கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு
2020-08-09
4:01 PM

Welcome Guest | RSS Main | மீனம் | Registration | Login
Site menu

Statistics

Total online: 1
Guests: 1
Users: 0

குருபெயர்ச்சி பலன்கள்

மீனம்(80/100) + குடும்ப ஒற்றுமை, - வேண்டாத ஆசை


குரு பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர ராசிக்கு பெயர்ந்து. 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.


பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி


கடின உழைப்பால் வாழ்வில் முன்னேறத்துடிக்கும் மீனராசி அன்பர்களே!


உங்கள் ராசிக்கு பதினொன்றாம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி உள்ளார். உங்களுக்கு நிறைவான ஆதாய பலன்களை தரும்வகையில் இந்த குரு பெயர்ச்சி அமைந்துள்ளது. குருபகவான் தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் முறையே ராசிக்கு 3, 5, 7 ஆகிய இடங்களை பார்க்கிறார். வெகுகாலம் திட்டமிட்ட எண்ணங்களை செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் தழைத்திடும்.


இளையசகோதரர்கள் உங்களிடம் அதிக மதிப்பு மரியாதையுடன் நடந்து கொள்வர். புத்திரர்கள் படிப்பில் முன்னேற்றமும் பெற்றோருக்கு பெருமையும் தேடித்தருவர். இருக்கும் சொத்துக்களில் வளர்ச்சியும் புதிய சொத்துக்களை வாங்குவதுமான நற்பலன் உண்டு. குலதெய்வ அருள் நல்லபடியாக இருக்கும். உடல்நிலை நன்றாக இருக்கும். எதிரிகளால் இருந்த தொல்லை நீங்கும். கடனை பெருமளவில் சரிசெய்வீர்கள். கணவன், மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். சுபநிகழ்வுகள் தடையின்றி நடக்கும். நண்பர்கள் உதவிகரமாக செயல்படுவர். மூத்த சகோதரர்கள் உங்களைக் கண்டித்து வழி நடத்துவர். வெளியூர் பயணத்தால் குறைந்த பலனும் கூடுதல் செலவும் ஏற்படும்.


மே, ஜூன், ஜூலை மாதங்களில் மேற்கண்ட பலன்களின் அளவு சற்று குறையக்கூடும். சில முயற்சிகளை எடுத்து அதற்காக பலமுறை பயணம் செய்து பணஇழப்பு நேரிடும். உங்கள் ராசிநாதன் நீச்ச கதியில் செல்வதால் உங்கள் பணத்தை சில போலி நிறுவனங்களிடம் முதலீடு செய்து அவற்றை இழக்க நேரிடும். அளவுக்கு மீறிய ஆசையால் பங்குச்சந்தை புரோக்கர்கள் மூலமாகவும் தரமற்ற கம்பெனிகளில் முதலீடு செய்து இழக்க நேரிடலாம். ஒரு சிலர் உங்களை சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுத்தி லாபம் பெற அழைப்பர். இதனால் பல சிரமங்களை நீங்கள் சந்திக்க வேண்டி வரும். இந்த மூன்று மாதங்களும் மிகவும் கவனமாக நடந்து கொள்ளுங்கள். பணியிடங்களிலும், தொழில் நிறுவனங்களிலும் கூட சில பிரச்னைகள் வரலாம்.


தொழிலதிபர்கள்: கல்விநிறுவனம், நிதிநிறுவனம், ஏற்றுமதி, இறக்குமதி, பங்குச்சந்தை சார்ந்த தொழிலில் உள்ளவர்களும், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், விளையாட்டு சாதனங்கள், சமையல் எண்ணெய், உணவு பண்டங்கள், கட்டுமானப் பொருட்கள் சார்ந்த தொழிலில் உள்ளவர்கள் அதிக உற்பத்தியும் புதிய ஒப்பந்தமும் கிடைத்து தொழிலில் வளர்ச்சி பெறுவர். லாபம் நன்றாக இருக்கும். பிற தொழில் சார்ந்தவர்கள் இவர்களை விட கூடுதல் லாபமடைவர்.


பணியாளர்கள்: அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலையில் உற்சாகம் ஏற்படும். சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். நிர்வாகத்தின் அன்பை பெறுவீர்கள். சம்பள உயர்வு மட்டுமின்றி எதிர்பாராத சில சலுகைகளும் வந்து மனதை மகிழ்விக்கும்.


வியாபாரிகள்: நகை, ஜவுளி, பர்னிச்சர், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வீட்டு உபயோகப் பொருட்கள், மளிகை, பிளாஸ்டிக், கட்டுமானப் பொருட்கள், உணவு பண்டங்கள், பேக்கரி, ஸ்டேஷனரி, மீன், இறைச்சி, குளிர்பானம், உடற்பயிற்சி கருவிகள், விளையாட்டு சாதனங்கள், பீங்கான் வியாபாரம் செய்பவர்கள் கூடுதல் லாபம் பெறுவர். புதிய கிளை துவங்கும் முயற்சி இனிதாக நிறைவேறும். எந்தவகை வியாபார பிரிவினருக்கும் இது வளம் தருகிற காலம்தான். புதிதாக வியாபாரம் துவங்கியவர்களுக்கு சக தொழில் சார்ந்த நண்பர்கள் வியாபார நுணுக்கங்களை சொல்லித்தந்து உதவிகரமாக இருப்பர்.


பெண்கள்: அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் பெண்கள் பணியிடங்களில் அனுகூல நிலை அமைந்து பணி இலக்கை திறம்பட நிறைவேற்றுவர். பதவி உயர்வு, விண்ணப்பித்த கடன், விரும்பிய இடமாற்றம் போன்ற அனுகூல பலன்கள் கிடைத்து மகிழ்வர். குடும்பப் பெண்கள், கணவரின் அன்பையும் பாசத்தையும் பரிபூரணமாக பெறுவர். பணவசதி சீராக இருக்கும். புத்திரப் பேறு விரும்புபவர்களுக்கு குருவருளால் அனுகூல பலன் உண்டு. உறவினர் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் உரிய கவுரவம் பெறுவீர்கள். பொன், பொருள் சேர்க்கை எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். சுயதொழில் நடத்தும் பெண்கள் கூடுதல் மூலதனத்துடன் தொழில் அபிவிருத்தி பணியை நிறைவேற்றுவர். அதிக வாடிக்கையாளர் கிடைத்து தொழில் வளர்ச்சி சிறக்கும். லாப விகிதமும், ஆதாய பணவரவும் பெறுவீர்கள்.


மாணவர்கள்: ஆசிரியர் பயிற்சி, கம்ப்யூட்டர், எம்.சி.ஏ., பிசினஸ் மேனேஜ்மென்ட், இசை, நடனம், மாடலிங், சட்டம், இன்ஜினியரிங், தகவல் தொழில்நுட்பம், கேட்டரிங், மருத்துவம், நிதி நிர்வாகம், ஆடிட்டிங், ஏரோநாட்டிக்கல், மரைன், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., விவசாயம், இலக்கியம், ஜர்னலிசம் படிக்கும் மாணவர்கள் கவனத்துடன் படித்து நல்ல தரதேர்ச்சி பெறுவர். படிப்பைத் தவிர பொழுதுபோக்கு விஷயங்களுக்கு பணத்தைச் செலவிடும் மனநிலை உண்டாகும். கவனம். படிப்பை நிறைவு செய்யும் நிலையில் உள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.


அரசியல்வாதிகள்: ஆர்வத்துடன் உங்கள் பணியை செயல்படுத்துவீர்கள். உங்கள் மீது நல்லெண்ணம் கொண்டவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். சமூகத்திலும் அரசியலிலும் புதிய பதவி பொறுப்புகள் வரப்பெறுவீர்கள். ஆதரவாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற அனுகூல கிரகநிலை இருக்கிறது. எதிரிகளுக்கும் உதவுகின்ற நிலையை குருபகவான் ஏற்படுத்தி தந்து, அவர்கள் மூலமும் பலனடைவீர்கள். உங்களின் அரசியல் பணி சிறக்க புத்திரர்களும் தங்களது பங்களிப்பை மனமுவந்து வழங்குவர்.


விவசாயிகள்: ஆர்வத்துடன் வேலை செய்து பயிர் வளர்ப்பில் முன்னேற்றம் அடைவீர்கள். மகசூல் அதிகரித்து தாராள பணவரவு கிடைக்கும். சிலருக்கு முன்மாதிரியான விவசாய பணிபுரிபவர் என்கிற நற்பெயரும் ஏற்படும். கால்நடை வளர்ப்பினாலும் வரவு அதிகரிக்கும். நிலம் தொடர்பான விவகாரங்கள் ஏற்படலாம்.


நீங்கள் செய்ய வேண்டியது: கும்பகோணத்திலுள்ள ராமசுவாமி (ராமர்)கோயிலுக்கு சென்று ராம சகோதரர்களை வழிபட்டு வந்தால் நற்பலன்கள் மேலும் பெருகும். கீழ்க்கண்ட பாடலை 11 முறை பாராயணம் செய்யவும்


நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே


தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே


ஜென்மமும் மரணமும் இன்றித்தீருமே


இம்மையே ராம என்ற இரண்டெழுத்தினால்

Login form
Login:
Password:

Search

Calendar
«  ஆவணி 2020  »
ஞாதிசெபுவிவெ
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031

Guest Register


Copyright கலைமகள் செட்டிகுளம் வவுனியா © 2020 Create a free website with uCoz