கும்பம் |
(40/100) + குழந்தைகளால் பெருமை, - நற்பெயருக்கு களங்கம் குரு
பகவான் வரும் டிசம்பர் 6 காலை 6மணிக்கு, தனுசுராசியில் இருந்து மகர
ராசிக்கு பெயர்ந்து 2009 டிசம்பர் 8 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார். அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3 துவங்கும் செயலை மனப்பூர்வமுடன் நிறைவேற்றும் கும்பராசி அன்பர்களே! உங்கள்
ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் மகரராசிக்கு குருபகவான் பெயர்ச்சியாகி
உள்ளார். குருவின் 5, 7, 9 பார்வைகள் முறையே ராசிக்கு 4, 6, 8 ஆகிய
இடங்களில் பதிகிறது. குரு அமர்ந்த இடத்தை விடவும் குருவின் பார்வை பெறுகிற
இடங்கள்தான் உங்களுக்கு ஓரளவு பலனை வழங்க உள்ளது. இன்னும்
ஒரு விசேஷம். பொதுவாக, குரு பகவான் தனது வக்ர காலத்தில் தான் அமர்ந்த
ராசிக்கு முந்தைய ராசிக்குத் தான் செல்வார். இம்முறை, அதிசாரம் என்ற
முறையில் முன்னோக்கி உங்கள் ராசியில் வந்து அமரப் போகிறார். அதாவது
மகரத்தில் அமர்ந்த குரு, மே முதல் மூன்றரை மாதங்கள் உங்கள் ராசியில்
இருப்பார். இந்த நிலையும் உங்களுக்கு கூடுதல் சிரமங்களை ஏற்படுத்தும். சிந்தனைகள்
மனதை சஞ்சலப்படுத்தும். உங்கள் நலனில் அக்கறை உள்ளவர்களின் ஆலோசனையை
பெற்று செயல்பட்டால் சிரமங்களைக் குறைத்துக் கொள்ளலாம். பேச்சில் கடுமை
கூடும். பணத்துக்கு தட்டுப்பாடாக இருக்கும். உங்கள் நற்பெயருக்கு களங்கம்
ஏற்பட வாய்ப்புண்டு. கவனம். இளைய சகோதரர்களிடம் பாசம் அதிகரிக்கும். வீடு,
வாகன வகையில் மகிழ்ச்சி தரும் அனுகூல பலன் குருவருளால் உருவாகும். வீடு
கட்டும் கடன் எளிதாக கிடைக்கும். தாயின் அன்பும் ஆசியும் பலமாக
பெறுவீர்கள். பயணங்கள் இனிமை தருவதாக அமையும். புத்திரர்களால் சிறப்பு
ஏற்படும். அதே நேரம் அவர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். குலதெய்வ
வழிபாடு சிறப்பாக நடக்கும். பூர்வசொத்தில்
வருமானம் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்பதால், உங்கள் கண்காணிப்பு
அவசியம். சொத்து சம்பந்தமான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது நல்லது.
உடல்நலம் சுமாராகத்தான் இருக்கும். சாப்பாடு, மருந்து விஷயத்தில் மிக மிக
கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் இருந்த தொல்லை குறையும். வழக்கு
விவகாரத்தில் அனுகூல தீர்வு கிடைக்கும். குடியிருக்கும் வீடு மாற்றம்
ஏற்படும். கணவன், மனைவி ஒற்றுமையில் பாதிப்பு இருந்தாலும்
விட்டுக்கொடுத்து சென்றால் சரியாகி விடும். நண்பர்களுடனும் உரசல் ஏற்படும். மே
முதல் ஜூலைக்குள் சிறுவிபத்துகளுக்கு ஆளாக நேரிடும். வீண் அலைச்சல்
ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் மிகுந்த கவனம் வேண்டும். சுபநிகழ்வுகள்
விஷயத்தில் தடைகள் ஏற்பட்டு நீங்கும். தொழிலதிபர்கள்:
ஆஸ்பத்திரி, கல்வி நிறுவனம், ரியல் எஸ்டேட், லாட்ஜ் நடத்துவோர்,
ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், இரும்பு, காகிதம், குளிர்பானம், உணவு
பண்டங்கள், மின்சாதனப் பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலதிபர்களுக்கு
பொருட்களின் தரம் தொடர்பான பிரச்னை ஏற்பட்டு விற்பனை சரிய வழியுண்டு.
பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் கூடுதல் செலவு ஏற்படும். மற்ற
தொழிலதிபர்களுக்கும் ஏறத்தாழ இதே நிலையே. தொழிலை தக்க வைக்க சற்று
போராட்டமாகத்தான் இருக்கும். வியாபாரிகள்:
நகை, ஜவுளி, பழம், உணவு பண்டங்கள், மளிகை, விவசாய இடுபொருட்கள்,
பர்னிச்சர், வீட்டு உபயோக சாதனங்கள், காய்கறி, ஸ்டேஷனரி, பிளாஸ்டிக்
பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், வாசனை திரவியங்கள், மருந்து,
பீங்கான், ரெடிமேட் ஆடை, தோல், ரப்பர் பொருட்கள், இறைச்சி, மீன்
வியாபாரிகள் மந்தநிலை காண்பர். மற்றவர்களின் நிலையும் ஏறத்தாழ இதே தான்.
மனச்சோர்வும் வியாபார நிறுவனம் களையிழக்கும் தன்மையும் உருவாக
வாய்ப்புண்டு. பணியாளர்கள் மீது உங்கள் பார்வை இருக்கட்டும். பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு சக ஊழியர்களால் பிரச்னை
ஏற்படும். குழப்பமான சிந்தனையினால் பணியில் குளறுபடி ஏற்படும்.
நிர்வாகத்தின் கண்டிப்புக்கு ஆளாவதுடன் ஒழுங்கு நடவடிக்கைக்கும்
உட்படுவீர்கள். இயந்திரங்களை கையாளுபவர்கள், மின்சாரம், போக்குவரத்து
சார்ந்த பணியிலுள்ளவர்கள் கண்ணும் கருத்துமாக தமது பணியை மேற்கொள்ள
வேண்டும். கண் இமைக்கும் நேரத்தில் விபத்து ஏற்படலாம். கவனம்.
உடைமைகளுக்கு இழப்பு ஏற்படும். பெண்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரியும் பெண்களுக்கு பணயில் உற்சாகம்
குறையும். சக பணியாளர்களின் குறுக்கீடு அதிகமாக இருக்கும். நிர்வாகத்தின்
வழிகாட்டலை சரிவர நிறைவேற்றுவதால் மட்டுமே ஒழுங்கு நடவடிக்கைக்கு
உட்படாமல் தவிர்க்கலாம். குடும்ப பெண்களக்கு ஆடம்பர செலவாலும், கணவரின்
சம்மதமின்றி வாங்கும் கடனாலும் குடும்பத்தில் சச்சரவு ஏற்பட கிரகநிலை
உள்ளது. கவனம் தேவை. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன்
இருப்பதைப் பாதுகாத்தாலே போதும். மாணவர்கள்:
மருத்துவம், ரசாயனம், பவுதிகம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்,
கேட்டரிங், தகவல் தொழில்நுட்பம், பிரின்டிங் டெக்னாலஜி, லேப் டெக்னீஷியன்
பயிற்சி மாணவர்கள் படிப்பில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க குருவின்
நல்லருள் பலமாக உள்ளது. உங்கள் ராசிக்கு நான்காம் இடமான கல்வி ஸ்தானத்தை
குருபகவான் தனது ஐந்தாம் பார்வையால் பலமாக பார்க்கிறார். இதனால் படிப்பில்
சிறந்த சாதனை புரிவீர்கள். ஏரோநாட்டிக்கல், இன்ஜினியரிங், சட்டம், மரைன்,
கம்ப்யூட்டர், ஆடிட்டிங், விவசாயம் ஆகிய துறை சார்ந்த மாணவர்களும்
படிப்பில் சிறந்து தனி முத்திரை பதிப்பர். படிப்புக் கான பணச்செலவு
திட்டமிட்டதை விட கூடுதலாகும். அரசியல்வாதிகள்:
அரசியல் பணியில் குறுக்கீடு வந்து விலகும். ஆதரவாளர்களால் அதிக செலவு
ஏற்படும். தேவையற்ற வாக்குறுதிகளால் வழக்கு, விவகாரம் என அலைய வேண்டிய
நிலைமை இருக்கும். எதிரிகளை விட உடனிருந்து இடையூறு செய்பவர்களின்
எண்ணிக்கை அதிகரிக்கும். விவசாயிகள்: பயிர் வளர்ப்பில் அதிக செலவு ஏற்படும். மகசூலும் எதிர்பார்ப் பைவிட குறைந்த அளவில் கிடைக்கும். கால்நடைகளால் ஓரளவு லாபமுண்டு. நீங்கள் செய்ய வேண்டியது:
கும்பகோணம் அருகிலுள்ள பட்டீஸ்வரம் துர்க்கையை வழிபட கெடுபலன்கள்
வெகுவாகக் குறையும். கீழ்க்கண்ட பாடலை தினமும் 11 முறை பாராயணம் செய்யவும். பயிரவி பஞ்சமி பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர் உயிரவி உண்ணும் உயர்சண்டி காளி ஒளிரும் கலா வயிரவி மண்டலி மாலினி சூலி வராகி என்றே செயிரவி நான்மறை சேர்திரு நாமங்கள் செப்புவரே. |