கலைமகள் செட்டிகுளம் வவுனியா புதன்
2025-07-09
2:54 PM

Welcome Guest | RSS Main | கடகம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

தமிழ் மாத ராசி பலன்
ஆனி மாதம்

கடகம்


புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்


புதுப்புது சிந்தனைகளுக்கு சொந்தக்காரர்களான கடகராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு அனுகூலம் தருகின்ற கிரகமாக சுக்கிரன் ஒருவரே உள்ளார். மற்ற கிரகங்கள் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தும் நிலையில் உள்ளனர். செயலில் நேர்த்தியும் திட்டமிடுதலும் இல்லாமல் போனால் பல பிரச்னைகள் ஏற்படும். பேச்சில் கடுமையும், நிதானமின்மையும் அதிகரிக்கும். பணத்தட்டுப்பாடு ஒருபுறமிருக்க செலவு அதிகரிக்கும்.


வீடு, வாகன வகையில் திருப்திகரமான நிலை உண்டு. புத்திரர் களால் தேவையற்ற சிரமங்கள் வருகின்ற சூழ்நிலை இருக்கிறது. கடந்த காலத்தில் கவனக்குறைவாக நடந்துகொண்ட சில செயல்களுக்கான பலாபலனை இந்த மாதம் அனுபவிக்கும் கிரகநிலை உள்ளது. உடல்நலமும் சீராக இராது. கணவன், மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நண்பர்களிடம் உதவி கேட்டால் கிடைக்காது. அவர்கள் உதவி கேட்டாலும் உங்களால் செய்ய இயலாது.

தொழிலதிபர்கள் சராசரி உற்பத்தியும், கடந்த மாதத்தை விட குறைந்த லாபமும் பெறுவர். பணியாளர்கள் மந்தமாகச் செயல் பட்டு அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாவர். வியாபாரிகள் கடுமையாக உழைக்குமளவுக்கு லாபம் இல்லையே என வருந்துவர். குடும்பப் பெண்கள் குடும்பத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான பணவரவில் சுணக்கம் காண்பர்.


பணிபுரியும் பெண்கள் பணியில் குறைபாட்டையும், நிர்வாகத்தின் அதிருப்தியையும் சந்திக்க நேரிடும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு அதிக லாபம் எதிர்பார்ப்பதற்கு இல்லை.


அரசியல்வாதிகள் பகட்டான தோற்றத்தினால் ஆதரவாளர்களின் சிந்தனையில் இடம் பிடிப்பர். விவசாயிகளுக்கு சீரான மகசூல் கிடைக்கும். மாணவர்கள் கூடுதல் பயிற்சியினால் தரத்தேர்ச்சியில் முன்னேற்றம் பெறலாம்.


உஷார் நாள்: 15.6.09 காலை 6 முதல் 15.6.09 இரவு 10.36 மணி வரை மற்றும் 10.7.09 இரவு 8.24 முதல் 13.7.09 காலை 6.10 மணி வரை


வெற்றி நாள்: ஜூலை 4, 5


நிறம்: சாம்பல், பச்சை


எண்: 3, 8


பரிகாரம்: சனீஸ்வரரை வழிபடுவதால் சகல வளமும் பெறலாம்.


Login form

Search

Calendar
«  ஆடி 2025  »
ஞாதிசெபுவிவெ
  12345
6789101112
13141516171819
20212223242526
2728293031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz