கலைமகள் செட்டிகுளம் வவுனியா செவ்வாய்
2026-04-14
9:44 PM

Welcome Guest | RSS Main | மகரம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

தமிழ் மாத ராசி பலன்


ஆனி மாதம்

மகரம்


உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2


ஆன்மிக சிந்தனையுடன் செயல்களில் ஈடுபடும் மகரராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு ஆறாம் இடத்தில் சூரியன் மிகவும் அனுகூல நிலையில் உள்ளார். எனவே துவங்கும் செயல்கள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பேச்சில் கனிவு கூடும். சகோதர, சகோதரிகளின் வாழ்வு வளம்பெற இயன்ற உதவிபுரிவீர்கள். வீடு, வாகனத்தில் கூடுதல் பாதுகாப்பு நடைமுறையை பின்பற்ற வேண்டும்.

புத்திரர்கள் தகுதி, திறமையை வளர்த்து படிப்பில் முன்னேறுவர். உடல்நலம் பலம் பெறும். வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். சுபநிகழ்ச்சிகள் இனிதே நிறைவேறும். சான்றோர்களின் ஆதரவும் ஆசியும் கிடைக்கும். கணவன், மனைவி கருத்தொற்றுமையுடன் செயல்பட்டு குடும்பத்தில் மகிழ்ச்சி வளரச்செய்வர்.

தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணிகளை திறம்பட நிறைவேற்றுவர். தொழில் சிறந்து தாராள லாபம் கிடைக்கும்.


பணியாளர்கள் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நிர்வாகத்திடம் நற்பெயரும் சலுகையும் பெறுவர். வியாபாரிகள் கூடுதல் விற்பனையும் ஆதாய பணவரவும் காண்பர். குடும்பப் பெண்கள் உறவினர்களின் அன்பைப் பெற்று குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுப்பர். பணிபுரியும் பெண்கள் பணி உயர்வு, எதிர்பார்த்த சலுகை ஆகிய நற்பலன்களைப் பெறுவர். சுயதொழில் புரியும் பெண்கள் சந்தையில் போட்டி குறைந்து கூடுதல் வியாபாரமும், லாப விகிதமும் காண்பர்.


அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் நல்ல வரவேற்பும், அரசு தொடர் பான இனங்களில் அனுகூலமும் கிடைக்கும்.


விவசாயிகளுக்கு கூடுதல் மகசூலும் ஆதாய பணவரவும் கிடைக்கும். மாணவர்கள் படிப்பில் உயர்ந்து சாதனை புரிவர்.


உஷார் நாள்: 26.6.09 மாலை 6.36 முதல் 28.6.09 இரவு 10.12 மணி வரை


வெற்றி நாள்: ஜூன் 21, 22


நிறம்: மஞ்சள், நீலம்


எண்: 3, 8


பரிகாரம்: சூரியபகவானை வழிபடுவதால் சகல வளமும் கிடைக்கும்.


Login form

Search

Calendar
«  சித்திரை 2026  »
ஞாதிசெபுவிவெ
   1234
567891011
12131415161718
19202122232425
2627282930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2026 Create a free website with uCoz