கலைமகள் செட்டிகுளம் வவுனியா செவ்வாய்
2025-07-01
3:28 AM

Welcome Guest | RSS Main | மீனம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

தமிழ் மாத ராசி பலன்


ஆனி மாதம்

மீனம்


பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி


பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு உதவும் மீனராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் சூரியன் உள்ளார். ராசிநாதன் குரு, விரய ஸ்தானத்தில் அதிசார வக்ரகதி பெற்றுள்ளார். இதனால் செயல்பாடுகளில் தேக்கம் ஏற்படும். கண்டிப்புடன் பேசுவதால் பலரது அதிருப்தியை சம்பாதிக்க நேரிடும். சகோதரர்கள் உதவிகரமாக நடந்துகொள்வர். வீடு, வாகன வகையில் திருடர் களால் இடையூறு ஏற்படலாம்.


புத்திரர்கள் வகையில் நல்ல பலன்களே நடக்கும். உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புண்டு. எதிரிகளால் தொல்லை ஏற்படும். கணவன், மனைவி ஒருமித்த கருத்துடன் நடந்து குடும்ப நலன் பேணுவர். பயணத்தின் போது மிதவேகமும், கடின பணிகளில் கூடுதல் பாதுகாப்பு நடைமுறையும் பின்பற்றுவது அவசியம். தொழிலதிபர்கள் தொழில் வளர புதிய முயற்சிகளை மேற்கொள்வர். அரசு வகை உதவி கிடைக்கும். பணியாளர்கள் கூடுதல் பணிச்சுமைக்கு உள்ளாவர். முக்கிய செலவினங்களுக்கு பணம் கிடைக்கும். வியாபாரிகள் அளவான வியாபாரமும் மிதமான பணவரவும் பெறுவர். குடும்பப் பெண்கள் குடும்பத்திற்கு தேவையான வளர்ச்சிப்பணியை கவனத்துடன் மேற்கொள்வர். பணச்செலவில் சிக்கனம் இருக்கும். பணிபுரியும் பெண்கள் தகுந்த ஆலோசனை பெற்று பணியை சிறப்புற உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவர். சுயதொழில் புரியும் பெண்கள் சந்தையில் கூடுதல் போட்டியை சந்திக்கும் நிலை உள்ளது.


சுமாரான பணவரவு கிடைக்கும். அரசியல்வாதிகள் போட்டு வைத்த திட்டங்களில் ஓரளவுக்கே வெற்றி கிடைக்கும். விவசாயிகள் அளவான மகசூலும் மிதமான பணவரவும் பெறுவர். மாணவர்கள் படிப்பில் உயர்வு பெற அனுகூல நிலை பலமாக உள்ளது.


உஷார் நாள்: 1.7.09 அதிகாலை 3.46 முதல் 3.7.09 பகல் 11.20 மணி வரை


வெற்றி நாள்: ஜூன் 25, 26


நிறம்: நீலம், சாம்பல்


எண்: 4, 8


பரிகாரம்: நாகராஜாவை வழிபடுவதால் பலவித நன்மைகள் ஏற்படும்.


Login form

Search

Calendar
«  ஆடி 2025  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz