கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-06-15
1:39 AM

Welcome Guest | RSS Main | தனுசு | Registration | Login
Site menu

Statistics

Total online: 11
Guests: 11
Users: 0

தமிழ் மாத ராசி பலன்


ஆனி மாதம்

தனுசு


மூலம், பூராடம், உத்திராடம் 1


உழைப்பே உயர்வு எனக்கருதும் தனுசுராசி அன்பர்களே!


இந்த மாதம் உங்கள் ராசிக்கு அநேக கிரகங்கள் அவ்வளவு சாதகமாக அமையவில்லை. மாத முற்பகுதியில் சுக்கிரனின் அருளால் மகிழ்ச்சி தரும் பலன்களைப் பெறுவீர்கள். பேச்சால் பிரச்னை வரும். பொது இடங்களில் பிறர் விவகாரத்தில் தலையிட்டால் சிக்கலில் மாட்ட நேரும். அடுத்தவர்கள் செய்த தவறுக்காக கண்டிப்புக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படும்.

வீடு, வாகனம் வகையில் பராமரிப்பு செலவு, பாதுகாப்பு குறைபாடு காரணமாக நஷ்டம் வரலாம். கவனம். புத்திரர் களால் பல பிரச்னைகளை சந்திக்க வாய்ப்புண்டு. உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்ய கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகும். வழக்கு விவகாரங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்படும். நண்பர்களிடமும் இதேநிலை தான். அவர்களின் செயல்பாடு கடும் அதிருப்தியைத் தரும். பணி நேரம் தவிர்த்து மற்ற சமயங்களில் இசை, தியானம் போன்றவற்றில் ஆர்வம் கொள்வது பிரச்னையைக் குறைக்கும்.



தொழிலதிபர்கள் நிர்வாகச்செலவு அதிகரிப்பால் அதிக லாபம் எதிர் பார்க்க இயலாது. பணியாளர்கள் கவனக்குறைவால் பணியில் குளறுபடியை சந்திக்க நேரிடும். சலுகைகளும் பெரிய அளவில் கிடைக்காது.



வியாபாரிகள் குறைந்த அளவு வியாபாரத்தால் பணப்புழக்கம் இல்லாமல் சிரமப்படுவர். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு திண்டாட நேரிடும்.



பணிபுரியும் பெண்கள் கூடுதல் பணிச்சுமையால் உடல்நலக்குறைவுக்கு உட்படுவர். சுயதொழில் புரியும் பெண்கள் சந்தையில் போட்டியைச் சந்திப்பர். குறைந்த லாபமே கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் கண்டிப்புக்கு ஆளாக நேரிடும். விவசாயிகள் மகசூலுக்காக கூடுதல் பணத்தேவைக்கு உட்படுவர். மாணவர்கள் படிப்பில் மந்தநிலை காணப்படும்.


உஷார் நாள்: 24.6.09 மாலை 4.06 முதல் 26.6.09 மாலை 6.36 மணி வரை


வெற்றிநாள்: ஜூன் 18, 19, ஜூலை 16


நிறம்: ரோஸ், சிவப்பு


எண்: 1, 9


பரிகாரம்: மீனாட்சிஅம்மனை வழிபடுவதால் சிரமம் விலகி நன்மை ஏற்படும்.


Login form

Search

Calendar
«  ஆணி 2025  »
ஞாதிசெபுவிவெ
1234567
891011121314
15161718192021
22232425262728
2930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz