கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2025-06-15
1:16 AM

Welcome Guest | RSS Main | மேஷம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 9
Guests: 9
Users: 0

தமிழ் மாத ராசி பலன்
ஆனி மாதம்
மேஷம்
அசுவினி, பரணி, கார்த்திகை 1

தன்னைச்சார்ந்தவர்களும் நன்றாக வாழ வேண்டுமென்ற எண்ணமுள்ள மேஷராசி அன்பர்களே!


உங்கள் ராசிநாதன் செவ்வாய் ராசியில் சுக்கிரனுடன் உள்ளார். இதனால் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளை நிறைவேற்ற உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். பேச்சில் இனிமை வளரும். எதிர்பார்த்த வகையில் பணவரவு கிடைக்கும்.


சமூகத்தில் அந்தஸ்து உயரும். புதிய திட்டங்கள் நல்லபடியாக நடந்தேறும். வீடு, வாகன வகையில் வளர்ச்சி உண்டு. புத்திரர்கள் தங்கள் செயல்திறனை வளர்த்து படிப்பிலும், ஒழுக்கத்திலும் சிறந்து விளங்குவர். உடல்நலம் பலம் பெறும். வழக்கு, விவகாரத்தில் வெற்றி கிடைக்கும். தம்பதியர் ஒற்றுமையுடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்துவர். நண்பர்களும் நல்லவிதமாக நடந்துகொள்வர். தொழிலதிபர்கள் அபிவிருத்தி பணியை எளிதில் நிறைவேற்றுவர். ஆதாய பணவரவு கிடைக்கும்.


பணியாளர்கள் திறம்பட பணியாற்றி நிர்வாகத்தின் பாராட்டையும் சலுகையையும் பெறுவர். வியாபாரிகள் கூடுதல் சந்தை வாய்ப்பு கிடைத்து அதிக லாபம் காண்பர். குடும்பப் பெண்கள் கணவரின் அன்பும், தாராள பணவசதியும் கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். பணிபுரியும் பெண்கள் பணியிடத்தில் சுமூகச் சூழ்நிலை அமைந்து நிலுவைப்பணியை பூர்த்தி செய்வர். பணி உயர்வு, இடமாற்றம் போன்றவற்றை எளிதில் பெறலாம். சுயதொழில் புரியும் பெண்கள் கூடுதல் பொருள் உற்பத்தியும் தாராள விற்பனையும் காண்பர். அரசியல்வாதிகளுக்கு புதிய பதவி தேடி வரும். விவசாயிகள் நல்ல மகசூலும் எதிர்பார்த்த பணவரவும் பெறுவர். மாணவர்களின் படிப்பிற்கு தேவையான பணவசதி கிடைக்கும். சிறப்பாகவும் படிப்பர்.


உஷார் நாள்: 3.7.09 பகல் 11.20 முதல் 5.7.09 இரவு 9.26 மணி வரை.


வெற்றி நாள்: ஜூன் 27, 28


நிறம்: சிவப்பு, ஆரஞ்ச்


எண்: 1, 9


பரிகாரம்: லட்சுமி தாயாரை வழிபடுவதால் தொழில் சிறந்து பணவரவு அதிகரிக்கும்.


Login form

Search

Calendar
«  ஆணி 2025  »
ஞாதிசெபுவிவெ
1234567
891011121314
15161718192021
22232425262728
2930

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2025 Create a free website with uCoz