கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-06-15
1:01 AM

Welcome Guest | RSS Main | விருச்சிகம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 11
Guests: 11
Users: 0

தமிழ் மாத ராசி பலன்

ஆனி மாதம்

விருச்சிகம்


விசாகம் 4, அனுஷம், கேட்டை


எடுத்த முடிவை செயல்படுத்தியே தீரவேண்டும் என்பதில் அக்கறையுள்ள விருச்சிகராசி அன்பர்களே!


உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஆறாம் இடத்தில் ஆட்சி பலத்துடன் அனுகூலமாக உள்ளார். குடும்பத்தின் முக்கிய தேவைகளை நிறைவேற்ற முன்னுரிமையுடன் செயல்படுவீர்கள். பணவரவில் திருப்திகரமான நிலை உண்டு. நண்பர், உறவினர்கள் எதிர்பார்ப்புடன் செயல்படுவர். சமூகப்பணியில் குறைந்த அளவில் ஈடுபாடு இருக்கும். வாகன பராமரிப்பு பணச்செலவு உருவாகும். நம்பகத்தன்மை குறைவானவர்களுக்கு எந்த வகையிலும் பொறுப்பு ஏற்கக்கூடாது.



புத்திரர்களின் செயலில் ஏற்படும் குறைகளை சரிசெய்வீர்கள். ஆன்மிகப்பயணம் சென்று வர வாய்ப்பு கிடைக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும்.



அரசு தொடர்புடைய செயல்பாடுகள் நிறைவேற தாமதமாகும். கணவன், மனைவி ஒற்றுமையில் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு. நண்பர்களுடன் தேவையற்ற விவாதம் ஏற்படும். வெளியூர் பயணத்தின் போது செலவு அதிகரிக்கும்.


தொழிலதிபர்கள் நிர்வாக சீர்திருத்தம் செய்வதால் தொழிலில் வளர்ச்சித்தன்மை ஏற்படும். பணியாளர்கள் உற்சாகமற்ற நிலையால் அதிகாரிகளின் கோபத்துக்கு ஆளாக நேரும். வியாபாரிகள் சீரான வியாபாரம் அமையப்பெற்று ஓரளவு லாபம் அடைவர். குடும்பப் பெண்கள் வீட்டுச்செலவுக்கு திண்டாட நேரிடும். கணவருடன் கருத்து வேறுபாடு தோன்றும். பணிபுரியும் பெண்களுக்கு வேலையில் தொய்வு ஏற்பட்டு, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு ஆளாக நேரும். சுயதொழில் புரியும் பெண்கள் கடுமையாக உழைத்தாலும் ஓரளவே லாபமடைவர்.


அரசியல்வாதிகள் பிறர் விவகாரங்களில் சமரசம் செய்ய முயற்சித்து சிக்கலில் மாட்டுவர். விவசாயிகளுக்கு மகசூல் ஓரளவே இருக்கும். மாணவர்கள் சுமாராகப் படிப்பர். படிப்புச் செலவுக்கும் திண்டாட்டமாக இருக்கும்.


உஷார் நாள்: 22.6.09 பகல் 1.40 முதல் 24.6.09 மாலை 4.06 மணி வரை


வெற்றிநாள்: ஜூலை 13, 14


நிறம்: பச்சை, சாம்பல்


எண்: 4, 5


பரிகாரம்: பெருமாளை வழிபடுவதால் தொழில் சிறந்து எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.


Login form

Search

Calendar
«  ஆணி 2025  »
ஞாதிசெபுவிவெ
1234567
891011121314
15161718192021
22232425262728
2930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz