகுந்த முன்னேற்றம் பெறுவர். அனுபவஸ்தர்களின் ஆதரவு
கிடைக்கும். பணியாளர்கள் தகுந்த ஒத்துழைப்பு தருவர். புதிய கிளை
துவங்கவும், தொழில் இடமாற்றம் செய்யவும் அனுகூல தன்மை உண்டு.
பணியாளர்கள்:
அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள் திறமையுடன் செயல்பட்டு
தமக்கென தனிமுத்திரை பதிப்பர். பணி உயர்வு, பணியில் சலுகை போன்றவை எளிதில்
கிடைக் கும். வருமானம் எவ்வளவு வந்தாலும் செலவு அதிகரிக்கும்.
இருப்பினும், புத்தி நல்ல நிலையில் இருக்கும் என்பதால், சிக்கனமாக
இருந்து, பணத்தைக் காப்பாற்றுவீர்கள். சக பணியாளர்களுடன் கருத்துவேறுபாடு
விலகி நட்பு வளரும் என்றாலும், அவர்களுக்காக தேவையற்ற விஷயங்களுக்கு
பொறுப்பேற்று சிக்கலில் மாட்டிக்கொள்ளும் சிரமநிலையும் வரலாம். கடும் உறவு
கண்ணைக் கெடுக்கும் என்பார்கள். பட்டும் படாமலும் நடந்து கொள்ளவும்.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, அரிசி, மளிகை, விவசாய, மருத்துவ உபகரணங்கள், சமையலறை
சாதனங்கள், தானியங்கள், உணவு பண்டங்கள், எண்ணெய் வித்து, பழவகை,
உடற்பயிற்சி கருவி, இறைச்சி, எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்
உதிரிபாகங்கள், மருந்து, வாகன உதிரிபாகங்கள், தோல் பொருட்கள், கம்பளி ஆடை
விற்பனை செய்பவர்கள் தொழில் முன்னேற்றமும் சேமிக்கும் வகையில் பணவரவும்
பெறுவர். மற்றவர்களுக்கு வியாபாரம் சுமாராக இருக்கும் என்றாலும், கையைக்
கடிக்காது. புத்திரர்களின் தேவையை மனமுவந்து நிறைவேற்றுவீர்கள். இளம்
வியாபாரிகளுக்கு திருமண முயற்சி அனுகூல பலன் தரும்.
பெண்கள்:
பணிபுரியும் பெண்கள் உற்சாகமான மனநிலையுடன் செயல்புரிந்து சிறப்பான பலன்
களை அடைவர். பணத்தேவை எதிர்பார்த்த வகையில் இருக்கும். குடும்ப பெண்கள்
கணவரின் நல் அன்பை பெற்று இனிய வாழ்வுநலம் பெறுவர். ஆபரணச் சேர்க்கை
உண்டு. குடும்பத்தின் எதிர்கால தேவை கருதி செலவை குறைக்க வேண்டி வரும்.
இந்தக் கஞ்சத்தனத்தை வீட்டிலும், வெளியிலும் சிலர் கேலி செய்வர். அதுபற்றி
நீங்கள் கண்டு கொள்ள வேண்டாம். சுயதொழில், வியாபாரம் நடத்தும் பெண்கள்
அளவான மூலதனம் இட்டால் போதும். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும்.
ஆனாலும், லாப விஷயத்தில் ராகு- கேது கைவிட மாட்டார்கள்.
மாணவர்கள்:
இன்ஜினியரிங், தகவல் தொழில் நுட்பம், விவசாயம், மருத்துவம், தோட்டக்கலை,
ஆசிரியர் பயிற்சி, வங்கியியல், கேட்டரிங், கனரக வாகனம் இயக்குதல், நிதி
நிர்வாகம், சட்டம், விலங்கியல், இலக்கண, இலக்கிய ஆராய்ச்சி சார்ந்த
மாணவர்கள் தன்னம்பிக்கையை வளர்த்து தரத்தேர்ச்சி பெறுவர். மற்ற துறைகளில்
உள்ளவர்களுக்கும் பாதக நிலை ஏதும் இல்லை என்றாலும், கடுமையாக உழைக்க
வேண்டியிருக்கும். சுய தேவைகளை பூர்த்தி செய்வதில் சிக்கன பணச்செலவு
கடைபிடிக்கவும். நண்பர்களிடம் விலை மதிப்புள்ள பொருட்களை இரவல்
கொடுப்பதிலும், வாங்குவதிலும் பாதுகாப்புடன் செயல்படவும். தாயிடம்
கருத்துபேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பொறுமையாக இருக்கவும்.
அரசியல்வாதிகள்: சமூகத்தில்
கூடுதல் புகழைப்பெற புதியவர்கள் உதவி செய்வர். தாராள செலவு செய்யும்
சூழ்நிலை ஏற்படும். மக்களுக்கான பணியை நிறைவேற்ற அதிகாரிகளை உரிய வகையில்
அணுகி நன்மை பெறுவீர்கள். எதிரிகள் தங்கள் ஆதிக்கத்தை குறைக்கும் நேரம்
என்பதால், அரசியலில் தகுந்த முன்னேற்றம் ஏற்படும். புத்திரர்களின்
எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான கடமைகளை அக்கறையுடன் நிறைவேற்றுவீர்கள்.
அரசியலுடன் தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்கள் நம்பகமான பணியாளர்களின்
துணையால் தொழில் வளர்ச்சியும் பணவரவும் பெறுவர். பதவி பொறுப்பு
எதிர்பார்த்த வகையில் கிடைக்கும்.
விவசாயிகள்: பொருளாதார வசதி
அவ்வப்போது இடித்தாலும் சமாளித்து விடுவீர்கள். பயிர் பாதுகாப்பில்
கவனமுடன் செயல்படுவதால் உரிய மகசூல் கிடைக்கும். கால்நடைகளால் அதிக
வருமானம் கிடைக்கும். இதில் ஒரு பகுதியை தர்ம பணிகளுக்கு செலவழிப்பதால்,
அனைத்து வளமும் சீராக கிடைக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி திட்டமிட்ட
வகையில் நிறைவேறும்.
பரிகாரம்: அனந்தசயன பெருமாளை தரிசிப்பதால் சகல வளமும் பெறலாம்.