கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-06-15
0:50 AM

Welcome Guest | RSS Main | துலாம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 4
Guests: 4
Users: 0

தமிழ் மாத ராசி பலன்


ஆனி மாதம்

துலாம்


சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3


நியாயத்திற்கு கட்டுப்பட்டு நடக்கும் துலாம்ராசி அன்பர்களே!


உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 7, 8 ஆகிய இடங்களில் பிரவேசிக் கின்றனர். குருவும், சனி பகவானும் அனுகூல பலன்களை தரும் இடங்களில் உள்ளனர். வரவை விட செலவு கூடுதலாக இருக்கும். பொது இடங்களில் நடக்கும் பிரச்னைகளில் தலையிட்டால் வில்லங்கம் ஏற்படும். வீடு, வாகன வகையில் இருப்பதைத் தக்க வைத்துக் கொண்டாலே போதும். பராமரிப்பு பணிகளை துவங்காமல் இருப்பது நல்லது. புத்திரர்கள் நல்லவிதமாக நடந்து படிப்பில் முன்னேற்றம் பெறுவர். உடல்நிலை சுமாராக இருக்கும்.


தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்துகொள்வர். நண்பர்களிடம் பணவிஷயத்தில் அதிருப்தி ஏற்படலாம். தந்தைவழி உறவினர்கள் கருத்து வேறுபாடு கொள்ளும் சூழ்நிலை உருவாகும். தொழிலதிபர்கள் சராசரி உற்பத்தியும் மிதமான அளவில் பணவரவும் பெறுவர். பணியாளர்கள் கவனக்குறைவான செயலால் பணியில் குறைபாடும் நிர்வாகத்தின் கண்டிப்பையும் சந்திக்கும் நிலைமை ஏற்படும்.


வியாபாரிகள் குறைந்த அளவில் வியாபாரமும் கூடுதல் பணச்செலவிற்கும் உட்படுவர். குடும்பப் பெண்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளவே செலவுக்கு திண்டாடுவர். பணிபுரியும் பெண்கள் நிலுவைப்பணியை அக்கறையுடன் நிறைவேற்றுவதால் பணியிடத்தில் நற்பெயர் கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் புதிய சந்தை வாய்ப்புகளை பெற அதிக அளவில் முயற்சிக்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பணிச்சுமையும் செலவும் இருக்கும். விவசாயிகளுக்கு சுமாரான மகசூலும் கால்நடை வகையில் மருத்துவ செலவும் ஏற்படும். மாணவர்கள் சுமாராகப் படிப்பர்.

உஷார் நாள்: 20.6.09 பகல் 10.30 முதல் 22.6.09 பிற்பகல் 1.40 மணி வரை


வெற்றி நாள்: ஜூன் 15, ஜூலை 11, 12


நிறம்: சந்தனம், வெள்ளை


எண்: 3, 6


பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடுவதால் உடல் நலம் ஆரோக்கியம் பெறும்.


Login form

Search

Calendar
«  ஆணி 2025  »
ஞாதிசெபுவிவெ
1234567
891011121314
15161718192021
22232425262728
2930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz